இராமன் தேடிய கண்கள்

De Gayathrisivak

20.8K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... Mais

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-59

205 13 0
De Gayathrisivak

ஏன் இங்க இவ்வளவு கூட்டம்,பேஷண்ட்டை தொந்தரவு பண்ண கூடாதுன்னு தெரியாதா!!? என்ற குரல் வந்த திசையில் வெள்ளை நிற கோட் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அணிந்து நின்றிருந்தான் ராமன்.

மேகா,"வாப்பா !!உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்!!

அனைவரும் ஆவலுடன் வரவேற்க ,
"பாட்டி!!!பார்த்தாச்சா!!?திருப்தியா!!?
நான் பாத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் !அங்க வச்சி மீதியா பேசிக்கலாமா!?" என்றவனிடம் கட்டிலை விட்டு எழுந்தபடியே ,
"இவன் இருக்கானே!!திருப்தியா பார்த்துட்டேன்!!, மீதியை எப்படி பேசிக்கனுமோ, அப்ப பேசிக்கிறேன்" என்றபடி அம்ரூவின் அருகே சென்று அவர் கையிலிருந்த பையிலுள்ள குங்குமத்தை நெற்றியில் இட்டபடி ஆண்டவன் எப்பவும் துணையாவே இருப்பான் என்று ஆசீர்வதிக்க பணிவாக அமர்ந்திருந்தாள் அம்ரூ!.

குடும்பத்தார் அனைவரும் வெளியேற, நண்பர்களை அவன் அறையில் சென்று காத்திருக்க சொல்ல, அவர்களும் ஒருவர் பின் ஒருவராய் சென்றனர்.

கிரண் மட்டும் இருக்க உள்ளே நுழைந்த நர்ஸிடம் ராம்,"நீங்க கூட்டிட்டு போங்க !!டெஸ்ட் எல்லாம் முடிசிட்டு வந்ததும் ,எனக்கு உடனே இன்பர்ம் பண்ணுங்க!!சரியா!!?" என்றவன் கிரணை நோக்கி," நமக்கு ஒரு வேலை இருக்கு கிரண் ...வரீயா!!.. வேற எதும் வேலை இருக்கா!!?"

கிரண்,"அதெல்லாம் இல்ல ராம்!!அம்ரூ கூட போக வேண்டாமா!?"

ராம்,"அதெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க !!நீ வா !!"என்றபடி
அவனுடன் வெளியேற அம்ரூவிற்கு பொத்துகொண்டு வந்ததது.

எதும் பேசாமல் அமர்ந்திருந்தவளிடம் அந்த நர்ஸ்,"மேடம் ...!என்னைய தெரியுதா!!?" என்றபடி கையிலிருந்த பேக்கை நீட்ட அம்ரூ யூகித்தவள்,"ம்ம்ம்... நாம அன்னிக்கு அமித்தை பார்க்க வந்தப்போ பேசனோம் தான!!?"என்றாள் உற்சாகமாக..

நர்ஸ்,"பரவாயில்ல மேடம் ..!ஞாபகம் வச்சிருக்கீங்களே!!?இந்த டிரஸ் மாத்திக்கோங்க !!நாம டெஸ்ட் எடுக்க போலாம் !!"

அம்ரூ ,"ம்ம்.. ஐந்து நிமிஷத்தில வந்துடுறேன்!!" மாற்றி கொண்டு வர வில் சேர் எடுத்து வைத்திருந்தார் அந்த நர்ஸ்.

அம்ரூ,"நான் நடந்தே வரவா!!?"

நர்ஸ்,"இல்ல மேடம்!!உங்களை நடக்க விட கூடாது!! வாங்க நான் பார்த்துக்குறேன்!!"

அம்ரூ சென்று அமர,"நாம எங்க போறோம் !!என்ன டெஸ்ட் எடுக்கனும் !!?"என்றாள் .

அவர் உறுட்டியபடி "மேடம் இன்னொரு 'எம் ஆர் ஐ' ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காங்க ,த்ரிடி வியூவிங்கு அப்புறம் இஇஜி எடுக்கனுமுன்னு சொல்லிருக்காங்க!!?" என்று
அடுக்க அம்ரூ ஏதோ புரிந்து கொண்டவள் போல் தலையாட்ட எம்ஆர்ஐ அறைக்கு சென்றனர்.

அங்கு ஒருவருக்கு முன்னே செய்து கொண்டிருக்க இன்னொருவரும் நிற்க இவரை வெயிட் செய்ய சொன்ன டெக்னிஷியனிடம் நர்ஸ் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் புரிந்து கொண்டவர் போல், அவரை இறக்கி இவரை சென்று படுக்க சொன்னார்.

