இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.2K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-68

தேடல்-67

602 15 3
By Gayathrisivak


பொழுது கடந்து போக ,கதிரவன் மறைந்து போக ,ராமன் மனம் கரைந்து கொண்டிருந்தது.
தன் அறையில் எதையோ ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தவனை தட்டி எழுப்பியது சுப்பண்ணாவின் கூரல்.

சுப்பண்ணா,"உள்ள வராளாங்களா?!!"

ராம்,"வாங்க..!!"

சுப்பண்ணா,"தம்பி!காபி!?"

ராம்,"இப்படி வச்சிட்டு போங்கண்ணா!!?"

திரும்பியவர் கால்கள் அசையாது நிற்க ராமன்,"எதாவது சொல்லனுமா!?"

சுப்பு,"தம்பி... கோபமா !! இருக்கமாதிரி தெரியுதே!!"

ராமன்,"அதெல்லாம் இல்லை!!நீங்க சொல்லுங்க!!"

சுப்பு,"தம்பி..!மதியம் அமிர்தாம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு ,ஹாஸ்பிடல் போயிருந்தேன்!!?!"

ராமன் சற்று பெருமூச்சு விட்டபடி,"என்னாச்சு!? ஒழுங்கா.. சாப்பிட்டாளா..!?"

சுப்பு,"இல்லை தம்பி!! அமிர்தாம்மா..,ஏதோ மாதிரி இருந்தாங்க!!,என்னை பார்த்ததும் சந்தோஷ பட்டாங்க !!கொஞ்ச நேர பேசிட்டு இருந்தாங்க ஆனா அப்புறம் ,சாப்பிட பிடிக்கலை கொண்டு போக சொல்லிட்டாங்க ..தம்பி!!"

ராமன் சற்று வேகத்துடன்,"பார்த்தீங்களா!!சுப்பண்ணா!!அப்படி என்ன அவளுக்கு அவ்வளவு திமிரு!!அவ வர சொன்னாலாம் ,நான் போயி பார்க்கலையாம்,அதுக்கு இவ்வளவு விம்பு பிடிச்சிட்டு இருக்கா!!, கொஞ்சமாவது புரிஞ்சுக்கனும் இல்லை,அப்பவும் நான் வந்து போன் பண்ணேன்...வேணும்ன்னே ,தூங்கிட்டேன்னு சொல்ல சொல்லி கிரண்கிட்ட சொல்லிருக்கா!!,அப்பறம் இப்போ வந்து.., என்னலாம் பேசுறா தெரியுங்களா!!உயிரோட இருந்தா.. செய்யாறாலமா!!
அதுக்காக வா, நான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்!!"

சுப்பண்ணா,"தம்பி!!நான் ஒன்னு சொன்னா கோபிச்சிக்க மாட்டீங்களே!!?"

ராமன் சற்று திகைப்புடன்,"சொல்லுங்க சுப்பண்ணா!!?"

சுப்பு,"தம்பி..! உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை,இருந்தாலும் ஞாபகபடுத்துறேன்,அமிர்தாம்மாக்கு உடம்பு சரியில்லைல ,இந்த மாறி சமயத்துல, மனசு கண்டதை நினைச்சு குழப்பிக்கும் தான, அப்படி ஆகிடுச்சின்னா.., என்ன ஆகுறதுன்னு பயம் வரும் !!, அமிர்தாம்மா அங்க நடந்ததை என்கிட்டையும் சொன்னாங்க!! அவங்களுக்கு அவங்க மேலே ரொம்ப கோபமா!! அவங்க என்கிட்ட சொன்னாங்க,"சுப்பண்ணா!!எனக்கு நல்லா தெரியுது !!அவரு எனக்காக , எவ்வளவு கஷ்டபடுறாருன்னு , அதனாலதான், அவரு கொஞ்சமாது தூங்கட்டுமுன்னு அப்படி சொல்ல சொன்னேன், அப்புறம் மனசு அவரு கூடவே இருந்தா பரவாயில்லைன்னு தோணுச்சு ,அதனால அப்படி பேசிட்டேன்,சுப்பண்ணா சிலசமயம் தோணுது..,இதுவரை வாழ்க்கை பூர அவரு எல்லாருக்காகவுமே ஓடிட்டு இருக்காரு,இப்போ.. நம்மாலும் அவரை இப்படி அலைய விடுறோமேன்னு தோணுது ! நீங்க சொல்லுங்க.., இப்ப கொஞ்ச நாளா பழக்கமான என்மேலே இவ்வளவு அன்பு வச்சிருக்காறே!,அவங்க அம்மா மேல எப்படி பாசமா இருந்துருப்பாரு.
அப்புறம் எனக்கும், எதாவது
ஆகிடுச்சின்னா ,அவரு ரொம்ப உடைஞ்சு போயிடுவாறேன்னு மனசு கிட்ட சேர்க்க விடமாட்டுது. பேசமா யாருக்கிட்டையும் சொல்லாமா..., எங்கையாது போயிடலாமான்னு தோணுது!!அப்புறம் அப்பவும் அவரு என்னைய தேடி அலைவாரேன்னு தோணுது..!!நான் என்ன செய்ய சொல்லுங்க!!?" அப்படின்னு அழுத்துட்டாங்க தம்பி!!" இடிந்து போயி அமர்ந்தான் ராமன்.

