தேடல்-37

Start from the beginning
                                    

   இப்போ பார்க்க டாக்டர் மாறி இருக்கேனா!!?.. மேடம்....!! என்று புன்னகை பூக்க கண் அடித்தவன் மேஜையில் இருந்த போனில் டையல் செய்து ஹிந்தியில் பேச அவனையே வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

    போனை வைத்தவன், குனிந்து அவளின் நாற்காலியை இழுத்து, அவளின் முகத்தருகில் சென்றவன் அவள் கண்களை உற்று நோக்க.. இதை சற்றும் எதிர்பாராத அம்ரூ,திகைத்து போனாள்!!. சற்று நேர பார்வைகளின் உரையாடலுக்கு பின்,..செய்வதறியாது விழித்த அம்ரூ, முகத்தை திருப்ப முயல அவளின் மூக்கை அவனின் மூக்கின் நுனியினால் உரசியபடி நிமிர்ந்தவன்.

      "என்னதாண்டி?! பிரச்சனை உன்னைக்கு!!, ஏன் இப்படி பார்க்குற என்னைய!! காலையில முகத்தை திருப்பிட்டு போன,இப்போ திரும்பாம பார்க்குற!! என்ன வேணும் உனக்கு இப்போ..!? என்றவனிடம் பதிலேதும் பேசாமல் அவனேயே உற்று நோக்கியபடி இருக்க,
கதவை தட்டி உள்நுழைந்த நர்ஸ் ஹிந்தியில் அவனிடம் ஏதோ கூற,"சரி!! வாங்க!!" என்று தலையாட்டியபடி திரும்பியவன் அம்மூ நாம அப்புறமா இந்த கதையை பேசுவோம்...அமித் அப்பா!! வந்துட்டாரு நம்ம அடுத்த பிளாக் போகனும்!! வா!! என்றபடி வெளியே சென்றான்.

    எங்கள் இருவர் பின்னும் நர்ஸ் பின்தொடர வழியேங்கும் கண்டவர் அனைவரும் மரியாதை செலுத்த தலையாட்டியபடி முன்னே சென்றவனை இப்பொழுது பார்க்க வேறு வித மரியாதை கலந்த கவிதை தோன்றியது அம்ருவின் கண்களில்.

      அமித் இராமனை கண்டதும் கட்டிலில் எழுந்து குதிக்க!! அருகில் சென்று தூக்கியவன் இரண்டு கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்த அமித்!! மாமா எங்க என் சாக்லேட்?!! என்று கை நீட்டினான்.

     இந்தா உனக்கு இல்லாததா!! என்றவன் உள் இருந்த வேறு டாக்டர், நர்ஸிடம் அவனின் நிலை மற்றும் எல்லா டெஸ்ட்  பற்றி விசாரிக்க அமித்,அம்ரூவை இரங்க பார்த்தான்.

       அம்ரூ கண்களாலும் வாய் கைகளை வைத்து விளையாட்டு காட்ட.. முகத்தில் எவ்வித மாறுபாடு இல்லாமல் பார்த்த அமித்..ராமனை தட்டி அவளை காண்பிக்க!! ராமன் சிரித்தபடி!! அங்கிருந்தவர்களிடம் ஏதோ சொல்லி வெளியே அனுப்பியவன் அமித்தை அம்ரூவிடம் நீட்டினான்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now