சிலையென அமர்ந்திருந்தான் நம் ராமன். அவனுக்கு இவள் வீட்டிற்கு வரவேண்டாம் என தோன்றியதோ!!
வரவேண்டும் என தோன்றியதோ!! யவர் அறிவார் அவன் உள்ளத்தை..
இவன் ஆழ்ந்த சிந்தனையுள் இருக்க அவர் இவருவரும் வெளியேறியிருந்தனர். அழைப்போலி கேட்டு நினைவு வந்தவன்..இனி நடப்பது நடக்கட்டும் என்ற நினைவோடு எழுந்து சென்றான்.

கார் நீண்ட நெடு சாலையில் சென்று கொண்டிருந்தது.கிரண் ராமிடம் ," கல்யாண வேலை எல்லாம் எந்த  அளவில் இருக்கு ..".என ஆரம்பித்தான். ராம்,இனிமே தான் டா.. எல்லாம் ஆரம்பிக்கனும்.நீதான் வந்துட்டல எல்லாம் பாத்து ஆரம்பி ,என்றான்.

கிரண்," அவ்வளவு தான விடு நான் பாத்துக்கிறேன்..,சரி யாரெல்லாம் வந்துருக்காங்க?.
இன்னும் யாரும் வரல நீதான் வந்துருக்க..இனிமே தான் வராங்க என்றவன் சற்று நினைவு வந்தவனாய்
டேய்... சீதா ல சீதா இன்னிக்கு வராங்கடா..என்று கிரணை பார்த்து கண்சிமிட்டியவன் சன்னல் வழியே விழியை வைத்தவளை திரும்பி பார்த்தான்.

டேய் .. என்ன சொல்லுர? என்று  அதிர்ந்தவன்.திரும்பி அம்ரூவை பார்த்தவன் அவங்க ஏன்டா இப்போவே
வராங்க ? என்றான். ராம்," என்னைய கேட்டா!! அங்க அவங்களுக்கு நேரம் போயிருக்காது. அதோட நீ வரன்னு தெரிந்து கூட கிளம்பியிருப்பாங்க..என்று நகைத்தான்.அவன் சிரிப்பதை ஆழ்ந்து பார்த்தான் கிரண்.அதை கவனித்த ராம் என்னடா அப்படி பாக்கிற ?
நீ சிரிச்சு பார்த்தே ரொம்ப நாள் ஆச்சே அதான் ..அந்த அளவுக்கு மாத்திட்டாங்களோ அண்ணி..என்று பதிலுக்கு நகையாடினான் கிரண்.
சற்று மௌனித்த ராம் பேச்சை மாற்றினான்..சரி உன் செல்ல சீதுக்கிட்ட என்ன சொல்ல போற ? என்றான்.

இவர்கள் பேச்சை கேட்டும் கேட்காதவளாய் அமர்ந்திருந்த அம்ரூ சற்று எட்டி,"கிரண் உங்களுக்கு என்னால சிரமம் னா ..என்னைய வேற எங்கயாது ஹாஸ்டல் இல்ல ஹோட்டல விட்டுங்க..நான் பாத்துக்கிறேன்" என்றாள். 'கைல பத்து பைச இல்ல .. என்ன இடம் எங்க இருக்கோன்னு கூட தெரியாது இவ பார்த்துக்கிறாளமே .. மஹும்..நான் கேட்டா பதிலும் சொல்ல மாட்டா என்று தனக்குள் கடிந்து கொண்டான் ராம். கிரண்," அப்படிளாம் இல்ல அமிர்தா ..நாங்க கொஞ்சம் பெரிய குடும்பம் இவன் கல்யாணத்துக்கு தான் எல்லாம் காத்துட்டு இருந்தோம், இப்ப தான் பார்க்க போறோம் ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் , வரவங்க கிட்ட உங்களை யாருன்னு கேட்டா என்ன சொல்லுவனு கேட்கறான் அவ்வளவு தான் ,அதோட நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன் அதனால பிரச்சனை இல்ல கவலைபடாதீங்க என்றான் கிரண்.

இது எப்போ டா? ராம்.
தாங்கள் ஏதோ ஆழ்ந்து யோசிட்டு உட்காத்தீர்களே அப்போ தான் போன் பண்ணேன் என்றான் கிரண்.
கார் ஒரு பெரிய வீட்டின் கதவின் முன் நின்றது ,ஹாரன் செய்யவும் சேக்கியூரிட்டி வந்து கதவு திறந்தான்.கார் உள்ளே செல்ல அந்த பெரிய வாயிலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் காத்திருந்த கிரணின் அம்மா ,அவனை கண்டதும் முகம் எங்கும் ஒளிமிளிற அமிர்தாவை கண்டதும் மாயம் ஆகி போனது!!!

 

    

இராமன் தேடிய கண்கள்حيث تعيش القصص. اكتشف الآن