இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

20.7K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-37

256 18 3
By Gayathrisivak

       டாக்ஸி டெல்லி நகரின் நெரிசல் மிகுந்த பகுதியை கடந்து கொண்டிருந்தது.

    தன்னை நோக்கும் அந்த மின்சார பார்வையும், முகமெங்கும் படர்ந்திருந்த அந்த பொலிவும் இடைவிடாது தாக்க!!... உணர்வை கட்டுபடுத்தியவாறு சன்னலை வெறித்தபடி.... கருவிழிகளை இங்கும் அங்கும் விரட்டியடித்தபடி அமர்ந்திருந்தான் ராமன்.

       கண்களால் மட்டுமே பேச எண்ணியவளோ.. மௌனமாய் அவனை இரசித்தபடி இருக்க... டாக்ஸி பெரிய கட்டிங்கள் நிறைந்த ஹாஸ்பிட்டல் வளாகத்தின் நடுவே நின்றது.

         தலை உடைகளை சரி செய்தவன், அவளை இறங்கும்படி பார்வையிலே கட்டளையிட,புரிந்தவள்
போல் இறங்கியவள்,அந்த பிரமாண்டத்தை நிமிர்ந்து பார்க்க தலை சுற்றியது.சற்று அங்குமிங்கும் சுற்றி திரும்பி பார்ப்பதற்குள் முன்னம் உள்ளே சென்றிருந்தான் ராம்.

    இவள் திருதிருவென விழிக்க, டீப்டாப்பாய் நீலநிற ஆடையணிந்த ஒருவர் இவளை நோக்கி ஓடிவர..,டாக்ஸியை கட் செய்தபடி ஹிந்தியில் ஏதோ கூற புரியாமல் விழித்த அமிர்தா... "டோண்ட் நோ ஹிந்தி!!!" என்றாள்.

     ஹோ.. ஓகே மேடம்!! ஐ யம் ரித்திக்!!ராம் சார் பிஏ!!  ஹி ஆஸ்க் மீ டூ டேக் யூ டூ ஹீஸ் ரூம்!! கம் வித் மீ!!!என்று பணிவுடன் கூறியபடி முன்னே செல்ல ஒருவித பதட்டத்துடன் பின் தொடர்ந்தாள் அம்ரூ.

  இரண்டாவது தளத்தில் "டீன் ரூம்" என்று பெயரிட பட்ட அறையை காண்பித்தவன்!!. "மேடம்!!..ப்ளிஸ்..சிட் ஹியர்!!! ஹீ வில் கம் சூன்!! என்று சென்று விட பிரமாண்மான கட்டிடத்தில் அமைதியான இடத்தில் இருந்த அறையை அமர்ந்தபடி சுற்றி பார்த்தாள்.
   
    மேஜையில் ராம் பெயரிடப்பட்ட பலகையும் சிலபல பைல்களும் கணிணியும் இருந்தது. சற்று தள்ளி விசாலமான ஷோபா, உள்ளே வேறு ஒரு அறையும் இருந்தது.சடலேன கதவை திறந்து உள்ளே வந்தவன், "அம்மூ போலாமா!!!!" என்றபடி அங்கிருந்த அறையினுள் நுழைந்தவன்,வெள்ளை நிற கோர்ட் அணிந்து வெளிவந்தான்.

   இப்போ பார்க்க டாக்டர் மாறி இருக்கேனா!!?.. மேடம்....!! என்று புன்னகை பூக்க கண் அடித்தவன் மேஜையில் இருந்த போனில் டையல் செய்து ஹிந்தியில் பேச அவனையே வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

    போனை வைத்தவன், குனிந்து அவளின் நாற்காலியை இழுத்து, அவளின் முகத்தருகில் சென்றவன் அவள் கண்களை உற்று நோக்க.. இதை சற்றும் எதிர்பாராத அம்ரூ,திகைத்து போனாள்!!. சற்று நேர பார்வைகளின் உரையாடலுக்கு பின்,..செய்வதறியாது விழித்த அம்ரூ, முகத்தை திருப்ப முயல அவளின் மூக்கை அவனின் மூக்கின் நுனியினால் உரசியபடி நிமிர்ந்தவன்.

