தேடல் -41

Start from the beginning
                                    

இவ வேற ஒருத்தி... எனக்கு தெரியாத என்ன... நீதான் ஞாபகபடுத்துனுமா??! அதோட இன்னும் ஆறு நாள் இருக்கு ..சும்மா நாலு நாலு னேட்டே இருக்க.... அதுக்குள்ள என்ன வேணா நடக்கலாம்...அது சரி ..நைட்டு வரமாட்டேனு வம்பு பண்ண .. அப்பறம் போறேனு வம்பு பண்ண ...  கடைசியா என்ன பண்ண... இங்ககையே அதுவும் என் பெட்லியே படுத்து தூங்கிட்ட... எழுப்பனா..கொஞ்சுற... அப்போலாம் யாரும் எதும் நினைக்கமாட்டாங்களா!! அப்போலாம் மட்டும் உனக்கு தெரியாதா!!?
என்றவனின் கண்களை சற்று நேரம் பார்த்தவள் அமைதியாக நிற்க
கையை விடுவித்தவன் மௌனமாக அவளையே பார்த்தான்.

நைட் ...அவங்க போனதும் போகலானு தான் நினைச்சேன் ஒருமாறி இருந்துச்சி.. எப்படி  உங்க பெட்ல படுத்து தூங்கினேனு தெரியல....!!!! என்று தலையில் கை வைத்தவாறு வாடிய முகத்துடன் கூறினாள்.
அதனை கண்டவன் சட்டென சுதாரித்து ,"அதனால என்ன அம்மூ ...என் பெட்ல தான தூங்கின...தப்பு இல்லை....
இப்போ இப்படியே நின்னு பேசிட்டு இருந்தனா... கீழ போன கிரண் மறுபடி வந்து தட்டுவான்..என் பிரண்டஸ்லாம் வந்துடாங்க ளாம்...நீயும் சீக்கிரம் போயி ரெடியாகிட்டு வா.. எல்லாருக்கும் அறிமுக படுத்துரேன்...."என்று அவளை திருப்பி  தள்ளியாவாறு பாத்ரூம் வெளிய விட..,என்னைய ஏன் வம்பு பண்றீங்க இப்போ !!?என்றாள்.

சற்று திகைத்தபடி, "என்னது..மேடமுக்கு இங்கேருந்து போக மனசு வரலையா??!என கேட்க

அது இல்ல ..நான் ஏன் வரனும் ..என்கிட்ட ஏன் அவங்களை அறிமுகப்படுத்துறீங்க...!!! உங்க பல்லவிக்கு பண்ணுக என சிலிர்த்து கொள்ள வாயிட்டு சிரித்தான் ராமன்.

அம்மூ... இப்படியே என் பிரண்ட்ஸ் முன்னாடி பேசிட்டு இருக்காத.... என்ன!!? என்றான்.

நான் வரவே இல்லை னு சொல்லுறேனே....உங்க காதுல விழுதா... என நக்கலாக கேட்க

அவளின் காதை திருவியபடி ," உன்னால மட்டும் தான் என்கிட்ட இப்படி பேச முடியும்...விளையாடமா உடனே டக்குன்னு கிளம்பி கீழ வர ..உனக்காக தான் அவங்கள வர வைக்கவே ஒத்துகிட்டேன்..புரியுதா... போ.." என்று கதவை திறந்து தள்ளிவிட...

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now