தேடல்-63

255 12 2
                                    

காலை தென்றல் இதமாக தடவி செல்ல,கைகளை பின்னே கட்டியபடி தோட்டத்தை வெறித்து நின்றிருந்தார் நாராயணன்.
தாத்தாவின் நாற்காலியை தள்ளியபடி மஞ்சுபாட்டியும் தாத்தாவும் அருகே வந்தனர்.

வேணு,"என்ன நாராயணன்!!!, காலையிலே எழுச்சிட்டிங்க போல..!,எல்லாம் சௌகரியமா இருக்கா!!?"

நாராயணன் புன்னகை பூக்க திரும்பியவர்,"வாங்க....!!ம்ம்...எல்லாம் நல்லாருக்கு!!"

வேணு,"என்ன வேண்டுமானலும் தயங்காம கேட்கலாம்!!இது நம்ம வீடு மாதிரி!!.

நாராயணன்,"எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிங்க!!" என்று கையை கூப்ப

கைகளை விலக்கியவாறு வேணு,"ராத்திரியிலேருந்து பத்தாவது தடவையா சொல்லுறீங்க!!நா அமிர்தாவை எங்க வீட்டு பெண்ணாக தான் பார்க்கறேன்!!என் பேத்திக்கு நான் செய்ய கூடாதா!!?"

நாராயணன்,"கண்டிப்பா!!அது உங்க பெருந்தன்மை!!இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை!!"

சிரித்தபடியே திரும்பிய வேணு,"மஞ்சு!!அவங்களாம் எழுந்துட்டாங்களா!!?என்னனு கவனிச்சியா!!?"

மஞ்சு,"ம்ம்ம் ...!எல்லாரும் எழுச்சாச்சு!!நீங்க கூப்பிட்டிங்கன்னு சுப்பு கிட்ட கவனிக்க சொல்லிட்டு வந்தேங்க...!!"

நாராயணன்,"அவங்கள ஏன் சிரமபடுத்திட்டு!!நாங்க பார்த்துக்குறோமே!!அப்புறம்.... அப்படியே கிளம்பளானு...." என ஆரம்பிக்க

வேணு,"சும்மா...பேசாதீங்க!!நான் சொன்னா சொன்னது தான்!!அமிர்தா க்கு சரியாகி வீட்டுக்கு வருகிறவரை இங்க தான் தங்கறீங்க!!பெரியவங்களாம் இழுத்திட்டு எங்கையும் அலைய வேண்டாம்!!புரியுதா!?" என உரிமை யாக கூற

நாராயணன்,"இல்லைங்க...!அது..எப்படி..!" என தயங்கினார்.

அதற்குள் சுவாதியும் சுப்பண்ணாவும் வந்து சேர சுப்பு,"ஐயா..!டிபன் ரெடி!!சாப்பிடலாம் வாங்க!!"

வேணு,"வாம்மா...!! சுவாதி!!" திரும்பியவர்," சுப்பு..அவங்கள சாப்பிட வைக்காம..,இங்க ஏன் அழைச்சிட்டு வந்துருக்க..!"

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now