தேடல்-19

292 18 4
                                    

    இரவு வெகுநேரம் நிலவோளியில் காய்ந்ததால்,மறுநாள் காலை சற்று தாமதமாக எழுந்தாள் அமிர்தா.கீழே பலத்த கூச்சல் ,பானு தந்த ஆடையை முன்பே துவைத்து வைத்திருந்தாள் குளித்து அதை அணிந்து இறங்கியவள் சத்தம் ஓயாமல் கேட்க..நேரே சமையலறையை நோக்கி சென்றவள் சுப்புவிடம் ,"என்ன நடக்குது சுப்பண்ணா... ஏன் காலையிலிருந்து சத்தமாவே இருக்கு என்றாள்.அவர் காபியை நீட்டியவாறு ...அதுவாமா..நேத்து ..என்றவாறு வெளியே செல்ல போச்சி நான்தானா...என்று உறிஞ்சிய காப்பியை வெடுக்கென முழுங்க.. உள்ளே வந்தவர்..  அது அம்ரூமா.. பாட்டி முன்னாடியே சொல்லி இருந்தாங்களாம் இன்னிக்கு கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்கனுமுன்னு ...ராம்தம்பி காலையிலே கிளம்பி போயிடுச்சி .. அதான் பிரச்சனை !!! பொண்ணு வீட்டு காரங்களுக்கு சொல்லிட்டாங்க தம்பி போன் போட்ட எடுக்கல ..அதான் ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன பண்றதுன்னு சத்தம் போட்டுக்குறாங்க என்றார்!!

இவங்க மட்டும் போக வேண்டிதான அவரு அப்புறமா எடுத்துக்கட்டுமே என்றாள்.இந்த வீட்டுக்குன்னு ஒரு முறை இருக்கு அத தெரிஞ்சிக்கோங்க,   சும்மாவே டிரஸ் எடுக்க ஆயிரம் விஷயம் பாப்பாங்க இது கல்யாண விஷயம் வேற முன்னடி மாறி ஆகிட கூடாதுல்ல அதான்.. மாப்பிள்ளை பொண்ணு எல்லாம் போயி பார்த்து எடுக்கனும் ..இப்ப நாள தள்ளி போடலாமா இல்ல நாளைக்கே கடைக்காரை வீட்டுக்கு வரசொல்லுறதா...அப்போ ஹோமம் எப்ப வைக்கறதெல்லாம் பேச்சு நடக்குது அதான்!!ஏன் அதுக்கு சத்தம் சுப்பண்ணா!!,முதல்லனா சீதா பாட்டி மட்டும் தான் இப்போதான் மதும்மா,மோகன்ய்யா கீதாம்மா எல்லாம் இருக்காங்களே!! என்று சிரித்தார் சுப்பு,.

அம்ரூவை சாப்பிட அழைத்தார் வேணுதாத்தா! அவளுக்கு சாப்பிட மனமே இல்லை அப்புறம் சாப்பிடுவதாக கூறிவிட்டு தோட்டத்து பக்கமாக சென்றாள்.வழக்கமான கல்லில் அமர்ந்திருந்தாள்.அங்கே வந்த வர்ஷா ,அம்ரூவை நோக்கி வந்தவள் மெல்ல பேச்சு கொடுத்தாள்.கிரண் மாமா வ எப்படி தெரியும்?  நீங்க என்ன பண்றீங்க எப்போ வந்தீங்க என்று அடுக்க அவள் பதில் கூறமுடியாமல் திணற சரியான நேரம் பார்த்து வந்த வேணு தாத்தாவும் சுப்புவும் ,இரண்டு பேரும்  இங்க என்ன பண்றீங்க சாப்பிட்டிய வர்ஷா? என்றவர் அவள் இல்லை என தலையாட்ட போ போயி சாப்பிடு என்றவர் அம்ரூவிடம் நீ என் கூட வாம்மா,வாக்கிங் போவோம் சுப்பு நீ போயி உள்ளவேளைய பாரு நான் அமிர்தாவோட போறேன் என்றார்.சுப்பு வர்ஷாவை அழைத்து செல்ல அம்ரூ தாத்தாவின் நகர்வண்டியை தள்ளியவாறு சென்றாள்.அது அழகிய நெடிய தோட்டம் தாத்தா சுற்றி வருவதற்கெனவே பாதை நிழலாக செய்யப்பட்டு இருந்தது. சற்று தூரம் சென்றதும் தாத்தா வேறு மரத்தடியில் நிறுத்த சொன்னார் அவளை எதிரே அமர சொன்னவர்," இப்போ சொல்லு அமிர்தா!! யாரு உன்னை என்ன சொன்னாங்க !!என்றார் புரியாமல் விழித்த அமிர்தா யாரும் ஒன்னும் சொல்லை தாத்தா என்றாள். இந்த தாத்தா கிட்ட சொல்ல மட்டியா!!என்று கேட்ட கனிவில் அவள் அடக்கி வைத்திருந்த அனைத்தும் பொத்து கொண்டு வந்தது அம்ரூவின் கண்களில்.வண்டியுடன் அருகில் சென்றவர் அவள் தீர்க்கும் வரை தலையை வருடலானார். முன்பே அவளை பற்றி அனைத்தும் விசாரிதறிந்தார் பை தொலைந்தது தவிற!!, ஆகவே அம்ரூவின் நடவடிக்கைகளில் அவர்க்கு நல்ல அப்பிராயம் ஆனால் அவள் முகம் வாட்டமாகவே இருப்பதை அன்றே கேட்க முடியாமல் சற்று பொறுத்து கேட்கலாம் என்றிந்தார் அவளோ நேற்றிலிருந்து மிகவும் சோகமாக இருக்க இன்று கேட்டுவிடலாம் என்று கேட்டும் விட்டார். அழுது முடித்த அம்ரூ சாரி தாத்தா என்றாள் கண்களை துடைத்தவாறு,பரவாயிலைமா தாத்தா கிட்டதனா அழுத சரி இப்போ சொல்லு உனக்கு என பிரச்சினைன்னு!!என்று வினவினார். அதெல்லாம் ஒன்னும் இல்லை தாத்தா வாங்க போலாம் என்று எழும்ப ,வேணுதாத்தா சற்று கனீர் குரலில் அம்ரூ உட்காரு !!அமர்ந்தவுடன் இப்போ சொல்ல போறிய இல்லையா !! நீ எப்பவும் சோகமாவே இருக்க அதுவும் நேத்திலிருந்து அதிமா !! உன் முகம் பார்த்தலே தெரியுது கலகல இருந்த பொண்ணுண்னு ,ஒருவேளை இந்த வீட்டில யாராது எதாவது சொல்லீட்டாங்களா!! சொல்லு நான் பேசிக்கிறேன் என்றவரிடம் அச்சோ அப்படிலாம் இல்ல தாத்தா எல்லாம் என்னைய நல்ல பார்த்துகிறாங்க என்றாள்.அப்புறம்!! என்றவரிடம். தாத்தா அது... எனக்குள்ளேயே நானே மறைச்சிக்கிட்டு இருக்கேன் என்னைய வற்புறுத்தாதீங்க!!நீங்க சொன்னா மாறி நான் கலகலனு மட்டும் இல்ல வாலுதனமா இருந்த பொண்ணுதான் ஆனா கடவுள் என்னைய சோதிக்கிறாரு அதுக்கு நான் அசைந்து கொடுத்து போறேன் அவ்வளவுதான் என பெரிய மனிஷி மாறி பேசியவளை  உற்று நோக்கியவர் சற்று இடைவெளி விட்டு அமிர்தா ,கடவுள் எல்லாரையும் தான்மா சோதிக்கிறாரு  அதுக்காக வறுத்தப்பட்டா வாழவே முடியாது ,"நான் இதுவரை யாருக்கிட்டையும் சொன்னது இல்ல  ஆனா ஏதோ உன்கிட்ட சொல்லானு தோணுது!!!.., உனக்கு தெரிஞ்சிருக்கும் ராமுக்கு அம்மா இல்லைனு ஆனா எப்படி தெரியுமா அது ஒரு விபத்து!!!..  எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்த சமயம் அப்போ இந்த வீடும் இல்லை , அன்னிக்கு என் தோழி ஒருத்தி என்தங்கை மாதிரி  அவ தில்லி வந்திருப்பதாகவும் உடனே கிளம்பறதாவும் பார்க்கதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்கு வரசொன்னா,தங்கச்சி மாதிரின்னு சொன்னேல்ல!! எனக்கு ரொம்ப சந்தோஷம் நான் பள்ளிக்கூடத்துள வேளை பார்த்தப்ப பழக்கம் ,எனக்கு அவளுக்கு ஞாபகமா ஏதாவது வாங்கி கொடுக்கனுமுன்னு நினைச்சேன் மஞ்சுவும் ஊரல இல்லை!!அன்னைக்கு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, ராமுக்கு உடம்பு சரியில்லை ஒன்பதாவது பரீட்ச்சைக்கு லீவு போட்டுட்டு ஹாலில் அமிர்தா மடியில படுத்திருந்தான். நான் இருந்த மகிழ்ச்சியில ஹாலை பார்த்தேன் எல்லாரும் இருந்தாங்க !!!மது,பானு,கீதா,சீதா எல்லாரும்!!என்ன வாங்கலானு கேட்டேன் எல்லாரும் ஒன்னு சொன்னாங்க ,அமிர்தா அவ பையன் தலையை தடவிடட்டே மாமா தங்கத்துல எதாவது வாங்கி கொடுங்க ஞாபகமா இருக்குன்னு யோசனை கூற  சரி யென்று கிளம்பியவன் திரும்ப வந்து நீங்க யாராது கூட வாங்க என்று உதவிக்கு அழைத்தேன், ஒருவரும் அசையல என் மனசு அமிர்தாக்கு நல்லா தெரியும் , வேறு யாரும் வராம நான் கஷ்டபட போறேன்னு எழ முற்பட அறிய பிள்ளை ராம் கையை அழுத்தி பிடிச்சான் அப்பவும் யாரு அசையல கண்களை சிமிட்டியவாறு புன்சிரிப்புடன் அமிர்தா அவன் தலையை கோதி ,"நல்ல பிள்ளையா சமத்தா தூங்கு அம்மா இதோ போயிட்டு வந்துடுறேன் ,வந்து உனக்கு பிடிச்சமாறி சூடா காப்பி போட்டு தரேன்னு"சொல்லிட்டு என்கூட வந்தா அப்பவும் நான் நீ பையனை பார்த்துக்கோன்னு சொன்னே பரவாயில்லை அவன் தூங்குவனு வந்தா!! கார் பசங்க கொண்டு போனதால நாங்க பைக்கல போனோம் , பாதி வழியில லாரி மோதி  என்று கண்களை இறுக்க மூடிக்கொண்டார் .அவர் மேல் கைவைத்தாள் அம்ரூ!! நான் கண் திறக்கும் போது அமிர்தாக்கு எல்லா சடங்கும் முடிச்சிருந்து என்னால நடக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க !!என்று கண்கலங்கியவர் ,என்னால எனக்கு அருமையான மருமக செத்து போயிட்டா... அதவிட எனக்கு ராமை பார்க்குபோதெல்லாம் அவ அவன்கிட்ட சொல்லிட்டு வந்த அந்த வார்த்தை தோன்றிகிட்டே இருக்கு ... அன்னிலேருந்து ராமுக்கு எங்க எல்லா மேலையும் ஒரு வெறுப்பு இருக்கு .. அதுக்காக நான் துவண்டு போகல..என்னோட எல்லா பாசத்தையும் அவனுக்கு காமிச்சி எல்லா நல்ல பழக்கவழக்களை சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கேன். இதெல்லாம் நான் நினைக்கவே கூடாதுன்னு இருந்தேன் உனக்காக இதெல்லாம் ஏன் சொல்லுறேனா நான் வாழ்நாள் புற குற்ற உணர்ச்சியோட வாழனும் ஆண்டவன் என்னைய சோதிச்சதுக்கு ஆன நான் இருக்குற வரையில எனை சார்ந்தவளுக்கு சந்தோஷத்தை கொடுக்கனுன்னு முடிவு பண்ணினேன்.இப்போ அதையே தான் உனக்கும் சொல்லுறேன் என்ன கஷ்டம் வந்தாலும் துவண்டு போகாத நீ என்கிட்ட சொல்லைனாலும் பராவாயில்லை  !!உனக்குள்ள மறைச்சதை புதைச்சிடு!! எப்பவுமே உற்சாகமா இரு!! என்றார். அனைத்தையும் கேட்ட அம்ரூ மனத்தில் உறுதி கொண்டாள்!! இனி வாலு அம்ரூவின் சேட்டைகளை ஆரம்பம்

இராமன் தேடிய கண்கள்Donde viven las historias. Descúbrelo ahora