தேடல் -8

321 19 0
                                    

        வண்ணப்பூச்சி வலம் வந்து கொண்டிருந்த பூந்தோட்டம், நடுவே லாலி ஊஞ்சல் என பசுமை கொஞ்சிய இடத்தில் ஒர் மரத்தின் அடியில் இருந்த பெஞ்சு வடிவ கல்லில் அமர்ந்திருந்தாள் அம்ரூ ,அவளை தேடி வந்த சுப்பு அவளை கண்டு  கொண்டான்.அவள் ஆழ்ந்த சிந்தையில் இருப்பதை கண்டவன், அருகில் சென்று மெல்ல அழைத்தான். அம்மா ...அம்மா...
வெடுக்கென திரும்பியவளை ... நான்தான் மா... பதறாதீங்க.. ஏன் இங்க வந்து உட்காந்திருங்கீங்க.. உங்களை கிரண் தம்பி அங்க தேடறாங்க!! என்றார்.

அண்ணா.. அவங்க கத்தனதும் எனக்கும் ஒன்னும் புரியல அதான் இங்க ஓடி வந்துட்டேன். ஆச்சோ.. அதுக்கா .. சீதாம்மா எப்பவும் இப்படி தான் ஆனா தங்கமானவங்க மா... அவங்களுக்கே இப்படி னா நாளைக்கு கிரண் அத்தை வராங்களே அவங்களை எப்படி சமாளிப்பீங்க..  என்று சிரித்தார். நான் ஏன் சமாளிக்க போறேன்.. சிரிக்காதீங்கனா.. சரி யாரு யாரேல்லாம் வருவாங்க என்னைய திட்ட சொல்லுங்க.. பார்ப்போம் என விளையாட்ட கேட்க சுப்பு சிரித்துக் கொண்டே எதிர் இருந்த கல்லில் வந்து அமர்ந்தார்.

உங்க முகத்தை பார்த்தா யாருக்கு மா திட்ட தோன்னும் குழந்தைகலை என்று கூற சும்மா கிண்டல் பண்ணாதீங்க மொதல்ல இந்த அம்மா விடுங்க, அம்ருதா நானு அம்ரூனே கூப்பிடுங்க..என்றாள்.
சரி மா... என்றார்.
மறுபடி பார்தீங்களா.. என்ற அவள் சிரிக்க சரி இன்னும் சொல்லவே இல்லியே.. என கூற சுப்பு மொத்த வரலாற்றை சொல்ல தொடங்கினார்.

       புதுக்கோட்டையிலிருந்து இங்க குடி பெயர்ந்த இரண்டு சகோதர்கள் தான் மா...கிரண்.. ராம்யோட தாத்தாக்கள் ,லேட் கர்னல் விஜயேந்திரன்  தனது மில்ட்டிரி பணியின் இறுதியை
டில்லியில் தொடங்க தம்பி வேணுகோபாலையும் அழைத்திட்டு வந்துடாரு அவரு முன்னாள் தமிழ் வாத்தியார். விஜயேந்திரனுக்கு ரெண்டு குழந்தை கிரண் ஒட அப்பா மேகநாதன், அத்தை மதுபாலா அவங்க தான் மா நான் சொன்ன நீங்க சமாளிக்க வேண்டிய ஆளு என குறிப்பு   குடுத்துவிட்டு மேலும் தொடர்ந்த அவர் வேணுகோபால் ஐயாக்கு இங்க வர இஷ்டம் இல்ல ஆனா அண்ணா மேல இருந்த மரியாதைக்காக அவர் கூப்பிட்டதும் வர சம்மதிச்சாராம். அவருக்கு இரண்டும் பசங்க தான் மா..ராம் தம்பியோட அப்பா பத்பநாபன்,சித்தப்பா  மோகன் எல்லாரும் நாளைக்கு வந்துடுவாங்க மா..எல்லாரையும் பார்க்க ஆவல் ஆக காத்துத்திட்டு இருக்கிறேன் என்று கூறும் போதே அவர் முகம் மலர்ந்தது.

