தேடல்-35

Start from the beginning
                                    

அவங்க அம்மா எப்படி இறந்தாங்கனு !!! என்று முடிப்பதற்குள்.. எப்படி?? யாரு சொன்னா ?? ராம் சொன்னானு மட்டும் ஷாக் குடுக்காதீங்க என்றான்.

இல்ல கிரண்....வேணு தாத்தா சொன்னாரு என்றவளிடம் ...
என்னது தாத்தாவ..இது அதவிட பெரிய ஷாக் அம்ரூ..தாத்தாவா... என்று அதிர

ஆமாம் கிரண் இது யாருக்கிட்டையும் சொன்னது இல்லனும் சொன்னாரு..இது ரகசியமா என்ன !!என்றவளை இரங்க பார்த்தவன்.

ஆமாம் அம்ரூ... அப்புறம் எங்க வீடே மாறி போச்சி ... நிறைய பிரச்சினை ..இதபத்தி யாரும் பேச கூடாதுன்னு தாத்தா கடும் உத்தரவு.. இதுவரை ராம் கூட பேசலை.. எங்களையும் பேச விடலை.. அப்புறம் நிறையபேருக்கு தெரியாது என்றவன் மேலும் தொடர்ந்தான்...
ஆனா ஒரு தடவை தாத்தா என்கிட்ட மறைமுகமா ஒன்னு சொன்னாரு..
அமிர்தாம்மா போனத்துக்கு அப்புறம் அடுத்தமாசம் அவன் பிறந்தநாள்.. அமிர்தாம்மா இருந்தா எப்படி நடந்திருக்கும் தெரியுமா!! ஆனா அவன் அன்னிக்கு புற ரூம் உள்ளையே அமிர்தாம்மா போட்டோ முன்னாடியே உட்காத்துட்டு இருந்தான்.நைட் நான் போனப்போதான் மறைஞ்சு பார்த்தேன் தேம்பிதேம்பி அழுத்துட்டு இருந்தான்... நான் பயந்து திரும்பன அப்போ தாத்தூவும் அங்க இருந்தாரு..அப்போ என்கிட்ட ,"கிரண்.. பயப்படாத தாத்தா இங்கேயே தான் இருக்கேன்...ஒன்னு சொல்லுறேன் கேட்கறீயா...இத நீ கடைசிவரை ஞாபகம் வச்சிக்கோ...ராம் உன் கூட பிறக்கலைனாலும் அவனும் உனக்கு சகோதரன் தான்... அமிர்தாம்மா இல்லாத இடத்தை நீ தான் பார்த்துகனும் ..அவனுக்கு நல்ல நண்பனா.. நல்ல சகோதரனா கூடவே இருக்கனும்... அவனை எப்பவும் விடகூடாதுன்னு சொன்னாரு" இப்பவும் அந்த வார்த்தை அப்படியே ஞாபகமா இருக்கு என்றான்.

அவனை உற்று நோக்கியவள்," அதான் இப்பவும் அவருக்குனா..நீங்க பதறீங்க தேடி ஓடறீங்கள..... தாத்தா சொன்ன மாறி நீங்க நல்லவே... அவர பார்த்துக்கீறங்க கிரண்.. " என்றாள் அம்ரூ.

நீங்க வேற அம்ரூ ..அன்னிக்கு நான் அப்படி இருக்கனுமுன்னு நினைச்சேன் அவ்வளவுதான்.. ஆனா ராம் தான் அப்படி நடந்துகிட்டான்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now