இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

20.8K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல் -26

289 16 0
By Gayathrisivak

           வாத்தியம் !! வாத்தியம் !! என ஐயர் ஆணையிட.. கூடியிருந்த அனைவரும் மலர்ஆசி பொழிய  கண்களாளே சிறையிட்டவன் கண்சிமிட்டியபடி மாங்கல்யம் பூட்ட புன்னகை பூத்தபடி கணம் தாளாத ஆம்பலை போல் மகிழ்ச்சி கணம் தாளாத அம்ரூ தலை கவீழ்ந்து அமர்ந்திருந்தாள்.விரலோடு விரல்பிடித்து வேங்கை பின் மான்போல ராமனின் பின்னே அம்ரூ செல்ல  மலர்மழை பொழிந்து கொண்டிருந்தது. பின்னே சென்றவள் சட்டென்று கால்தவற இழுத்து அணைத்தவன் ...இப்பவுமா?!!விழனும் என்று நகையாட ...நீங்க பிடிச்சிடுவீங்கனு தைரியம் தான்!! என்று கண்சிமிட்ட அந்த கண்களை பார்த்தவண்ணம் நின்றிருந்தான் ராமன். சட்டென்று கைபிடித்து இழுக்க.. வலிதாளாமல் வெடுக்கென விழித்தவள் தன் அடிப்பட்ட கையை ஸ்ருதிகுட்டி இழுத்தபடி நின்றிருப்பதை கண்டாள்.கீழே வாத்திய ஓசை கேட்க வெடுக்கென இறங்கியவள் ..நினைவு வந்தவளாய் தன்னை கண்ணாடி முன்னே நின்று பார்த்தாள்.அதற்குள் உள்நுழைந்த ரேனு ,"ஸ்ருதி மா..இங்க எப்படி வந்த!! எங்கலாம் தேடறது" என்று மிரட்டியபடி  வந்து அவளை தூக்க இருவரும் புன்னகை செய்து கொண்டனர். "இப்போ தான் எழுந்தியாமா?! "என்று ரேனு கேட்க ,சற்று சிரித்தவள் ராத்திரி தூங்க நேரமாகிடுச்சி அக்கா!! .. என்று நகர்ந்து கொண்டே, கீழே ஆரம்பிச்சிடாங்க போல இருக்குக்கா !!நான் குளிச்சிட்டு வரேன்!! என்றாள். ரேனு,"இப்போதான்ம்மா வந்திருக்காங்க... அவசரம் இல்லை பொறுமையேவே வா... ஆரம்பிக்க நேரம் ஆகும் என்றாள்.ஏன் அக்கா !!என்று ஆர்வமாக கேட்க..அத ஏன்ம்மா கேட்கற..இந்த ராமை மறுபடி காணோம் ,எங்க போவானோ தெரியல!! பொண்ணு வீட்டுகாரங்க வந்தாச்சி இவன் வெளிய போயிருக்கானு சொல்லி சாமளிச்சிருக்கு ..அவன் வந்துதான் ஆரம்பிக்கனும்..அதனால நீ பொறுமையாவே வா என்றபடி நகர்ந்தாள்.

