தேடல்-60

258 14 0
                                    


அம்ரூ மனநிலையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை பதிலேதும் சொல்ல முடியாமல் தவித்தவள் சமாளித்தபடி,"ஏன் உங்களுக்கு தெரியாதா!!?"

ராமனும் விடுவதாய் இல்லை,"தெரிஞ்சா கேட்பனா...சொல்லு...?"

அம்ரூ,"இல்லை உங்களுக்கு தெரியும்..!!!"

ராமன்,"தெரிஞ்சாலும் பராவாயில்ல சொல்லு !உன் வாயிலிருந்து நான் கேட்கனும்!!"

அம்ரூ,"என்ன சொல்ல சொல்லுறீங்க!!ஹாஸ்பிடல ...! இப்படி ஒரு நிலைமையில..!உங்க கிட்ட என்ன சொல்லனுன்னு எதிர்பார்க்கறீங்க!!?" என்று சற்று முறுக்க

ராமன் சற்று தனிந்தவனாய்,"ஓஓ அப்படி சொல்லுறியா..!!?சரி...!அப்போ இது மட்டும் சொல்லு !?உன் பக்கத்துல வந்து உட்கார எனக்கு மட்டும் தான உரிமை இருக்கு!!?"

அம்ரூ மனத்திற்குள் ,ஆமாம் எல்லாம் பண்ணிட்டு இப்போ பக்கத்தில உட்கார இவ்வளவு கேள்வி என்று முணற ,என்னது ? என்றவனிடம் புன்னகைத்தபடி ,"நான் உட்கார சொல்லிட்டேன் !!அதுக்கு மேல உங்க இஷ்டம்!! " என்ற மாத்திரத்தில் சட்டென சென்று அமர்ந்து கொண்டான்.

சற்று நேரம் அமைதியா இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ,ராமன் மெல்ல தனது கையை அவளின் தோல் மேல் போட...! அம்ரூ குனிந்தபடி புன்னகைக்க இழுத்து அணைத்து கொண்டான்.

ராம்,"உனக்கு நான் உன்கூட இருக்கனுன்னு தோணுச்சுன்னா !!அப்போவே சொல்ல வேண்டியதுதான..!? ஏன் மனச போட்டு அப்படி குழப்பி கஷ்டபடுத்திக்குற!!?"

அம்ரூ ஞாபகம் வந்தவள் போல் விடுவித்தவள் ,"அச்சோ ... கிரண் எங்கயோ போனாரே !!??"

ராம்,"ஆமா...டி !!உனக்கு நான் இருக்கனும், ஆனா கவலை மட்டும் கிரண் எங்க போனாருன்னு!!?" என்று சலித்து கொள்ள அவனின் கையை இழத்து தோளில் சாய்ந்து கொண்டவள்,"நீங்க கூப்பிட்டீங்கன்னு போனாரே...!!வந்துடுட போறாருன்னு தான் கேட்டேன்!?"என்று செல்லமாக கொஞ்சினாள்.

உருகி போன ராமன்,"அவனை அப்போவே வீட்டுக்கு போக சொல்லிட்டேன்!! நர்ஸ் கிட்ட கூட சொல்லிட்டு தான் வந்தேன் உன்னைய நானே பார்த்துக்குறேன்னு,அதனால யாரும் இங்க வரமாட்டாங்க அம்மூ !!" என்றான்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now