இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.2K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-4

442 22 0
By Gayathrisivak

          பறவைகளின்    கீச்சல்.. ,பனிப்படர்ந்த தில்லி இரயில் நிலையம்.., ஆள் நடமாட்டம் குறைந்த ப்ளட்பாரம்.. அதிகாலை 3:30 மணி..   வாடிய தாமரையயைப் போல்  மயங்கிய நிலையில் தனியே அங்கிருந்த பெஞ்சில் அமர்திருந்தாள் அமிர்தா. கையில் ஒற்றை தண்ணீர் பாட்டில் ,முகம் அறியா மனிதர்கள், மொழி அறியா தில்லி நகரம் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.தில்லி குளிர் மேலும் அவளை நடுங்க செய்தது. வீட்டை நினைக்கையில் அழுகை பொத்து கொண்டு வந்தது.அப்பாவின் வார்த்தைகள் அவளை நிலைகுலைய செய்தது.தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.மூச்சிரைத்தபடி அவளருகில் வந்து நின்றான் கிரண்.

"வாங்க அமிர்தா ... இரயில் நிலைய போலீஸ் கிட்ட போகலாம்,அவனுங்க ரொம்ப தூரம் ஓடிடானுங்க பிடிக்க முடில..உங்க பேக் மட்டும் இல்ல பக்கத்து பக்கத்து கம்பாட்மெட்டிலும் நிறைய எடுத்து இருக்கானுங்க.. அழாதீங்க... வாங்க போலாம்"என்று கிரண் தேற்றவும்.செய்வதறியாது படப்படபுடன் கண்களை துடைத்தவாறு அவன் பின் தொடர்ந்தாள் அமிர்தா.
அங்கு முன்னே சிலர் புலம்பி கொண்டிந்தனர்.கிரணுக்கு தெரிந்தவர் அங்கிருந்ததால் இவளை உட்கார செய்து உள் சென்றவன்,ஒருவருடன் வெளியே வந்தான்.

வந்தவர் இருவரையும் வேறு அறைக்கு அழைத்து சென்றார்.சொல்லுங்க மிஸ்..என்னாச்சு? என அவர் தமிழில் கேட்க நா.. வற்றிய அமிர்தாவால் வாய் திறக்க முடியவில்லை.அவளின் நிலையை கண்ட கிரண் அவனே தொடர்ந்தான் , "தீபக் ...தில்லி ஜங்கஷன் சற்று  தொலைவில் இரயில்   கொஞ்சம் நேரம் நிறுத்தினாங்க.. ஏதோ கூச்சல் கேட்க ஏட்டி பார்த்தேன். அப்போது நால்வர் நன்கு குடி போதையில் அங்கிருந்தவங்களிடம் பிரச்சனை செய்ய நான் போய் அவர்களை மிரட்டி இறங்க சொன்னேன்.அப்பொழுது அதில் ஒருவன் போதையில் என்மேல் விழ தள்ளிய போது வாயில் இருந்த பீடாவை துப்பிட்டான் .நான் தள்ளிவிட்டு  கழுவ சென்றேன்.. தண்ணீர் ஒழுங்கா வராதால் இவங்க எனக்கு உதவ பாட்டில் கொண்டு வர ..  ,சமய பார்த்திருந்த அவர்கள் வண்டி நகரவும் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு இறங்கி ஓட செய்தனர். சத்தம் கேட்டு நாங்க போன போது தான் இவங்க பேக்கையும் எடுத்து கொண்டு ஓடியது தெரிய நான் இறங்கி தூரத்த போனேன் அதற்குள் அவர்கள் எங்கயோ ஓடி மறைஞ்சிடாங்க என நடந்தவற்றை சொல்லி முடிக்க உள்நுழைத்தார் மற்றொரு போலீஸ் ... இவருவரும் ஏதோ ஹிந்தியில் பேசி கொள்ள கிரணும் பதில் கூறினான்.

பேசிக் கொண்டிருந்த போது பல முறை அலரிய அவன் மொபைலையின் அழைப்பை துண்டித்து விட்டு தீவிரமாக பேசிகிட்டே மூவரும் வெளியே சென்றனர். ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.சற்று நேரம் சென்று உள்ளே வந்தவன் . "அமிர்தா... ஏதோ லோக்கல் ஏரிய பசங்க தான் போல முன்கூட்டியே ப்ளான் பண்ணி தான் ஏறியிருக்கானுங்க.. கண்டு பிடிச்சிடலாம் கவலை படாதீங்க .. சில தகவல் மட்டும் கேட்டாங்க சொல்லிருக்கேன்.. ஒரு கம்பளைட் மட்டும் தர சொல்லுறாங்க ... குடுத்துட்டு வந்துடலாம் வாங்க.." என்று முடித்தான்.

விழி எடுக்காமால் அவன் கூறியதை கேட்டவள் சரி என்று எழ..நினைவு வந்தவளாய்,"கிரண்.. உங்க மொபலை தரிங்களா ... என்னோடது பேக்கோட போயிடுச்சி வீட்டுக்கு பேசனும்.. என மெல்லிய குரலில் கேட்க ,கையிலிருந்த மொபலை "இந்தாங்க..." என நீட்டினான்.

அவள் வாங்கவும், "ராம் காலிங்..." என திரையில் காட்டவும், கிரண்.. உங்களுக்கு தான் என மறுபடி நீட்டினாள். வாங்கி சற்று திரும்பியவன் அழைப்பை ஏற்றான்."ராம் வந்துட்டேன் டா ... ஸ்டேஷன் ல தான் இருக்கேன், இங்க ஒரு பிரச்சனை டா.. இரயில்வே போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கேன்.. அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க ..நீ  கொஞ்சம் அம்மா ட சொல்லாம கிளம்பி வரிய .. ஒன்னும் சிரியஸ் லாம் இல்ல நீ கிளம்பி வா.. சொல்றேன்... என கட் செய்து நீங்க பேசுங்கன்னு அவளிடம் நீட்ட.. அவள் மிகுந்த படபடப்புடன் அவள் அப்பா விற்கு கால் செய்தாள்.

அமிர்தா,"ஹலோ.. அப்பா... நான்தான் அமிர்தா வந்துட்டேன் பா.". சிறிது அமைதி..
பா..பாத்திரமா வந்துட்டேன் பா..ஒன்னும் பிரச்சினை இல்ல.."
சிறு அதிர்ச்சியுடன் பார்த்தான் ,கிரண்.
அவனை பொறுப்படுத்தாமல் அவள் தொடர்தாள் ,'போன் கீழ விழிந்திடுச்சி பா .. வேலை செய்ய மாட்டுது.. அதான்... இது இங்க இருந்தவங்க கிட்ட வாங்கி பேசறேன்.. அம்மா ட சொல்லிடுங்க போனை சரி பண்ணிட்டு நானே கூப்பிடுறேன்னு.. அப்பா.. பஸ் வருது .. வைங்க .. என்று பட்டென்று கட் செய்ய .. அவளை தூக்கிய புருவத்துடன் வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கிரண்..





Continue Reading

You'll Also Like

238K 6.1K 147
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
116K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...
513K 16.9K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
66.1K 2.4K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...