தேடல் -43

231 15 1
                                    

காரை விட்டு இறங்கிய அம்ரூ, நீண்ட நெடிய அந்த வளாகத்தை பார்த்தவள்."இங்க என்ன?! பண்ண போறோம்... கிரண்" என்றாள் ஆச்சரியமாக.

இன்னிக்கு இங்க கேம்ப் நடக்குது அம்ரூ.. நாம உதவி பண்ண போறோம்!! என்றான் கிரண்.

கேம்ப்பா... என்ன உதவி செய்யனும் என்றவளிடம்," ஆமா !!கிரண் இவங்களுக்கு ஆர்வம் ஜாஸ்திதான்!!"
என்று நகைத்தபடி பிரதீக் கூற அனைவரும் ஒன்று சேர்ந்தனர். விழித்தபடியே உள்ளே சென்றாள் அமிர்தா.

உள்ளே இவர்களை வரவேற்ற சிலர் ஏதோ ஹிந்தியில் பேசி கொள்ள.. சிறிது நேரத்தில் அவரவர்க்கு தனியே பணிகள் ஒதுக்கப்பட கலைந்து சென்றனர்.

ராம்,கிஷோர் ,ஷானு மூவரும் ஒரு அறைக்கு செல்ல மற்றவர்களுக்கு வேறு பணி காண்பிக்கப்பட்டது.

அம்ரூ , குருவிற்கு கலைந்த மற்றும் புதிய புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கும் பணி ஒதுக்கப்பட்டது.

புத்தக குவியலை கண்ட அம்ரூ இடுப்பில் கை வைத்தப்படி வெறித்து பார்த்தாள்.

அம்ரூ, "குருண்ணா...,இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை... பிரண்டஸ்லாம் சேர்ந்து ஜாலியா..ஏதாவது பண்ணுவீங்கன்னு பார்த்தா.. இப்படி ....சேவை எல்லாம்.. அதுவும் அவரு நான் வந்தே ஆகனுமுன்னு அடம் வேற..."என்று சலித்தபடி புத்தகளை எடுத்து அடுக்கலானாள்.

குரு சிரித்தபடி அவனும் புத்தகங்களை எடுத்தவாறு ,"இது வழக்கமா நாங்க பண்றதுதான் அம்ரூ... நான் இங்கதான் ராம் கிரணோட படிச்சேன்... அப்போலாம்..ராமும் கிரணும் தான் ரொம்ப கிளோஸ் நானும் தீபக்கும் கிரண் கிட்ட பேச ஆரம்பிச்சோம்.. அப்போ ராம் தான் இந்தமாறி இடத்துக்கு கூட்டிட்டு வருவான்.. அப்போலாம் உன்னை மாறிதான்..நானும் தீபக்கும் கிரண் கிட்ட சண்ட போடுவோம் .. நாங்க வரலைன்னு..., கிரண்.. ராம் பேச்சை தான் கேட்பான் ...நாங்க வரலைனாலும் அவனுங்க வந்துடுவாங்க... வேற வழி இல்லாமா.. ஒரு தடவை இதுமாறி வேற ஒரு இடத்துக்கு போனோம்... இப்பவாது பரவாயில்லை... புக் அடுக்குறோம்... நாங்க முழு வளாகத்தை பெருக்கி சுத்தபடுத்திருக்கோம்.. சின்ன பசங்கள குளிக்க வைப்போம் ... சில சமயம் .. அன்றைய சமையலுக்கு உதவின்னு எங்களுக்கே ரொம்ப பிடிச்சி போயி ..இவங்க போறாங்கன்னு தெரிஞ்சாலே வந்துடுவோம்... அவங்க காலேஜ் போன பிறகு ...கிஷோர், பிரதீக் ..ஆரவ் எல்லாமும் வர ஆரம்பிச்சுட்டாங்க ... இப்போ நீ...!! என்று முடிக்க

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now