      "என்னதாண்டி?! பிரச்சனை உன்னைக்கு!!, ஏன் இப்படி பார்க்குற என்னைய!! காலையில முகத்தை திருப்பிட்டு போன,இப்போ திரும்பாம பார்க்குற!! என்ன வேணும் உனக்கு இப்போ..!? என்றவனிடம் பதிலேதும் பேசாமல் அவனேயே உற்று நோக்கியபடி இருக்க,
கதவை தட்டி உள்நுழைந்த நர்ஸ் ஹிந்தியில் அவனிடம் ஏதோ கூற,"சரி!! வாங்க!!" என்று தலையாட்டியபடி திரும்பியவன் அம்மூ நாம அப்புறமா இந்த கதையை பேசுவோம்...அமித் அப்பா!! வந்துட்டாரு நம்ம அடுத்த பிளாக் போகனும்!! வா!! என்றபடி வெளியே சென்றான்.

    எங்கள் இருவர் பின்னும் நர்ஸ் பின்தொடர வழியேங்கும் கண்டவர் அனைவரும் மரியாதை செலுத்த தலையாட்டியபடி முன்னே சென்றவனை இப்பொழுது பார்க்க வேறு வித மரியாதை கலந்த கவிதை தோன்றியது அம்ருவின் கண்களில்.

      அமித் இராமனை கண்டதும் கட்டிலில் எழுந்து குதிக்க!! அருகில் சென்று தூக்கியவன் இரண்டு கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்த அமித்!! மாமா எங்க என் சாக்லேட்?!! என்று கை நீட்டினான்.

     இந்தா உனக்கு இல்லாததா!! என்றவன் உள் இருந்த வேறு டாக்டர், நர்ஸிடம் அவனின் நிலை மற்றும் எல்லா டெஸ்ட்  பற்றி விசாரிக்க அமித்,அம்ரூவை இரங்க பார்த்தான்.

       அம்ரூ கண்களாலும் வாய் கைகளை வைத்து விளையாட்டு காட்ட.. முகத்தில் எவ்வித மாறுபாடு இல்லாமல் பார்த்த அமித்..ராமனை தட்டி அவளை காண்பிக்க!! ராமன் சிரித்தபடி!! அங்கிருந்தவர்களிடம் ஏதோ சொல்லி வெளியே அனுப்பியவன் அமித்தை அம்ரூவிடம் நீட்டினான்.

   போக மறுத்த அமித்தை கட்டிலில் இறக்கி விட்ட ராம்..,"அமித்.. என்னடா!! நான் சொன்னேல!!! எனக்கும் அம்மூனு ஒருத்தி இருக்கானு!! இவங்க தான் ஹாய் சொல்லு"!! என்று அவளின் கைகளை பற்றியபடி காண்பிக்க..

    கைகளை கட்டியபடி முகத்தை திருப்பி கொண்டவன்..கீழ் கண்ணால் அம்ரூவை பார்க்க,புரிந்து கொண்ட அம்ரூ..அவனின் கைகளை விலகியபடி அவன் அருகில் சென்றவள்!!," இந்த சுட்டிதான் நீங்க சொன்ன உங்க ஃபேவரட் அமித் ஆஆ!!நீங்க சொன்ன மாறி குட்டியா..அழகாக இருக்கானே!!..  ஆனா நீங்க சொன்னமாறி சண்டிலாம் இல்ல!!குட் பாய் தான!!இல்ல அமித்!! என்றபடி ராமிடமிருந்த வேறு சாக்லேட்டை நீட்டியவளை கண்டு அமித் புன்னகை செய்ய, அவளோ கண்ணடிக்க சட்டென்று சாக்லேட்டை எடுத்து கொண்டவன்!!.

"ஹாய் அம்மூ!!!" என்று கூற திகைத்து போனாள் அமிர்தா. திரும்பி ராமை பார்க்க நான் தான் சொன்னேல என்பதை போல் தோல்களை குலுக்கியவன்..