அம்ரூவிற்கு வித்தியாசமாக தோன்ற முடித்துவிட்டு வந்தவள் அடுத்த டெஸ்ட்டுக்கு போகும் வழியில் ,"என்ன சொன்னீங்க !!உடனே அவங்க நம்மளை விட்டாங்க !!என்றாள்.

நர்ஸ்,"மேடம்!!நீங்க விவிஐபி பேஷண்ட் னு சொன்னேன்!!"

அம்ரூ சிரித்தபடி,"அப்படின்னு யாரு சொன்னா!!?"என்றாள் தான் தற்போது யார் என்பதை மறந்து.

நர்ஸ்,"ஏன் சிரிக்கறீங்க!! இதை யாராவது சொல்லனுமா!!? எங்க டீன் வந்து நேரடியா பார்க்கறாங்கனாலே!! நீங்க விஐபி தான்!! ஆனா உங்க ரூம்ல அவரு பேமிலியே இருக்காங்கனா!!? நீங்க விவிஐபி தான...!!" என்றவரை ஆர்வமாய் பார்த்தவள், சரி போலாம்!! என்றாள் பதிலேதும் பேசாமல்.

இப்படி பொழுது மெல்ல கடந்து செல்ல அவள் அறைக்கு பல பேர் வந்து சென்றனர்.இடையில் ஒருமுறை ராமன் வர , சில வினாடியில் அவரை அழைத்து செல்ல ஆள் வந்தனர்.கிரணும் காலையில் பேசியதிலிருந்து குழப்பத்திலிருக்க அவ்வபொழுது வந்து விசாரித்து செல்ல.,அவர்கள் பேசியதை புரியாமல் போனாலும் சில வார்த்தைகளை வைத்து தனது ஆப்பரேஷனை தள்ளி வைத்து இருக்கிறார்கள் என புரிந்து கொண்டாள் அமிர்தா!.

காலையிலிருந்த எடுக்கப்பட்ட டெஸ்டுகளும் போட பட்ட ஊசிகளும் களைப்படைய செய்ய சோர்ந்து படுத்திருந்தாள் அமிர்தா.

கிரணும் ராமும் ஒருசேர உள்ளே நுழைய ராமன் டிரிப்ஸ் ஸை பரிசோதித்தபடி ,"இப்போ எப்படி இருக்கு..?"என்றான்.

அம்ரூவிற்கு உள்ளுர பொங்கி வர அடக்கி கொண்டவள் மெல்ல தலையை மட்டும் அசைத்தாள்.

கிரண்,"சாப்பிடலானு சொன்னாங்களே...!?சாப்பிடுறீங்களா!!?"

அம்ரூ மெல்ல,"நர்ஸ் கொடுத்தாங்க !!" என்றாள்.

அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கண்ட கொண்ட ராமன்.,"எதாவது பண்ணுதா!?" என்றான்.

அம்ரூ மறுபடி இல்லை என்றபடி தலையை மட்டும் அசைக்க... புரியாமல் குழம்பியவன் திரும்பி கிரணிடம்,"நீ சாப்பிட்டியா?!" என்றான்.

கிரண்," நான் சாப்பிடறது !!இருக்கட்டும்...,நீ முதல கிளம்பு !!காலையிலேருந்து ஓரே டென்ஷனா!!அலைச்சிட்டு இருக்க..!!வீட்டிக்கு போயி குளிச்சிட்டு.. சாப்பிட்டு ..ரெஸ்ட் எடுத்துட்டு வா!!?நான் பார்த்துக்குறேன் அமிர்தாவை !!"என்பதை கேட்ட அம்ரூவிற்கு தாங்க முடியாமல் வீரூட்டென எழுந்து அமர்ந்தாள்.

அவளை கவனியாதவர்கள் உரையாடலை தொடர ராமன் கிரணை ஆமோதிப்பவன் போல் ,"சரி அப்போ நான் கிளம்பட்டா..?"என்றபடி அம்ரூவை பார்க்க அவள் பேய் அறைந்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளின் அருகே வந்தவன் அவள் போர்வையை சரி செய்த படி ,"நான் போயிட்டு வரேன்!!இங்க கிரண்..நர்ஸ் எல்லாம் இருக்காங்க ..!என்ன வேணுனாலும், தயங்காம கேளு!! "என்றவனிடம் என்ன சொல்லுவதென்றே புரியாதவள் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட, ராமன் வெளியேறினான்.

கிரண்,"நீங்க படுத்துகோங்க !!" என்றபடி அருகே இருந்த ஷோபாவில் சென்று அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் கிரணுக்கு கால் வர பேசியவன் அமிர்தாவிடம் ,"ராம் தான் என்னை கூப்பிடுறான் !!இதோ வந்திருறேன் !!என சென்றான்.

