தேடல்-67

588 15 3
                                    


பொழுது கடந்து போக ,கதிரவன் மறைந்து போக ,ராமன் மனம் கரைந்து கொண்டிருந்தது.
தன் அறையில் எதையோ ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தவனை தட்டி எழுப்பியது சுப்பண்ணாவின் கூரல்.

சுப்பண்ணா,"உள்ள வராளாங்களா?!!"

ராம்,"வாங்க..!!"

சுப்பண்ணா,"தம்பி!காபி!?"

ராம்,"இப்படி வச்சிட்டு போங்கண்ணா!!?"

திரும்பியவர் கால்கள் அசையாது நிற்க ராமன்,"எதாவது சொல்லனுமா!?"

சுப்பு,"தம்பி... கோபமா !! இருக்கமாதிரி தெரியுதே!!"

ராமன்,"அதெல்லாம் இல்லை!!நீங்க சொல்லுங்க!!"

சுப்பு,"தம்பி..!மதியம் அமிர்தாம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு ,ஹாஸ்பிடல் போயிருந்தேன்!!?!"

ராமன் சற்று பெருமூச்சு விட்டபடி,"என்னாச்சு!? ஒழுங்கா.. சாப்பிட்டாளா..!?"

சுப்பு,"இல்லை தம்பி!! அமிர்தாம்மா..,ஏதோ மாதிரி இருந்தாங்க!!,என்னை பார்த்ததும் சந்தோஷ பட்டாங்க !!கொஞ்ச நேர பேசிட்டு இருந்தாங்க ஆனா அப்புறம் ,சாப்பிட பிடிக்கலை கொண்டு போக சொல்லிட்டாங்க ..தம்பி!!"

ராமன் சற்று வேகத்துடன்,"பார்த்தீங்களா!!சுப்பண்ணா!!அப்படி என்ன அவளுக்கு அவ்வளவு திமிரு!!அவ வர சொன்னாலாம் ,நான் போயி பார்க்கலையாம்,அதுக்கு இவ்வளவு விம்பு பிடிச்சிட்டு இருக்கா!!, கொஞ்சமாவது புரிஞ்சுக்கனும் இல்லை,அப்பவும் நான் வந்து போன் பண்ணேன்...வேணும்ன்னே ,தூங்கிட்டேன்னு சொல்ல சொல்லி கிரண்கிட்ட சொல்லிருக்கா!!,அப்பறம் இப்போ வந்து.., என்னலாம் பேசுறா தெரியுங்களா!!உயிரோட இருந்தா.. செய்யாறாலமா!!
அதுக்காக வா, நான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்!!"

சுப்பண்ணா,"தம்பி!!நான் ஒன்னு சொன்னா கோபிச்சிக்க மாட்டீங்களே!!?"

ராமன் சற்று திகைப்புடன்,"சொல்லுங்க சுப்பண்ணா!!?"

சுப்பு,"தம்பி..! உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை,இருந்தாலும் ஞாபகபடுத்துறேன்,அமிர்தாம்மாக்கு உடம்பு சரியில்லைல ,இந்த மாறி சமயத்துல, மனசு கண்டதை நினைச்சு குழப்பிக்கும் தான, அப்படி ஆகிடுச்சின்னா.., என்ன ஆகுறதுன்னு பயம் வரும் !!, அமிர்தாம்மா அங்க நடந்ததை என்கிட்டையும் சொன்னாங்க!! அவங்களுக்கு அவங்க மேலே ரொம்ப கோபமா!! அவங்க என்கிட்ட சொன்னாங்க,"சுப்பண்ணா!!எனக்கு நல்லா தெரியுது !!அவரு எனக்காக , எவ்வளவு கஷ்டபடுறாருன்னு , அதனாலதான், அவரு கொஞ்சமாது தூங்கட்டுமுன்னு அப்படி சொல்ல சொன்னேன், அப்புறம் மனசு அவரு கூடவே இருந்தா பரவாயில்லைன்னு தோணுச்சு ,அதனால அப்படி பேசிட்டேன்,சுப்பண்ணா சிலசமயம் தோணுது..,இதுவரை வாழ்க்கை பூர அவரு எல்லாருக்காகவுமே ஓடிட்டு இருக்காரு,இப்போ.. நம்மாலும் அவரை இப்படி அலைய விடுறோமேன்னு தோணுது ! நீங்க சொல்லுங்க.., இப்ப கொஞ்ச நாளா பழக்கமான என்மேலே இவ்வளவு அன்பு வச்சிருக்காறே!,அவங்க அம்மா மேல எப்படி பாசமா இருந்துருப்பாரு.
அப்புறம் எனக்கும், எதாவது
ஆகிடுச்சின்னா ,அவரு ரொம்ப உடைஞ்சு போயிடுவாறேன்னு மனசு கிட்ட சேர்க்க விடமாட்டுது. பேசமா யாருக்கிட்டையும் சொல்லாமா..., எங்கையாது போயிடலாமான்னு தோணுது!!அப்புறம் அப்பவும் அவரு என்னைய தேடி அலைவாரேன்னு தோணுது..!!நான் என்ன செய்ய சொல்லுங்க!!?" அப்படின்னு அழுத்துட்டாங்க தம்பி!!" இடிந்து போயி அமர்ந்தான் ராமன்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now