அம்ரூவின் அருகில் சென்று,"டாய்ய் அமித்..,எனக்கு மட்டும் தான் இவ "அம்மூ",உனக்கு அம்ரூ தான்!! " என்று அவள் குடுத்த சாக்லேட்டை பிடுங்க ,அம்ரூ சட்டென திரும்பி ராமை பார்க்க, உள்நுழைந்தனர் அமிதின் அப்பாவும் நர்ஸும்.நீங்க பேசிட்டு இருங்க!! என்று முவரும் வெளியே போக...

  அமித் மெல்ல அம்ரூவை அழைத்து அவளின் காதில்..,"ராம் மாமா!! என்னை அவரோட ஃபேவரட்னா... சொன்னாரு!!.." என்று கேட்க அம்ரூ சிரித்தபடி ஆமாம் அமித்.. அதுல என்ன உனக்கு சந்தேகம் என்று கேட்க?!"
 

    என்கிட்ட நீங்கதான் அவரோட ஃபேவரட்னு சொன்னாரு!! என்று  அவன் கூற திகைத்தவள் சமாளித்தபடி.. ,"சும்மா சொல்லுலாரு அமித்!! என்கிட்ட நீதானு சொன்னாரு! உனக்காக என்கூட டிஷ்யூம்!! லாம் போட்டாரே!! என்றவளிடம்
 
   இல்லியே!! அவரு நான் வளர்ந்து பெரியவனானதும் எனக்காக வேற ஒரு ஏஞ்சல் வருவாங்க!! அம்மாக்கு அப்புறம் அவங்களுக்கு தான், நான் ஃபேவரட்னு சொன்னாரே!!

ஒடிந்துபோனாள் அம்ரூ.," அப்படியா சொன்னாரு!!,..அமித்".

"ஆமாம்!! என் அம்மாவ கூட்டிட்டு போன ஏஞ்சல்..இன்னொரு ஏஞ்சல கூட்டிட்டு வந்து விடுவாங்களாமே" என்று மழலை மாறாத பேச்சில் மயங்கிய அம்ரூ அவனை கட்டியணைத்தபடி,
"ஆமாம்!!, அமித் உன் மாமா சொன்னது ரொம்ப சரி!!" என்றவளுக்கு கண்ணில் நீர் எட்டி பார்க்க அதனை துடைத்த அமித்.., அவளின் காதில் சென்று," நானும் அம்மூனு தான் கூப்பிடுவேன்"
என்று அழுத்தமாய் கூற சிரித்துவிட்டாள் அம்ரூ.

        ஓகே!! நீ தான் என்னோட ஃபேவர்ட்டாச்சே!! அப்படியே  கூப்பிடு என்ற கூற அந்நேரம் மூவரும் உள்நுழைய, "என்ன அமித் புதுசா வந்தவங்கிட்ட!, டக்னு பிரண்டு ஆகிட்ட போல!!" என்று கேட்ட அமிதின் அப்பாவுக்கு

"ஆமாம்!! ப்பா!!.... அதோட அம்மூ எனக்கு கொடுத்த சாக்லேட்டை மாமா வாங்கிட்டாருப்பா!! "என்று பாவமாய் பாவனை செய்ய,... அம்ரூவும் ,"அதன குடுங்க!! அந்த சாக்லேட்டை!!" என்று கண்டிப்புடன் கண்ணடிக்க..

  "உதை வாங்க போறீங்க ரெண்டு பேரும் என்று "என்று மிரட்டிய ராமனிடம் வெடுக்கென பிடுங்கி அமித்திடம் நீட்டினாள் அம்ரூ.இருவரும் ஹைஃபை அடிக்க அறையே சிரிப்பலையில் திகழ்ந்தது.

   உள்ளே வந்த வேறொரு டாக்டர்,
"சார் அமித் !!இன்னும் அந்த ஊசி போட்டுக்க மாட்டறான்.. போட்டா கடைசி செக்பக் முடிச்சிடலாம்"என்று முறையிட ,திரும்பி ராம் அமித்தை பார்க்க அமித் ஓடி சென்று அம்ரூவிடம் மறைந்து கொண்டான்.

