தேடல்-14

300 17 0
                                    

பறவைகளின் கீச்சு சத்தம் ,மிதமான வானிலை, பார்க்கும் இடமெங்கும் பச்சைபசேல் என இருக்கும் இடத்தின் மலைஉச்சியில் இருந்தது அந்த கோவில் ,குறைந்தது எழுபது படியாவது ஏறிதான் செல்ல வேண்டும் ,வயதானவர்கள் செல்ல தனியே வழி செய்யப்பட்டு இருந்தது ,மேகா மாமாவும் பத்துமாமா வும் தாத்தா பாட்டிகளுடன் அவ்வழியே செல்ல நாங்கள் படியேற தொடங்கினோம்.

பிரமாண்டமான உற்சவமண்டபம் அழகாக வரவேற்றது,சற்று முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்ட வாயில் ,உள்ளே ஸ்வாமிக்கு திரை யிடப்பட்டு இருந்தது.தீபி அம்ரூவை கோயிலின் பின்புறம் அழைத்து கொண்டு போனாள்.பின்னே ஒரு அமைதியான அழகான பொற்தாமரை குளம் இருந்தது. இருவரும் அங்குள்ள படியில் அமர்தனர். அங்கிருந்த பலகைகளை பார்த்த அம்ரூ,"தீபிகா...இங்க என்ன விசேஷசமாக எல்லாம் தமிழில் எழுதியிருக்காங்க!! நான் வழியில் பார்த்தேன் எல்லாம் ஹிந்தியில தான் இருந்தது" என்றாள்.

அதுவா வேணு தாத்தாக்கு தமிழ் னா ரொம்ப இஷ்டம், இங்க வந்ததேயிலிருந்து இங்க யாராவது தமிழ் பேசினா பிடிச்சிபாரு, எங்களை எல்லாம் சின்ன பிள்ளையிலிருந்து தமிழ் சொல்லி கொடுத்து வளர்த்ததே தாத்தாதான்,வெளியில என்ன பேசனாலும் வீட்டுக்குள்ள தமிழ் தான் பேசனும்,பார்த்து இருப்பீங்களே வீட்டில் வேலை பார்க்கவங்க கூட தமிழ் தெரிந்தான் வேலை ,வீட்டுக்குள்ள வேற மொழி பேச கூடாது சொல்லிட்டாரு !!" என்றாள்.