அறையை தாழிட்டவள் தான் கண்ட கானாவை நினைத்து மனம்நெகிழ அடுத்தகணம் ..தன்னை நொந்து கொண்டாள். என்ன நினைக்கிற அம்ரூ ..பைத்தியம்தான்  பிடிச்சிருக்கு உனக்கு!!..உங்கிட்ட மனம் விட்டு பேசினா.., இப்படிதான் நினைச்சிப்பியா.. அவரு என்ன நினைப்புல உன்கிட்ட பேசினாரோ!!!அன்னைக்கு கிரண் கூட சொன்னாரே அவர் உன்பெயருனால கூட உங்கிட்ட பேசியிருக்கலாம்..நேத்தி நடந்த விஷயம் ...என்று அடுத்த மனம் கூற!! அவருக்கு அவங்க அம்மா ஞாபகம் வந்திருச்சி அதனால உன்மடியில படுத்திருப்பாரு!! சரி அன்னிக்கு ஏன் அப்படி பார்த்தாரு!!உனக்கு சாரி   எடுக்க உதவி செய்தாரு இல்ல... எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்லும் போது பெருமையா பார்த்திருப்பாரு.. அப்புறம்.. சும்மா கண்டதை நினைக்காத அம்ரூ ...நீ யாருன்னே நீ மறந்துட்ட.. உனக்கு இருக்க பிரச்சினைக்கு நீ இப்படி எல்லாம் நினைச்சி பார்க்கவே கூடாது என்று தலைதட்டியவாறு குளிக்க சென்றாள். அவசர அவசரமாக தயாராகி இறங்கியவள் ,கீழே அனைவரின் முகங்களிளும் ஆயிரம் பாவனைகளை கண்டாள்.நேரே சமையலறை சென்றவள் , "சுப்பண்ணா என்ன செய்யறீங்க"? என்று வினவ ,"அம்ரூம்மா என்னைய எதும் கேட்காதீங்க?!" என்று சலிப்புடன் அமர்ந்திருந்தார் சுப்பு.என்னாச்சு அண்ணா !? என்று அருகில் சென்றவள் அவர் அதிருப்தியில் கன்னத்தில் கை வைத்தபடி," அம்ரூம்மா ... நல்ல நேரம் வந்துடுச்சி   ஆனா ராம்தம்பியை காணோம் ..இது தாண்டுச்சின்னாச்சின்னா அப்புறம் இரண்டு மணி நேரம் சும்மா இருக்கனும்.. நான் வேற இப்போவே எல்லாத்தையும் செஞ்சு வச்சிட்டேன்.., வேணு ஐயா வேற கோபமா இருக்காரு எங்க போனாரோ தெரியல !! அவரு போன் கூட அவர் ரூம்லதான் இருக்கு !!"என்று முடிக்க "போன் இங்க இருக்கா!!!" என்று ஆச்சிரியத்தில் கேட்டவள் நினைவு வந்தவளாய்.. காலையில அவரு வெளிபோனாத பார்த்தீங்களா!! என்று வினவ இல்லை அம்ரூமா!!,நான் அதிகாலையிலே எழுந்துட்டேன்!! வெளிய போனத பாக்கலை,அவரு ராத்திரியே போயிருப்பாரு ,போனாவரு இன்னும் வரலை என்று பதில் கூற... யூகித்தவள்... சுப்பண்ணா வீட்ல தேடினீங்களா ?!என்றாள். அவரு ரூம்ல இல்ல வேறயாரும் எங்கையும் பார்க்கலை ..அப்போ வெளிய தான போயிருப்பாரு என்றார். சற்று சிரித்தவள் ,"சுப்பண்ணா வாங்க !!" என்கூட என்று வலுகட்டாயமாக இழுத்து செல்ல அவளை பின் தொடர்ந்த படி.... எங்கம்மா ? ...என்னைய உள்ள தேடுவாங்க ,ஏன்  இப்போ தோட்டத்துக்கு கூட்டிட்டு வரீங்க என்றபடி செல்ல..,'பேசாம வாங்க ...உங்களுக்கு ராம் எங்க இருக்காருன்னு காட்றேன்', என்பதற்குள்... அவர்கள் நேத்து அமர்ந்திருந்த பெஞ்சை அடைய அங்கே ராமன்  சுருண்டவாறு
உறங்கிகொண்டிருந்தான். அதிர்ந்த சுப்பண்ணா!! ஓடி சென்று தட்டி எழுப்ப,"ராம் தம்பி!! ராம் தம்பி... இங்க ஏன் படுத்திருக்கீங்க, எழுந்திருங்க!" என்று அலற மெல்ல எழுந்து கண்களை கசக்கியவன் எதிரே தோட்டத்தில் உள்ள பூக்களோடு பூக்களாக அம்ரூ புன்முறவலுன் நிற்க பதட்டதுடன் உடன் நின்றிருந்தார் சுப்பு.

     இன்முகத்துடன் அவன் சோம்பல் முறிக்க ,சுப்பண்ணா,"தம்பி ..என்ன இது ?இங்க வந்து படுத்திருக்கீங்க உங்கள எல்லாரும் எங்கலாம் தேடறோம்.. பொண்ணு வீட்டுகாரங்க வந்தாச்சி!! ஐயா... வேற கோபமா இருக்காரு "என கூற நினைவு வந்தவனாய்... "நேரம் ரொம்ப ஆகிடுச்சா !!!"என்றபடி சட்டென எழ ..,".சுப்பு,இருங்க நான் போயி ஐயா கிட்ட சொல்லிட்டு வரேன் என்று நகர முற்பட ,சுப்பண்ணா கையை பிடித்தவள்," அண்ணா..  போயி எல்லார் முன்னாடியும் சொல்லாதீங்க.. இவரு வெளிய போயிருக்காருன்னு பொண்ணு வீட்டு காரங்கிட்ட சொல்லிருக்காங்க என்றாள். இதனை கேட்டதும் சட்டென சிந்தித்தவன்... ,"அப்படினா..சுப்பண்ணா ..நீங்க ஒன்னு பண்ணுங்க..என் ரூம்ல போயி யாருக்கும் தெரியாம என் டிரஸ் எடுத்துட்டு வாங்க..நான் தோட்டத்து பாத்துரூம்ல குளிச்சிட்டு வாசலை வழியா வரேன் !!" என்று கூற குழம்பிய சுப்பண்ணா அம்ரூவை நோக்க அம்ரூ ராமை நோக்கினாள். அவனை புன்னகையுடன் தோல்களை குலுக்கியபடி "உங்களுக்கு மட்டும் தான் தெரியுமா!!" என்றான்.
வேகமாக போங்கண்ணா!! மணியாகுது என்று விரட்ட எட்டுகால் பாய்ச்சலில் நகர்ந்தார் சுப்பண்ணா.

