தேடல்-6

377 17 2
                                    

    "விடம் நுங்கிய கண் உடையார்..
          இவர் மெல்ல மெல்ல..
        மடம் மங்கையராய் என்...
         மனத்தவர் ஆயினாரே"
   என்ற பாடலை  எண்ணியவாரே காரை செலுத்தி கொண்டிருந்தான் ராம்.கிரண் காட்டிய திசை நோக்கி கார் நிறுத்தப்பட்டது. அமிர்தா களைத்திருந்தால் எதாவது சாப்பிட வேண்டும் என்று ராம் அறிவுறித்தியதால் ஓட்டலுக்கு மூவரும் இறங்கி சென்றனர்.ராம்,சர்வரை அழைத்து மூன்று காபி ஆடர் செய்ய,கிரணின் அம்மாவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வர ,கிரண் எழுந்து சென்றான்.தலை கவிழ்ந்த அல்லியை போன்று அமர்ந்திருந்த அமிர்தாவிடம் மெல்ல பேச தொடங்கினான் ராம்.
     அமிர்தா தான... அவள் தலை அசைக்க ..தண்ணி குடிங்க என்று நீட்டினான்.அவள் வாங்கி பருக.. இவன் மெல்ல தொடர்ந்தான்.
கிரண் எல்லாம் சொன்னான்.. வருத்தபடாதீங்க ..எல்லாம் சரியாகிடும்.ரொம்ப கவலைப்பட்டா இன்னும் உங்க உடம்பு மோசமாகும்.
சரி..எந்த காலேஜ் ல படிக்க போறீங்க..நாங்க எதாவது உதவி பண்ணாலாமா ?என்று வினவினான்.

அமிர்தா மௌனமே உருவாக அமர்ந்திருந்தாள்.அதற்குள் காபியும் கிரணும் வந்துசேர மூவரும் பருகினார்கள்.

கிரண், "அம்ரூ எந்த காலேஜ் ல சேர்ரதா இருந்தீங்க? வீட்டுக்கு தெரிய வேணான்னு வேற நினைக்கறீங்க..யாரையும் தெரியாது வேற.. என்ன பண்ணாலானு யோசிச்சிட்டீங்கலா?" என்று அடுக்கினான்.
  
அம்ரூ,"கிரண் இப்போதைக்கு எனக்கு ரெண்டு நாள் மட்டும் தங்க உதவி பண்ணுங்க அதற்குள் நான் எதாவது வேறு முயற்சி செய்யறேன்" என்றாள் பாவமாக.
ரெண்டு நாள்ள என்ன பண்ணுவீங்க .. என்றான் ராம்.
பேசாது இருந்தாள் அம்ரூ.
சற்று யோசித்த கிரண்,"அம்ரூ .. எங்க கூட எங்க வீட்டுக்கு வரீங்களா? " என்றான்.
திடுக்கிட்டு கிரணை நோக்கினான் ராம்.

சற்று தயங்கியவளிடம்..அம்ரூ வேற எங்கையும் பாதுக்காப்பு இல்ல உங்கக்கிட்ட பணமும் இல்ல சாப்பிட கூட  ..அதோட உங்க உடம்பும் பலவீனமா இருக்கு ..எதாவதுன்னா இந்த டாக்டர் பாதுப்பான்... என்று ராமனை நோக்கினான்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now