      சிரித்தபடி தூக்கிய அம்ரூ..!!,  என்னோட பேவர்ட் அமித் இல்ல!!குட் பாயா போயி போட்டுக்குவியாம் என்றாலும் போக மாட்டேன்!!என்று சிணுங்கினான்.

அருகே வந்த ராம்,"அமித் இப்போ நீ போல நான் நீ கொடுத்தத அம்மூக்கு குடுத்துடுவேன்... பார்த்துக்கோ!! உனக்கு கிடையாது !! " என்று கூற சிணுங்கியபடி நிமிர்ந்தவனை கண்ட அமிர்தா...,"நீங்க எங்கிட்டையே குடுங்க அவனுக்கு வேணாம்!!" என்று கூற கண்களை துடைத்தவாறு தாவிய அமித்..., "எனக்குதான் வேணும்"! என்றான்..,

          "சரி!! நீ போயி டாக்டர் சொல்லுறது எல்லாம் முடிச்சிட்டு வா!! நான் உனக்காக கீழ நிற்கிறேன்..அங்க வந்து வாங்கிக்கோ !!" என்றபடி வேறு நர்ஸிடம் குடுத்து அனுப்பியவன்.

  அம்ரூவை அழைத்து,அவனது அறையில் அமருபடியும்..!,கொஞ்ச வேலை இருப்பாதாகவும் முடித்துவிட்டு வந்து கூப்பிடுவதாகவும், காரையும் கொண்டுவர சொல்லிட்டேன்!! என்றபடி வெளியே நகர,கூட்டி வந்த நர்ஸ் மறுபடி வழிகாட்ட பின் தொடர்ந்தாள் அமிர்தா.

சிரித்தபடி சென்ற நர்ஸிடம், "என்னாச்சு?!" என்றவளுக்கு "ஒன்னுமில்லே மேடம்!!" என்று பதிலளிக்க,
"சும்மா!! சொல்லுங்க!" என்று அம்ரூ வற்புறுத்த,..

"இல்ல மேடம்!! சார் நல்ல மூடுல இருக்காரு போல!!" என்றார்.

"ஏன்?! எப்படி சொல்லுறீங்க!

   அவரு இப்படி பேசி சிரிச்சு இப்போதான் பாக்குறேன் மேடம்.. ஆறு நாள்ல கல்யாணம்ல அதான் குஷியா இருக்காரு போல என்ற பதில் அம்ரூவிற்கு மகிழ்ச்சி கலந்த பயத்தை ஏற்படுத்தியது...

சிறிது நேரத்திற்கு பின் வந்தவன்.., அம்மூ போலாமா என்றபடி கோர்ட்டை கழட்ட, "அமித்..!!" என்றவளுக்கு ,"அவன் கீழ ரெடியா!!இருக்கான் என்றபடி,"நம்ம போலாம் வா!!" என்று முன் செல்ல பின்னே சென்றவள்.

  அவனுக்கு ஏதோ தரனுன்னு சொன்னீங்களே!!..எடுத்துட்டீங்களா!!என்று நினைவூட்ட அவன் சிரித்தபடி செல்ல,கீழே கார் தயாராக நின்று கொண்டிருந்தது.

     இவனை கண்டதும் தாவிய அமித்தின் கன்னத்தில் முத்தமிட்ட ராமன்.. குடுத்தாச்சு... போதுமா!! டெப்லெட் கரெக்ட்டா சாப்பிடனும் சரியா !! என்று கையாட்டி வழியனுப்பிட்டு திரும்பியவனுக்கு...!!

   தான் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்பதை அறிந்தவளின் அதிர்ச்சி!!!, முகபாவனையில் தெரிந்தது!!!.
அம்ரூ நாணத்தில் தலை கவிழ்ந்து நின்றிருக்க புன்னகைத்தபடி நகர்ந்தான் ராமன்.

  

 

Continue Reading

You'll Also Like

137K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
86.9K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
12.4K 830 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.