"நீங்க, போ!!...பின்னாடியே வரேனுதான சொன்னீங்க ,ஏன் இங்கேயே தூங்கிட்டீங்க " என்று வினவ அவன் அதற்குள் "அச்..அச் " என்று தும்ப," பாருங்க !!இப்படி பனிலபடுத்தா.. இப்படிதான் " என்றாள் அக்கறையுடன். உள்ளூற மகிழ்ந்தவன் ,"வரலானு தான் நினைச்சேன் ..நேத்தி நிறைய சுத்திட்டேன் அலைச்சல்... டென்ஷன்.. உடம்பெல்லாம் வலி ,அசதில தூங்கிட்டேன்.. எப்போ தூங்கனேன்னு எனக்கே தெரியல ..."  என்றான்.  "இப்போ பரவாயில்லையா?! " என்றவளிடம் 'ம்ம்ம்...மேடம் கிட்ட பேசினது அப்புறம் மனசு பரவாயில்ல ஆனா..உடம்பு வலி இன்னும் போகலை ' என்று மறுபடி சோம்பல் முறிக்க ..,அம்ரூ அவனை வைத்தகண் மாறாது பார்த்து கொண்டிருக்க .. அதனை கண்டவன் சற்று மனம் குளிர்ந்து திரும்ப நோக்க .. பார்வையின் இடையே ஏற்ப்பட்ட மோதலால் இருவருமே திரும்பி கொண்டனர். சற்று நேரத்தில் கையில் உடையுடன் சுப்பண்ணா வந்து சேர,"தம்பி இதான் மேல இருந்தது!! ..சீக்கிரம் வாங்க..நல்ல நேரம் போகுது!!"என்று அவன் கையில் திணிக்க.. வாங்கியவன் சட்டென திரும்பி ..,"அம்ரூ இங்கேயே இரு ..இதோ ஐந்து நிமிஷத்துல வந்திடுறேன் என்றவன் தன் கைகடிகாரத்தை கழற்றி அவள் கையில் திணித்தவாறு..வச்சிக்கோ வந்து வாங்கிக்குறேன் என்று வேகமாக நகர்ந்தான்.சுப்பு,"சரி அம்ரும்மா!! நீங்க இங்கேயே இருங்க உள்ள ஐயா என்னைய தேடறாரு..நான் போயி விஷயத்தை சொல்லுறேன்.. நீங்க இருந்து கூட்டிட்டு வாங்க!!  என்று சென்றார்.சற்று நேரத்தில் புதரின் அருகிலிருந்த ரூமிலிருந்து அவன் கையில் கழற்றிய உடையுடன் வெளியே வர அமிர்தா அதே பெஞ்சில் அமர்ந்திருந்தாள். வெளியே வந்தவன் புன்னகையுடன், "எப்படி ..ஓகே வா?"என்று கண்சிமிட்ட "ம்ம்ம்.. பல்லவி பார்த்தா அசந்திடுவாங்க"" என்ற பதிலை எதிர்பாராதவன் சற்று சுருக்கிய முகத்துடன் அருகில் வந்தான் ... அவள் கையிலிருந்த கடிகாரத்தை வெடுக்கென பிடுங்கி தன் கையிருந்த உடையை "இந்தா.. இந்த டிரஸை கொண்டு போயி என் ரூம்ல வை என்று திணித்தவன். நான் முன்னாடி வழியா வரேன் என்று "நாம்ப ஓன்னு கேட்டா!! இவ ஓன்னு சொல்லறா!!" என்று முணறியபடி நகர்ந்தான். சற்று சிலிர்ப்புடன் அவன் ஆடைகளோடு அமிர்தா உள் செல்ல நுழைய வேணு தாத்தா அம்ரூவை கண்டு சற்று குழப்பத்துடன் சந்தேக பார்வை வீசி கொண்டிருந்தார்.






Continue Reading

You'll Also Like

166K 14.3K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
63.1K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
88.4K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
53.1K 3.7K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...