தேடல் -31

259 15 0
                                    

   அடம் பிடித்து கொண்டிருந்த அமித் ,
ராமனை கண்டதும் அடங்கி போக இவ்வளவு நேரம் அவனை சமாளிக்க முடியாத செவிலியர்களோ வாய் அடைத்து போயினர். அவனை தூங்க வைத்து வெளியே வந்த ராமன் , கால் மீ எனித்தீங் ஹாபன்ஸ் என்றவாறு கீழ இறங்க அவன் நினைவலைகள் மேலோங்கி செல்ல ஆரம்பித்தன.

அம்ரூவின் வேர்வை துளிகள் , தாங்கி தூக்கிய கணம் ,சாய்ந்து உறங்கிய தோல்கள், கோர்த்து நின்ற இடம்,அழுது சிவந்த கண்கள் , அக்கறையுடன் பற்றிய கைகள் ,தடவி கொடுத்த நொடிகள் ...என கவிஞனை போல் அவன் நினைவலைகள் பறக்க  அவளை காண கால்கள் வேகமாய் ஓடி உதவி செய்தன.இந்த தில்லி டிரப்பிக்கை பற்றி இவ்வளவு நாள் கவலைபடாத ராமன் இன்று ஏனோ பயங்கறமாக நொந்து கொண்டான்.
காரில் ஒலித்த பாடலின் தாளத்திற்கு இசைந்து கொடுத்தவன் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ன பேசலாம் என்றெல்லாம் ஓத்திகை செய்யலானான்.

மாலை முழுமதி பொழிந்து கொண்டிருக்க தாத்தா தன் வழக்கமான இடத்தில் முழுநிலவில் முழுகி இருக்க ,காபியுடன் வந்து நின்றார் மஞ்சு பாட்டி." என்ன!! பலத்த யோசனை இருக்கமாறி இருக்கு என்று வினவியபடி காப்பியை நீட்ட .. மஞ்சு நீதான் சரியான ஆளு!! நான் நினைச்சிட்டே இருந்தேன் இப்படி உட்காரு என்றார் வேணுதாத்தா காபியை வாங்கியபடி.
சொல்லுங்க!!!

மஞ்சு ... நீ இப்பலாம் ராமோட நடவடிக்கையை பத்தி என்ன நினைக்கிற ?

என்ன திடீர்ன்னு கேக்கறீங்க.. அவன் எதாச்சும் சொன்னான!! என்னாச்சு அவனுக்கு

அதெல்லாம் ஒன்னும் இல்ல விஷயம் இருக்கு நீ சொல்லு !!

எனக்கு என்ன தோணுதுனா.... முதலலைக்கு இப்போ பரவாயில்லங்க.. வழக்கமான கோபம் பிடிவாதமெல்லாம் அப்படியே இருக்கு ஆனா இப்போ கொஞ்சம் சிரிக்கிறாங்க... ஆனா இந்த கோபம் தான் அவன்கிட்ட கெட்ட பழக்கமே அத மட்டும் பல்லவி மாத்திட்ட போதும் அவனை அடிச்சிக்க ஆள் இல்ல..

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now