தேடல்-17

282 20 0
                                    

நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா!கிரண் என்று பாவ முகபானையில் அம்ரூ கேட்க,அவன் சற்று தயக்கத்துடன் இப்போ நீங்க அப்படிதான் பேசிட்டீங்க அம்ரூ!!என்றவன் நெற்றியை தேய்த்தபடி இப்போ என்ன பண்ணறது? என்று பதட்டபட,புரியமல் விழித்த அம்ரூவை பார்த்த கிரண், "உங்களுக்கு தெரியாதுதான், இருந்தாலும் அவன் மறந்து இருந்தான் நீங்க ஞாபக படுத்திடீங்க.... ராம் க்கு அம்மா இல்ல.. அம்ரூ, ராம் கொஞ்ச பெரியவனா இருந்த போது இறந்துட்டாங்க!!,அது ஒருதனிகதை , வீட்டில பார்த்திருப்பீங்களே எல்லாருக்கும் ராம் னாலே பயம்,தாத்தாக்கு மட்டும் தான் பதில் சொல்லுவான், அவன் இதுக்கு முன்னாடிலாம் அப்படி இல்ல, அமிர்தாம்மா இறந்த அப்புறமா தான் இப்படி ஆகிட்டான் அவனே அவனை இறுக்கிட்டான்.இந்த கல்யாணத்துல்ல கூட அவனுக்கு இஷ்டமே இல்ல , தாத்தா வார்த்தைக்காக பண்ணிக்கிறான்.அவனுக்கு அவன் அம்மா ஞாபம் வரகூடாதுன்னு நாங்கலெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தோம்...ஆனா நீங்க!! என்று நிறுத்த படபடத்த அம்ரூ
எனக்கு தெரியாது கிரண்...நீங்க எல்லாம் வராங்கன்னு சொல்லிட்டே இருந்தீங்களா!! அவகளும் வருவாங்கன்னு நினைச்சிக்கிட்டேன்!!அவருதான் என்கிட்ட வம்பு பண்ணிட்டே இருந்தாரு,நான் யோசிக்கல ... சும்மா தான் கேட்டேன் என்றாள்.

அதான் அம்ரூ அவன் யாருக்கிட்டையும்
இப்படிலாம் பண்ணமாட்டான்,ஏன் திரும்பி கூடம் பார்க்க மாட்டேனே.. என்ன நினைச்சானு தெரியல! உங்க பெயரா என்னான்னு தெரியல.. உங்கிட்டதான் வந்து பேசிட்டு இருக்கான்,சரி விடுங்க !!பேசியாச்சு .. என்ன நடக்குதோ !!பார்த்துக்கலாம் ..போலாம் வாங்க எல்லாரும் தேட போறாங்க.. நான் பேசிக்கிறேன் வாங்க!! என்று கூறி கொண்டே குளப்படியை ஏற அம்ரூ குழப்பம் கலந்த பயந்த மனநிலையில் அவனை பின் தொடந்தாள்.

கோயிலில் யாரையும் காணாது இருவரும் தேடியபடியே இறங்க ,ராம் குழந்தையுடன் கார் பக்கத்தில் அமர்ந்திருந்தை பார்த்த கிரண் ..சற்று முன்னே இறங்க ,அவனை கண்டதும் அம்ரூவிற்கு கலங்கியது. எங்கடா ராம் எல்லாரும் என்று கேட்டு கொண்டே அருகில் செல்ல விருட்டேன்று எழுந்தவன்,"அதான் மேலே சொன்னனே ,கிளம்பிட்டாங்க"! என்று நகர்ந்தவனை தடுத்த கிரண் நிஜமாவா என திரும்பி பார்த்தவனின் பார்வையில் ,சரி சரி நான் வண்டி ஒட்றேன் ,மழை வேற வர மாதிரி இருக்கு சீக்கிரம் வாங்க அமிர்தா,என்றபடி அவன் கையில் சாவியை வாங்கி சென்றான்.