அருகே வந்து நின்றவர்,"தம்பி!! நிறைய பேர் நம்மை சுத்தி இருந்தாலும் எதிர்பார்த்து ஏங்குற ஆள் கூட இல்லைனா..!!உலகமே தனிச்சு விட்டமாதிரி இருக்கும்.
நம்ம அமிர்தாம்மாக்கு அப்புறம் உங்களுக்காக!! உங்க மனசை புரிஞ்சிட்டு ,இப்படி வருந்தபடுறது , அம்ரூம்மா தான்!!
ஆனா அவங்க பயங்கற குழப்பத்திலையும் பயத்திலையும் இருக்காங்கன்னு தெரியுது! உங்க முன்னாடி நல்லா இருக்கமாறி நடந்துக்குறாங்க அவ்வளவுதான். அவங்க குடும்பத்துக்கு ஏன் தெரிய வேண்டாம்னு சொன்னாங்கன்னு தெரியுமா!!?"

வெடுக்கென நிமிர்ந்த ராமன்,"தெரியாதே!!?"

சுப்பு,"உங்ககிட்ட சொல்ல வேண்டாம்முன்னு சொன்னாங்க !!எனக்கு மனசு கேட்கல உளறிட்டேன்!!நீங்களே அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க!! அவங்களுக்கு இப்போ நீங்க மட்டும் தான் உலகமே!!இன்னொரு தடவை இப்படியெல்லாம் நினைக்காதீங்க!!?" என்று சற்று வேகமாக பேசியவறை இமைக்காது பார்த்த ராமன் சற்று இடைவெளி விட்டு,"தப்பு பண்ணிட்டேன் சுப்பண்ணா..!மன்னிச்சுடுங்க!!?" என்று தணிந்து போனான்.

சுப்பு சற்று கலக்கதுடன்,"நான் தப்பா பேசியிருந்த மன்னிச்சிடுங்க தம்பி!!
அவங்கள அப்படி பார்த்தது ,எனக்கு‌ மனசு கேட்கல!?"

ராம்,"நீங்க சொன்னது எதுமே தப்பில்லை!!நான்தான்‌ மடையன் ,புரிஞ்சிக்காம அப்படி கோபபட்டேன்!!அவ கூடவே இருக்கனுன்னு கூட்டுட்டு வந்துட்டு ,இங்க தான இருக்கான்னு அலச்சியமா இருந்துட்டேன்!!நான்‌ என்ன பண்ணனும்னு இனிமே தெளிவா முடிவு பண்ணிக்குறேன், ரொம்ப தேங்க்ஸ் சுப்பண்ணா!!"

சுப்பு,"அய்யோ தம்பி!!நான் என்ன பண்ணனேன்,நான் சொல்ல வந்ததே வேற! ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன்!!நம்ம ஹாஸ்பிடல நிறைய பேர் வந்து போவாங்க தான்!ஆனா எனக்கு என்னமோ ,யாரோ அமிர்தாம்மா ரூமை சுத்தி வரமாறி தோணுச்சி!!அவங்க உடம்பும் பலகீனமாக இருக்கமாறி இருக்கு !அதை தான்‌ சொல்ல வந்துட்டு, இப்படி எதையோ பேசிட்டு இருக்கேன்".

ராம்,"சுப்பண்ணா! நீங்க எதும் கவலைப்படாதீங்க!! நான் பார்த்துக்குறேன்!"என்று எழுந்தவன் திரும்பி "நான் ஹாஸ்பிடல் தான் போறேன் ,யாராவது என்னைய கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க!!" குழம்பிய படி நின்றிருந்தவர்," தம்பி காப்பி...!!‌

ராம்,"நான்‌ என்‌ அம்மூ கூட போயி குடிச்சுக்குறேன்!!"என்று பறந்து சென்றான்.

ஆசையாக மெல்ல கதவை திறந்தவன் அவள் அங்கு இல்லாமையால் உள்ளே தேடியவன் தென்படாததால் நர்ஸை விசாரிக்க
மீராவும் அம்ரூவும் கீழே கார்டன் பக்கம் போனதாக தெரியவர கால்கள் வேகமாக விரைந்தது.

மீரா தனியே அமர்ந்திருக்க ராமனை கண்ட மீரா ,எழுந்திருக்க.. அமைதியாக வர சொன்னவன் தானே பார்த்து கொள்வதாய் அனுப்பி வைத்தான்.

மெல்ல அவள் பின்னே அமைதியாக சென்று அமர்ந்தான்,அவனை கவனியாதவள் எதையோ ஆழ்ந்து யோசித்திருந்தாள்.உள்ளுணர்வு ஏதோ கூற திரும்பியவள் பின்னே அவளை உற்று நோக்கி கொண்டிருந்தவனை கண்டு திடுக்கிட்டவள் எழுந்து செல்ல முற்பட கைபிடித்து கண்களால் அமர சொன்னான்.

அம்ரூ,"இப்போ எதை உடைக்க போறீங்க!!எதையும் கேட்கிற.., பார்க்குற.. , மனநிலைமையில நான் இல்லை!!என்னை கொஞ்சம் தனியா விட்ட நல்லாருக்கும்!!"

எழுந்து வம்பாக அமர வைத்தவன் அருகில் சென்று அமர்ந்தான்.எதும் பேசாமல் இருவரும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

மெதுவாக ராமன்,"அம்மூ!!நான் நடந்துகிட்டது தப்புதான்,ஆனா மன்னிப்புலாம் கேட்கமாட்டேன்,
நான் இருந்த மனநிலை ,நீ பேசினதும் கோபம் அதிகமாகிடுச்சி ,'என் கோபத்தையும் நீ தான் தாங்கிக்கனும்' !! என்றவன் திரும்பி நேரே பார்த்தவன் ,"ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கோ, என்ன கோப பட்டாலும்,எங்க போனாலும் !!உன்கிட்ட தான் ..,நான் வருவேன் ,அதனால வரும்போது நீ என்மேல கோபமா இருந்தாலும் பரவாயில்லை.., எனக்காக நீ காத்துட்டு இருப்பன்னு எனக்கு துடிக்கனும்!!அது போதும் எனக்கு புரியுதா!!?"

இதனை கேட்டவளுக்கு அவ்வளவுதான், அவ்வளவு மனக்கவலையும்.. கோபமும்.. அனைத்தும் காணாமல் போனது.
அப்படியே அவனது‌ மடியில் சரிந்தாள்.நினைவு வந்தவள் வெடுக்கென எழுந்தாள்.

ராம்,"என்னாச்சு அம்மூ!!?"

அம்ரூ,"அச்சோ ஞாபகமில்லாம லூசு!!, இப்படி வெளியில அதுவும் ஹாஸ்பிடல் டீன் மடியில படுத்தா!!என்ன நினைப்பாங்க பார்க்கறவங்க?!!"

ராம்,"எவன் என்ன நினைச்சாச்சலும் எனக்கு கவலையில்லை!!அதோட என் காதல் மனைவி ,என்மடியில படுத்தா யாரு என்ன நினைப்பாங்க!!? நீ படு!!"

இதனை கேட்ட அம்ரூ சற்று வெட்கப்பட ,"ஆமா!!ஆமா!! வாங்க !!மேல போலாம்!!" என்று எழுந்திருக்க

ராம்,"அம்மூ!!என்னடி சொன்னேன் !!ஏன் இப்படி வெட்கப்படுற!!?"

கட்டுப்படுத்திய அம்ரூ,"நீங்க ஒன்னும் சொல்லலை!!போலாம் வாங்க!! "வம்பாக மேல இழுத்து சென்றாள்.

லிப்டில் மேலே செல்லுகையில் அம்ரூ மெல்ல திரும்பி,"இங்க உங்களையும் என்னையும் தேடி கண்டுபிடிக்க முடியாத ரகசிய அறை எதும் இருக்கா!!?"

ராமன் புருவங்களை உயர்த்தி பார்த்தவன், சிரிப்பை கட்டுபடுத்தியவாறு புரிதும் புரியாதபடி," இரகசிய அறையா!! எதுக்கு! ?இது ஹாஸ்பிடல் அம்மூ,இங்க எப்படி இருக்கும்!!?,இந்த ரித்திக் வேற கால் பண்ணிட்டே இருக்கான்!!"என்று மொபைலை எடுத்து நோண்ட

முணறியபடி அம்ரூ சலித்து திரும்ப ராமன் சிரித்தபடி நின்றிருந்தான்.

லிஃப்ட் அவர்கள் ப்ளோரை அடைய திறந்த கதவிலிருந்து வெளியே செல்ல முற்ப்பட்டவளை இழுத்து பிடித்தவன்,"இது நம்ம ப்ளோர் இல்ல அம்மூ !!"

எட்டி பார்த்தவள் "இது நம்ப ப்ளோர்தாங்க!!"

ராம்," நீ வா உள்ள, நான் தான் சொல்லுறேன் இல்ல!!"என்றபடி லிஃப்டில் கீழ் பட்டனை அழுத்த
அம்ரூ,"கீழே ஏன் அழுத்துறீங்க!!?"

ராம் மொபைலில் கால் செய்தபடி,"பேசாம நில்லு!!?"

ராம் மொபைலில்,"மீரா..!!நான் அமிர்தாவை வேற செக்கப் கூட்டிட்டு போறேன்.அதனால நானே இன்னைக்கு பார்த்துக்குறேன்.நீங்க கிளம்புங்க!!"

அதற்குள் கீழே இறங்கிவிட பேசியபடியே முன்னே சென்றவனை எதும் பேச முடியுமால் பின் தொடர்ந்து சென்றாள்.

வெளியே ரோட்டை அடைய அம்ரூ,"நில்லுங்க .. எங்க கூட்டிட்டு போறீங்க!!?கொஞ்ச நேரத்துல ஜானு வந்துட்டு தேடுவா என்னை!!?"

ராமன் திரும்பி ,"அம்மூ சிக்கிரம் வா!!ரகசிய அறைக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகனும்ல!!"

அம்ரூ திகைத்து நின்றவள்,"நான் சும்மா தான் கேட்டேன்!!?"

திரும்பி பின்னே வந்தவன் ,"அம்மூ நீதான கேட்ட அதுக்கு தான் கூட்டிட்டு போறேன்!"

அம்ரூ கைகட்டியபடி,"எங்க?!"

ராம் ,"இங்க கொஞ்சம் பக்கத்துல பின்னாடி எனக்குன்னு ஒரு பிரைவேட் பிளேஸ் இருக்கு!! அதிகபட்சம் யாருக்கும் தெரியாது!!கிரணுக்கு கூட!!"

அம்ரூ சற்று யோசித்தபடி,"ஆமா ஏன் நடந்து போறோம்!?"

ராம்,"எதாவது ரகசியமா செய்யனுன்னா பிளான் பண்ணி தான செய்யனும்!!என் கார் எடுத்துட்டு போன கண்டு பிடிச்சுடுவாங்கள!!?,அதோட நீ ரூம்லியே அடைச்சு இருந்தா கண்டதை யோசிப்பல, அதான் இப்படி வேடிக்கை பார்த்தமாறி நடத்தி கூட்டிட்டு போறேன்!!"

அம்ரூ,"நான் நடக்க கூடாதுன்னு மீரா சொன்னாங்களே!!"

ராம்,"என்னைய தவிற யாரு சொன்னாலும், தவறாம கேட்கிற அம்மூ நீ!!,இப்ப நான் டாக்டர் ஆ!!மீரா டாக்டர் ஆ!!?"

அமைதியாக நின்றிருந்தவளை சரி வா.. என்றுபடி நகர மறுபடியும் அப்படியே இருந்தவளிடம் அருகே வந்தவன்,இப்போ என்னதான் டி பிரச்சினை உனக்கு?!

அம்ரூ நிமிர்ந்து பார்த்தவள் மெல்ல கையை தூக்கி நீட்டியபடி,"என் கூடவே வாங்க !!மெதுவாவே போகலாம்!!"

புன்னகைத்தபடி கையை பிடித்தவன் மெல்ல நகர்ந்து செல்ல அல்லி மலர் அருகே தவழ்ந்து சென்றது.





































Continue Reading

You'll Also Like

317K 12.3K 55
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
26.9K 1.4K 14
As I said earlier, enaku description ezhutha therla. yaarachu enaku description ezhutha solli kudunga makkale. It's love between Divya and karthick...
24.1K 619 46
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
117K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...