தேடல்-65

Zacznij od początku
                                    

அம்ரூ,"நான் ஒன்னும் மறக்கலை!!, நீங்க தான் அன்னிக்கு கோபமா ,என்கிட்ட எதும் பேசமா போனீங்க!!"

சுமி பாட்டி,"பின்ன!, பாட்டி கிட்ட கூடம் சொல்லாம நீ கிளம்பி வந்தா.., எனக்கு கோபம் வராதா!!?"

அம்ரூ,"சரி இப்போ கோபம் போயிடுச்சா!!, அதை விடுங்க!! என்றவள், என்ன?! இன்னிக்கு காலையிலே எல்லாரும் வந்துருக்கீங்க!!" என்றபடி திவ்யாவையும் அம்மாவையும் பார்க்க ஜானு பதிலளிக்க முன்வந்தாள்.

இடைமறித்த திவீ,"ஒன்னுமில்ல அக்கா!!நேத்தி வேணு தாத்தா கூட நைட்டு பேசிட்டு இருந்தோம்!உன்னை ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருந்தாரு !!எனக்கு ஒரே சந்தேகம் உன்னையே பத்தியா சொல்லுலாருன்னு, ஆனா பாரு.. அம்மாவும் விடவே இல்லையே, பதிலுக்கு ..நீ பண்ண.... சேட்டையெல்லாம் சொன்னாங்களா!!, தாத்தா..பாட்டிலாம் நம்பவே இல்லை,என் பங்குக்கு நானும் சிலது எடுத்து விட்டேன்.இப்படி ஒரே அரட்டை!!பார்த்தா காலையில எங்க எல்லாருக்கும் உன் ஞாபகம், அதான் கிளம்பி வந்துட்டோம்!!"என்று கண்ணடிக்க அவளை அதட்டியவள் மௌனமாக ..ஓரமாக நின்ற குரு அண்ணாவிடம்"உங்களுக்கு எப்படி!!?" என்றாள்.

குரு,"நானும் நேத்தி நைட்டு ராம் கிட்ட போன்ல பேசிட்டு இருந்தேன்!!உன்‌ ஞாபகம் வந்துச்சு !!சரி நமக்கும் லீவு தானேன்னு கிளம்பி வந்தேன்!"

அகமகிழ்ந்த அம்ரூ குருவை அறிமுக படுத்த மீரா டிபனுடன் உள் நுழைந்தார்.

சாப்பிட்டபடி ரயில் முதல் இங்கு நடந்த சில கதைகள் பற்றி பேசி கொண்டிருக்க, சுவாதி சற்று தடுமாற்றத்துடன் ஜானுவை அழைத்து அவருக்கு மருந்து எடுத்து தர சொன்னார்.

அம்ரூ,"இதுக்கு தான், ம்மா!!உன்னைய யாரு ,இப்படி‌ அலைய சொன்னது !?பேசமா கிளம்பு!"

சுவாதி,"அதெல்லாம் ஒன்னுமில்லே டி.. நான் நல்லாதான் இருக்கேன்!!உன்னைய பார்த்ததே, எனக்கு தனி தெம்பு!!"

திவீ,"அக்கா!!அம்மா பொய் சொல்லுது!!இப்பல்லாம் ரொம்ப முடியல !! டாக்டர்கிட்ட கூப்பிட்ட வரமாட்டுது, நேத்திக்கு கூடம் முடியலைனு.., நம்ம டாக்டர் முதல்ல எழுதி கொடுத்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கு!அப்பாவையே ஏமாத்திட்டு இருக்கு!!"

இராமன் தேடிய கண்கள்Opowieści tętniące życiem. Odkryj je teraz