அதுக்கும் இந்த கோவிலுக்கும் சம்பந்தம் இருக்கா என்றாள் அம்ரூ. ஆமாம் அண்ணி ...நாக்கை கடித்தாள் தீபி. சிரித்த அம்ரூ ஏன் உனக்கு இவ்வளவு கஷ்டம் என்றாள். "எல்லாம் இந்த சுப்பண்ணாவால தான் அவரு தான் சாப்பிட கூப்பிடும் போது உனக்கு புது அண்ணி வந்திருக்காங்கனு சொல்லிட்டு வந்தாரு ,எனக்கு முதலில் கூப்பிட்டது அப்படியே ஒட்டிக்கிச்சு என்றாள் நமட்டு சிரிப்புடன்.புருவம் சுருக்கிய அம்ரூ அவரு ஏன் அப்படி சொன்னாரு என்றபடி ... சரி ரொம்ப கஷ்படாத அக்கானே கூப்பிடு இல்லனா.. உனக்கு எப்படி வருதோ அப்படியே கூப்பிடு என்றாள் அம்ரூ. சரி.. அண்ணி என்று சிரித்தவள் நீங்களும் என்னை தீபி னே கூப்பிடுங்க ...அப்புறம் இந்த கோயிலுக்கு என் ரெண்டு தாத்தாவும் வந்தப்போ ரொம்ப மோசமான நிலையில் இருந்துச்சாம் ,அவங்க தான் இந்த நிலையிலுக்கு கொண்டு வந்துருங்கா .. பக்கத்திலையும் தமிழ்காரங்க தான் இருக்காளா அதான் இங்க இப்படி !!என்று முடிக்கவும் ,இவர்களை தேடி கொண்டு கிரண் வந்தான். இங்க என்ன பண்ணீறங்க !!!தீபி.. பாட்டி தேடறாங்க அபிஷேகம் ஆரம்பிச்சிட்டாங்க ... சீக்கிரம் போங்க!! எனவும் இருவரும் ஏறி வந்தனர்.உள்ளே அழகாக சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று கொண்டிருந்தது. தீபி சென்று மஞ்சு பாட்டி அருகில் அமர ,அம்ரூ பானு பக்கத்தில் அமர்ந்தாள்.கண் இமைக்காது சுவாமியை பார்த்து கொண்டாருந்தவளுக்கு தீடீரென கண்கள் யாரையோ தேடியது. அங்கே அந்தபக்கம் புதிதாக நிறைய பேர் அமர்ந்திருந்தனர். தேடிய கண்களுக்கு தேடியது கிடைக்காததல் சோர்ந்து குனிய பின்னிருந்து யாரோ தட்ட திரும்பிய அம்ரூ,தட்டியவர் கை தூண் அருகில் நின்றிருந்த ராமை காட்டியது.ராம் அம்ரூவை எழுந்து வரும்படி சைகை செய்தான்.எதற்கு என்று புரியாமல் அம்ரூ திருதிருவென விழித்து திரும்பி கொண்டாள். மறுபடியும் அவர் தட்ட முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.சற்று கூட்டத்தில் வந்த ராம் அவள் கையை பிடித்து இழுத்தான். பஜனை பாடிக் கொண்டிந்தவர்கள் கவனம் இவர்கள் பக்கம் திரும்ப ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே சென்றாள் அம்ரூ. அவன் ஆரம்பிக்கும் முன்பே இவள் ,"என்ன பிரச்சினை உங்களுக்கு ஏன் இப்படி பண்றீங்க எல்லாம் என்ன நினைப்பாங்க!!" என்று கோபமாக கத்த ,சற்று பொறுமையுடன் ராமன் பிரச்சனை எனக்கு இல்ல உனக்கு தான், உங்கம்மா எனக்கு கால் பண்ணிட்டே இருந்திருக்காங்க கார் ஓட்டும் போது நான் கவனிக்கலை , இப்போ உள்ள கால் வந்தப்போ எனக்கு உங்கம்மா நம்பர்ன்னு தெரியம பேசிட்டேன் என்று அவன் முடிக்க பக்கென்று இருந்தது அம்ருவிற்கு. 'அம்மா கிட்டயா... என்ன சொன்னீங்க?! என்று பதற.ஒன்னும் இல்லை பதறாத நாங்க கோயிலுக்கு வந்துருக்கோம் நீ உள்ள பூஜையில இருக்கனு மட்டும் தான் சொன்னேன். அவங்கதான் உங்கிட்ட பேசனும் சொன்னாங்க, அதுக்காக கூப்பிட்டா நீ ரொம்ப பண்ணிருக்க என்றான்.
நீங்க போனு சொல்ல வேண்டிதான என்றாள் பம்மிய கூரலில். ஆமாம் எங்க சொல்ல விட்டீங்க மேடம் என்று நம்பரை டைல் செய்து குடுக்க. வாங்கியவளுக்கு திக்திக்கென்று இருந்தது.அம்மா... ஆமாம் மா.. பிரண்டு வீட்டில வந்துருக்காங்க மா அவங்க கூடதான் வந்திருக்கேன்.சாரி மா ..அவசராம கிளம்பிட்டு இருந்தோம்மா அதான் மறந்துட்டேன்..... நாங்க சாயந்திரமா தான் கிளம்புவோம்மா... பத்திரமா தான்மா இருக்கிறேன்...., இந்த நம்பருக்கா!! என்று ராமை பார்க்க என்ன என்று தலையை துக்கியவன்.உங்க நம்பருக்கே சாயந்திரம் கூப்பிடட்டானு கேக்கறாங்க என்று தயங்கியபடி கேட்க
தாளாரமா !! எப்போ வேணுனாலும் போட சொல்லு என்றதும் அவள் திரும்பி சரி மா நீ எப்போ வேணுனாலும் இந்த நம்பருக்கே கூப்பிடு என்றவள்...அம்மா உள்ள மணி சத்தம் கேட்குது தீபராதனை காட்டறாங்க போல வை மா !! என்று கட் செய்தாள்.இவர்கள் மண்படத்திலிருந்து நகர அங்கு வந்த கிரண் ,"ராம் உன்னை இவ்வளவு நேரமா காணுமுன்னு மது அத்தை என்னை அனுப்புறாங்க, என்னாச்சு... இங்க என்ன பண்ணறீங்க என்று இருவரையும் பார்த்து கிரண் கேட்க ,"அவங்க அம்மா போன் பண்ணாங்க டா .. சரி சரி வா அப்புறம் பேசிக்கலாம் " என்று மூவரும் உள்நுழைய மது அத்தையின் முகம் சிவந்திருந்தது.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now