எல்லாருமே வெளியூலரில் இருந்து கல்யாணத்துக்காக நாளைக்கே வராங்களா.. என்றாள் அம்ரூ ஆவலாக..
  எல்லாரும்  வெளியூலரில இல்லமா.. உங்களுக்கு தெரியாதா அது தனி கதை.. விடுங்க, இங்க டில்லிலேயே பெரிய ஹாஸ்பிடல் நாமலோடதுதான்.
நம்ம ராம் தம்பி  தான் இப்ப டீன் பெரியப்பா மேகநாதன் அப்பறம் ராம்வோட அப்பா இல்ல சித்தப்பா மோகன தான் பார்க்க சொன்னாரு ஆன அவங்க ரொம்ப தங்கமான மனுசனங்க திறமைக்கு வழி விட்டாங்க சின்ன வயச இருந்தாலும் நம்ம ராம் தம்பி ஹாஸ்பிடல் பார்க்க விதமே தனிதான்ம்மா.

ஏன் சுப்புண்ணா கிரண் டாக்டர்க்கு படிக்கலையா? என்றாள்.

அது நீங்கதான் கேட்கனும் என்று கூற திருதிருவென விழித்தாள் அம்ரூ. பின் சுப்புவே தொடர்ந்தார், அவரு தாத்தா மாறிமா.. ஆனா கடற்படைக்கு போயிட்டார் அதான் சீதாமாக்கு பிடிக்கலை.வம்பா அடம் பிடிச்சி அவரு போனாரு அம்ரூமா..

ஓ.. சீதா பாட்டி கிரணோட பாட்டியா!! என்றாள்.
  அப்படிலாம் பிரிச்சு பேசாதீங்க ... அவங்க நம்ம கிரண்,ராம், ஷயாம்,மனோஜ்,தீபிகா எல்லாக்கும் பாட்டி தான் என்று விரல் விட புருவம் உயர்த்தியவளை காணது அவர் தொடர்ந்தார் ..ஆனா விஜயேந்திரன் தாத்தாவோட மனைவி சீதாபாட்டி அதனால வேன சொல்லாம் என்றார்.

அப்பப்பா... இவ்வளவு பேர ஆஆ.. ஆளவிடுங்க ..எப்படி ஞாபக இருக்கும் என சலித்துக் கொண்டாள் அம்ரூ.
அட இன்னும் இருக்கே இதுக்கே இப்படி சொன்ன எப்படி என அழகாக சிரித்தார் சுப்புண்ணா.
சரி விடுங்கண்ணா.. நான் ஞாபகம் வச்சி என்ன பண்ண போகிறேன் என்று திரும்ப இல்ல.. இல்ல.. நீங்க வச்சி தான ஆகனும்மா.. கேளுங்க புரியமாறி சொல்லுகிறேன் என்றவர்... மில்லிடரி தாத்தா.. பாட்டி சீதா அவங்க பசங்கதான் மேகநாதன் ,மதுபாலா.
மேகநாதன் பானுமதி வோட பசங்க கிரண் தம்பியும் தீபிகா பாப்பாவும்,அப்பறம் வேணுகோபல் தாத்தா வும் மஞ்சுளா பாட்டியும் அவங்களுக்கு பத்பநாபன் ,மோகன் இரண்டு பசங்களா...பத்பநாபன்
"அமிர்தா"வுக்கும் தான் நம்ம ராம் தம்பி என நிறுத்தி அவளை பார்த்து சற்று புன்னகை செய்தார்.. அடுத் மோகன் கீதா வுக்கும் ஷயாமும்,மனோஜூம் அவ்வளவே தான் ம்மா மீதிலாம் அவ்வளவா ஞாபகம் வச்சிக்க வேணாம்.
  
ஏன் வச்சிக்க வேணாம் ? என்ற கூரல் வந்த திசை நோக்கி இருவரும் அதிர்ந்து திரும்பினர்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now