அம்ரூ மெதுவாக ராமன் அருகில் வர, அவன் அவளை காணாது திரும்ப .. மறுபடி முன்பக்கமாக சென்றவளை என்ன என்பது போல் பார்க்க!!பாப்பா வ என்கிட்ட குடுங்க நான் வச்சிக்கிறேன் என்றாள். பரவாயில்லை அவளுக்கு தூக்கம் வந்துடுச்சி என்கிட்டேயே தூங்கிடுவா..நீங்க போயி உட்காருங்க என்பதற்குள் ஸ்ருதி அம்ரூவிடம் தாவ அவளிடம் கொடுத்தவன் ஒன்றும் பேசாது கார் கதவை திறந்து விட்டான்.

கார் அமைதியாக பாதி வழியே செல்ல காற்றுடன் கூடிய பலத்த மழை அடிக்க,"கிரண்,காரை ஓரமா நிறுத்து மழை குறையட்டும் போலாம்" என்றான் ராம்.நானே சொல்லாமுன்னு நினைச்சேன் என்றவன் கண்ணில் ஓட்டல் தென்பட அந்த ஓட்டல போலாம் ,எதாவது சாப்பிடலாம் என்று கூறி கொண்டே காரை ஓட்டலின் பக்கம் செலுத்தினான்.

ஸ்ருதி உறங்கியிருந்தாள்,மூவரும் சென்று அமர,கிரண் அம்ரூவிடம் இருந்து ஸ்ருதியை கேட்க,இல்லை கிரண் பாப்பா என் கிட்டயே இருக்கட்டும் என்றாள்.அம்ரூ கை கழுவிட்டு வாங்க ,சாப்பிடலாம் என்றான் .இல்லை கிரண்!! எனக்கு எதுவும் வேணாம் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்றாள்.எழுந்து வந்த ராம் அவள் மடியிலிருந்து ஸ்ருதியை தூக்கியபடி,கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றான்.ஒன்றும் புரியாமல் விழித்த அம்ரூ...,இல்லை எனக்கு பசிக்கலை நீங்க.. என்று முடிப்பதற்குள் ராமன் மூனு பிளேட் என  ஆர்டர் செய்தான். ஒன்றும் சொல்லமுடியாத அம்ரூ வெளீர் புன்னகையுடன் கை கழுவ சென்றாள்.

இதுதான் சமயம் என்று அறிந்த கிரண், ராம்!! அவளுக்கு எப்படி தெரியும் ...தெரியம சொல்லிட்டா விடு அவகிட்ட ஏன் இப்படி கோபடுற என்றவனை ராமன் பார்வை எரிக்க, நான் ஒன்னும் சொல்ல பா...என்று சலிப்புடன் சொன்னான் கிரண். சற்று மெல்ல தண்ணீரை அருந்தியவாறு ராமன் மெல்ல வாய் மலர்ந்தான்.அவ மதியமே சாப்பிடலை என்றான் மெல்லிய குரலில்.என்னது ?என்ற கிரண் அவனையே உற்று நோக்க எனக்கும் தெரியும் ...அவ வேணுன்னு சொல்லைன்னு ...அப்போ டக்னு எனக்கு அம்மா ஞாபகம் வந்துச்சி அதான் வேகமா வந்துடேன் என்றான் மிடுக்குடன்.அப்போ இப்ப ஏன் கோபடுற ...அவங்க வேணாம்னா விட வேண்டிதான என்றான் கிரண்.
அதான் சொன்னேன் ல அவ மதியமே சாப்பிடலை!! என்றான் வெடுக்கென.. அதற்குள் அம்ரூ வர ராமையும் அமிரரூவையும்  மாறி மாறி பார்த்தவன் சூடாக பரிமாறப்பட்ட சாப்பாட்டை சுவைத்தான்.

இராமன் தேடிய கண்கள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin