தேடல்-5

367 22 0
                                    


சொல்லுக... மிஸ்..உங்க பெயர் என்ன ?... உங்களைத்தான்.. மேடம்..

அமிர்தா.., அமிர்தா.. அவள் கைப்பற்றி குலுக்க நினைவு வந்தவளாய்.. கிரணை இரக்கமாக பார்த்தாள்.
சற்று அருகே வந்தவன்," அமிர்தா.. இவர் எனக்கு தெரிந்தவர் தான் ..தீபக். நீங்க வேறு எதும் யோசிக்காம கம்ப்ளைட் குடுங்க நான் பார்த்துக்குறேன். பயப்படாதீங்க கிடைச்சிடும்"என்றான்.
சற்று பெருமூச்சி விட்டவளாய்,
என்ன கேட்டீங்க ?என்றாள் தீபக்கை நோக்கி.
உங்க பெயர் எழுதியாச்சு .. இரயில் எங்க எப்போ.. ஏறனீங்க?,தீபக்

புதுச்சேரில ..எஸ்எஃப் எக்ஸ்பிரஸ் முன்னாள் காலைல 10:30 மணிக்கு ,அமிர்தா.
ஒரு பேக் தானா போச்சி.. வேற கொண்டு வந்தீங்களா ..,தீபக்.

ஒரு டிரவெல் பேக் தான்.., என்றாள் மெல்லிய குரலில் அமிர்தா.

எதாவது முக்கியமா விலை மதிப்பா ஏதாவது இருச்சா?,தீபக்.

அவளுக்கு சட்டென்று கண்ணில் நீர் வழிய.. சற்று தேம்ப செய்தாள்.புரியாது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் கிரணும் தீபக்கும்.

அழாதீங்க அமிர்தா .. சொல்லுங்க கண்டு பிடிச்சிடலாம்... சொன்னாதான் என்னான்னு எங்களால தேட வசதியா இருக்கும்,என தீபக் தேற்ற

பணம் இருந்துச்சி என்றாள் ,கண்களை துடைத்தப்படி

எவ்வளவு ? இருத்துச்சி அமிர்தா..,தீபக்.

4 லட்சம் ,என் பரஸ்.. மொபைல் , முக்கியமான ஃபைல்..,அமிர்தா.

ஓ அதானா.. இவ இப்படி விம்பி விம்பி அழறா என்று நினைத்து கொண்டான் ,கிரண்.

சரி சரி அமிர்தா.... கண்டு பிடிச்சிடலாம்.. உங்களோட கான்டேக்ட் சொல்லுங்க தகவல் கிடைச்ச கூப்பிடறோம்.. என தீபக் கூற திருதிரு.. வென விழித்தாள் அமிர்தா.

ஓஹோ .. உங்க மொபைல் இல்ல ல சரி வேற நம்பர் .. இங்க யாரை தெரியும் எங்க தங்க போறீங்களோ...அந்த அட்ரஸ் சொல்லுங்க..,தீபக்.

தயக்கதுடன் .. இங்க யாரையும் தெரியாது..!! என்றாள்.

ஓ....அப்படியா..சரி உங்க ஊரு வீட்டு அட்ரஸ் .. வீட்டு நம்பர் தாங்க..இப்போதைக்கு,தீபக்.

செய்வதறியாது ..கையை பிசைந்தது கொண்டு கிரணை பார்த்தாள் பாவமாக.அவள் சற்று முன் வீட்டிற்கு பேசியது நினைவிற்கு வர புரிந்து கொண்டவனாய் , "தீபக் .. என் நம்பர் ..அட்ரஸ் எழுதிக்கோங்க" என்றான்,கிரண்.

நன்றி சொல்ல வகை தெரியாது அவனை பார்த்தவளிடம் சிறு புன்னகை செய்தான். இருவரும் தீபக்கிடம் விடைப்பெற்று வெளியே வர .. கிரணுக்கு அடுத்த அழைப்பு வந்தது. "வெளிய வந்துடேன் ..நீ எங்க இருக்க.. சரி நான் வரேன்" என கட் செய்தான்.

அமிர்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை .. அவள் மிகவும் களைத்திருந்தாள்.
அவள் மனம் ,எங்கு அவன் இங்கேயே விட்டு சென்றிடுவானோ என பதறியது.

திரும்பியவன் ,இருங்க.. அமிர்தா என் பேக் எடுத்துட்டு வந்திடுறேன் ... என்றவன் உள் சென்று தன் அந்த பெரிய பேக்கை மாட்டி கொண்டு வந்து , "ரெண்டு நாள் ல கண்டு புடிச்சிடலானு சொல்லுறாங்க பார்த்துக்கலாம் வாங்க அமிர்தா ... போகலாம்" என்று சொல்லும் வரையிலும் துடித்து கொண்டிருந்த மனம் அவளை அறியாது அவன் பின் தொடர்ந்தாள்.
சற்று விடிந்திருந்தாள் இப்பொழுது மக்கட்கூட்டம் அதிகமாக இருந்து.
இருவரும் இரயில் நிலையத்தைவிட்டு இரங்கி கார் பார்கிங் இடத்தை நோக்கி செல்ல அங்கே கிரணுக்காக ராம் காத்து கொண்டிருந்தான்.

கிரணை பார்த்த ராம் கை அசைக்க, அவனுடன் வருபவளை கவனித்தான்.
ராமை கண்ட கிரண் சற்று முன் செல்ல .. வேகமாய் சென்றிந்த ஒருவர் அமிர்தாவை இடித்துதள்ளி விட முன்பே களைத்திருந்த அமிர்தா சற்று தடுமாறினாள்.அதனை கவனித்த ராம் .. "பார்த்து.." என குரல் கொடுப்பதுக்குள், மயங்கியபடி நின்ற நிலையிருந்து அவள் கீழே சரிய ..ராம் ஒடி சென்று அவளை பிடித்தான், சற்றும் எதிர்பாரத கிரண் அவளை தாங்கியபடி இருந்த ராமிடம் என்னடா ஆச்சு? என்று கேட்டவாறு அவளை குலுக்கினான். "அமிர்தா .. அமிர்தா..." கன்னங்களை தட்டியும் பயனில்லை..அதற்குள் ஓடி வந்த சிலர் தண்ணீர் தர ..அதை வாங்கி தெளித்தான் கிரண்.. எழுந்திருக்காதலால்..பதறியவன்
"ராம்... என்னனு பாருடா ஏன் கண்ணை திறக்க மாட்டறாங்க" என கிரண் கூற, ராம் அவனை நகரு என கூறிவிட்டு அவளை தூக்கிக் கொண்டு
காரில் வைத்து அவளின் கைபிடித்து பல்ஸ் பார்த்தான்.காரில் இருந்த முதலுதவி பெட்டிய எடுக்கும் படி கிரணுக்கு கட்டளையிட்டான்.அதிலிருந்த இன்ஜங்கஷன் எடுத்து அவள் கைகளில் போட்டான்.சிறிது நேரத்தில் அவளின் வறண்ட தொண்டை இரும்பல் வர .. மெல்ல மலரும் மொட்டை போல கண்களை திறக்க அந்த கண்களேய பார்த்தவாறு இருந்தான் ராம்!!!






இராமன் தேடிய கண்கள்On viuen les histories. Descobreix ara