தேடல் -27

Start from the beginning
                                    

கொஞ்சம் பொறுமையா..கேளுங்க அம்ரூ... அவங்க சிலரோட பொருளாம் கையகபடுத்திருக்காங்க.... ஆனா... அதுல உங்க பொருள் எதும் இல்லைனு சொல்லுறாங்க... கிடைச்ச தெல்லாம் எல்லாருக்கும் கொடுத்துட்டாங்களாம்.. நான் எதுக்கும் இப்ப போயி ஒருதடவை விசாரிச்சிட்டு வரேன்... என்று முடிப்பதற்குள் அம்ரூவிற்கு தலைகால் புரியவில்லை..
பேய் அறைந்தவள் போல் நின்றவளை அருகில் சென்று உலுக்கியவன் ஒன்னும் பயப்படாதீங்க அம்ரூ ...உன் பேக் எங்கையும் போகாது..நான் கொண்டு வந்து குடுக்கிறேன் என்றவனிடம் நடுங்கிய கூரலில் என்னையும் கூட்டிட்டு போங்க கிரண் நானும் வந்து பாக்கிறேன் என்று கூற...
இப்போ எப்படி அம்ரூ வீட்டல இன்னும் விசேஷம் முடியலியே ..அதோட உங்களை இப்போ கூட்டிட்டு போன இன்னும் டென்ஷன் தான் ஆவீங்க ... எனக்கு வெளிய வேலை இருக்கு ... சாப்பிடாம கிளம்ப விடமாட்டங்க வேற.. நான் அந்த வேலைக்கு போறமாதிரி போயி விசாரிச்சிட்டு வந்து உங்கிட்ட சொல்லுறேன் என்று கூற ,"இல்ல  கிரண்... ப்லிஸ் என்னையும் கூட்டிட்டு போங்க !! நான் வந்து பார்த்த எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் "என்று கெஞ்சிய குரலில் கேட்க "சரி வாங்க !! சாப்பிட்டு போலாம் ஃபிரண்ட பாக்க போறோமுன்னு சொல்லிக்கலாம்" என்று உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே அனைவரும் கலகலப்புடன் உணவுகளை பரிமாறி கொண்டும் பேசிகொண்டும் இருக்க நிலையற்ற பதுமையாய் வந்து நின்றவளை கண்டதும் ராமனுக்கு உள்ளுற ஏதோ தோன்ற அவளும் அதற்கேற்றார் போல்
சாப்பிட அமர்தவள் பாதிலியே எழுந்து சென்றாள்.

அவள் எண்ணம் உணர்ந்த கிரணும் பாதிலியே எழுந்து பானுவை தனியே அழைத்து விஷயத்தை கூற ," சரிடா!! நீ பாத்து கூட்டிட்டு போயிட்டு வா!! நான் இங்க சமாளிச்சிகுறேன்.. கொஞ்சமாது சாப்பிட்டு போடா!!ஏன் பாதிலியே எழுந்துட்ட என்றவரிடம்,"அம்மா...அம்ரூ ரொம்ப ஆப்சட்டா ஆகிடாங்க போல நான் கூட்டிட்டு போயிட்டு வந்துரேன்" என்று மேலேறி சென்றான்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now