தேடல்-1

1.6K 23 2
                                    

"சென்னையிலிருந்து புதுதில்லி வரை செல்லும் நியூதில்லி எஸ்ஃப் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடையிருந்து புறப்பட தயாராக உள்ளது"
என்ற அறிவிப்பை கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் அமிர்தா. கண்களை கசக்கியபடியே தனது மொபைலை பார்த்தாள் .. பகல் 1:15 மணியை கடந்துகொண்டிருந்தது. எழுந்து அமர்ந்தவள் தான் இருந்த பர்த்ன் கீழ் பார்க்க பாட்டி ஒருவர் அடம்பிடித்து கொண்டிருந்த வாண்டுவிற்கு சாம்பார் சாதத்தை ஊட்ட மல்யுத்தம் செய்ய இவளை காணவும் புன்கை செய்தார்.

தூங்கி வழிந்து கொண்டிருந்தவள் அசடு வழிய சிரிக்க ....
"புல்வெளி புல்வெளி தனில் பனித்துளி பனித்துளி வந்து"
என்று முடிப்பதற்குள் மொபைலை எடுத்து அழைப்பை நிறுத்தி ,
சொல்லு மா.... ஆமா மா.. சென்னை ல தான் நிக்குது மா .. சாப்டல மா.... இப்பதான் புழிச்சிக்கிட்டேன்.. சரி... சரி... சரி.. சப்பாத்தி தான பாத்துட்டேன்.. இதோ சாப்டுறேன் என்று பையிலிருந்து டப்பாவை எடுத்தாள்...மா.. போனை வை இரயில் கிளம்ப போகுது கை கழுவனும் .. கூப்பிறேன்...
என்று அணைத்து விட்டு தண்ணீர் பார்டிலுடன் ஏணி மீது கால் வைத்து மெல்ல கீழ் இறங்கினாள்.
கை அலம்பிவிட்டு வந்தவளிடம்,
அந்த பாட்டி கீழே உட்கார்ந்து சாப்பிடு மா .. இவங்க அப்பா தான் .. தண்ணீர் பார்டில் வாங்க போயிருக்காரு ,வந்தா இந்த பக்கமே உட்கார்ந்துக்க சொல்றென் என்றவரிடம் புன்முறுவலிட்டு எதிரே அமர்ந்து டப்பாவை திறந்தவள், அம்மா கட்டிய சாப்பாத்தியை ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தாள். வண்டி மெல்ல நகர பாட்டி சற்று எட்டி பார்த்தார். அதற்குள் அந்த வாண்டு இந்த பக்கம் ,
அப்பா... என்று ஓட...
அமிர்தா கையிலிருந்த பாட்டில் நழுவி தரை நனைத்தது.சப்பாத்தியை கட்டி கொண்டிருந்தவளுக்கு திடுக்கிட பொறையேறி விக்கல் ஆரம்பித்தது.

"மது"...என்று அதட்டியவன் சற்றென்று கையிலிருந்த பாட்டிலை நீட்டினான்.
அதற்குள் பாட்டி அங்கிருந்த பைகளை நகற்றி மதுவை தன்வசம் இழுத்து அமர வைத்தார்.

தலைதட்டி தண்ணீரை குடித்து தன் நிலைக்கு வர சில மணிதுளி பிடித்தது அமிர்தாவுக்கு. "சாரிங்க".. இவ கொஞ்சம் சுட்டி ...இப்படி தான் எதாவது பண்ணிடுவா.. என்றவாறு பாட்டி அருகில் அமர்ந்தான் குருநாதன்.
அதற்குள் பாட்டி அவளை மெல்ல தட்ட ..
அமிர்தா,"ஆச்சோ பாட்டி விடுங்க பரவால".. குட்டி தன அவளுக்கு என்ன தெரியும்..நானெலாம் இவள விட சுட்டி நிறைய வாங்கிருக்கேன் என்று சிரித்தவாறு பாட்டிலை நீட்டினாள்.

மீதி இருந்தவற்றை மெல்ல முடிக்க, மறுபடியும் பாட்டிலை நீட்டினான் குருநாதன்,கை அலம்பியவளிடம் பாட்டி ரெண்டு பிஸ்கட்டுகளை நீட்டியவாறு டில்லியாமா போற என்று வினவ .. வாங்க மறுத்தவாறு ஆமா பாட்டி ...நீங்க? என பதிலெழுப்பினாள்.

நாங்களும் தான் மா, ஆக்ரா ல இறங்கிடுவோம்.மது அப்பா க்கு அங்க வேலை கிடைச்சிருக்கு அதான் , நீ தனியாவா டில்லி போற ... என விசாரிக்க தொடங்கினார்.
அமிர்தா, "ஆமாம் பாட்டி ..அப்பா வால வர முடில அதான் ,நானே போறென்னு கிளம்பிட்டேன் பாட்டி என்றாள்".

இவர் இருவர் விசாரித்து கொண்டிருக்க ,பிஸ்கட்டுகளை நொறுக்கியவாறு மதுவும் குருவும் ஜன்னலை வெறித்து கொண்டிருந்தனர்.

பாட்டி,'மஹூம்... இப்படி தான் மா பொண்ணுங்க தைரியமா இருக்கனும் ,ஆனா ஜாக்கிரதை மா தில்லி போற பார்த்து இருக்கனும்..,என்றவர் அங்க இறங்கனதும் கூட்டிட்டு போக யாராது வராங்கல? என்றார் அக்கறையுடன்.
இல்ல ,பாட்டி நானே போயிடுவேன் என்றவளிடம்..,"என்ன மா சொல்லற தனியாவா ...நிறைய தடவ போயிருக்கிய என்றார்.

அமிர்தா,"இல்ல பாட்டி இதான் முதல் தடவை என்றவள், தனியா தைரியமா போகனுன்னு சொல்லுறாங்கா... தனியா எப்படி போவன்னு கேட்கறாங்க ..இந்த பாட்டி களே இப்படி தான் என்று உள்ளுக்குள் சிரித்தவள்..
மதுவை மெல்ல இழுத்து தாடையை கிள்ளியவாறு...மது..... குட்டி ல .. மது குட்டி அம்மா வரலையா என்று விளையாட்டாக கேட்க ..
சட்டென்று திரும்பிய குரு
அதற்குள் ,அவ வரல மா.., என்றார் பாட்டி.

அமிர்தாவின் வாய் வேலை செய்ய ஆரம்பித்து... அதோடு நிறுத்த வேண்டியது தான.. ஏன் பாட்டி பின்னாடி வராங்கலா என்று வினவ ...
சற்று கோபமடைந்த பாட்டி, அவ இல்ல மா.. இருந்தா தன வருவா.. என உரக்க கூறினார்.

இதை கேட்ட குரு, வெடுக்கென எழுந்து வெளி நடப்பு செய்தான்.

நமக்கு இது தேவையா....? என்ற முகபாவத்துடன் முழித்த அம்ரூ செய்வதறியாது விழித்தாள்.




இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now