சற்று நேர இடைவெளியில் சடலேன
உள்ளே நுழைந்த ராமன்,"மேடம் தூங்கிட்டீங்களா!!?"என்று அருகே வந்தான்.

அம்ரூவிற்கு சந்தோசம் இருப்பினும் காட்டி கொள்ளாமல்,"என்ன வந்துட்டீங்க!!?"

ராம்,"ஒரு ரிப்போர்ட் பார்க்க மறந்துட்டேன் ..!அவன் கிட்ட கொண்டுவர சொன்னா ..தெரியல சொல்லுறான்!அதான் வந்தேன்!"

மறுபடியும் முகம் தொங்கிபோக ரிப்போர்ட்டை பார்த்தவனை கண்ணெடுக்காமல் பார்க்க திரும்பியவன் பார்வை சந்தித்து கொள்ள அருகே வந்து அமர்ந்தான்.

ராம்,"எதாவது சொல்லனுமா!!?"

அம்ரூ தயங்கியபடி தலையை குனிந்து கொள்ள நிமிர்த்தியவன்,"என்னாளும் தயங்கமா என்கிட்ட சொல்லு !!?"

மௌனம் காத்தவளின் கையை பற்றியவன்,"என்னாச்சு அம்மூ!!"

அம்ரூ,"ஒருவேளை ஆப்பரேஷனுக்கு அப்பறம் எனக்கு எதாவது ஆச்சுனா...?" என முடிப்பதற்குள் அவள் கையை அழுத்தியவன்
"இப்படிலாம் பேசின ...!என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது..!?" என்று கோபமாய் பேசியவனிடம் நான் சொல்லுறதை கேளுங்க..!,

ராமன்,"இதை மாறி பேசுறனா ..நான் கிளம்புறேன்!!"என எழ முற்பட்டவனை பிடித்தவள் ,
சரி நான் பேசலை ...!நீங்க போகாதீங்க!! என்றாள்.

இப்பொழுது ராமன் தனது கோர்ட்டை கழற்றியவன் அவள் பெட்டை சரி செய்த படி அவளை சாய்ந்து அமர செய்தான்.அவன் ஷோபாவில் அமர போக ..அங்க ஏன் போறீங்க !!?

உட்காரதான்..!!

நீங்க வீட்டிக்கு போகலையா!!?

நீதான போக வேணா சொன்ன !!?

அது....!!வந்து...!!இப்போ!!

அப்போ எதும் பேச வேணாமா?!!கிளம்பட்டுமா!!?

உங்க இஷ்டம்!!

ஏன் அதுக்கு முகம் இப்படி போகுது !? உனக்கு கிரண் தான் இருக்கனும் தான..!போயிட்டு அனுப்பறேன்.

நான் ஒன்னும் அப்படி சொல்லியே!!?

இப்போ என்ன தான் செய்ய சொல்லுற!!?

நான் எதும் சொல்லலை!! உங்க இஷ்டம் !!போகனுன்னா போங்க!!?

அருகே சென்று தனது கைகளாக அவள் இருகன்னங்களை பற்றியவன் ,"உனக்கு என்ன தோணுது...!!நான் இருக்கவா.. !?போகவா!!?" சிறிது கண்களின் உரையாடலுக்கு பின் அம்ரூ,"போகாதீங்க ப்ளிஸ்!!"என வாய் மலர்ந்தாள்.

அப்படி வா ... வழிக்கு !! மேடம் வாயிலிருந்த வரவைக்க எவ்வளவு பாடுபட வேண்டியதா இருக்கு!! என்றபடி அமர செல்ல அங்க ஏன்..?

இப்போ என்னதான்டி பிரச்சினை உனக்கு ..?

அங்க இல்லை ..!இங்க ..!!உட்காருங்க !! என்றபடி கட்டிலில் நகர்ந்து தனது பக்கத்தில் கையை காண்பிக்க ஆச்சரியமடைந்த ராமன்.

ராமன்,"அம்மூ ..!நீ என்ன பண்றன்னு தெரியுதா!!?"

அம்ரூ,"என்ன பண்ணறேன்!!?பக்கத்துலதான உட்கார சொன்னேன்!!?என்று புரியாமல் முழிக்க

ராமன்,"ஓஓ..!!அப்போ நான் அவ்ளோ பக்கத்தில உட்காரலாமா!!? உனக்கு எதும் பிரச்சினை இல்லையா!!?"

அம்ரூ,"என்ன பிரச்சினை!!!?"

ராமன்,"ஆனா எனக்கு தெரிஞ்சு ஆகனும்..!

அம்ரூ,"என்ன தெரிஞ்சுகனும்!!"

ராமன்,"நான் யாரு உனக்கு!!? என்னைய ஏன் அவ்ளோ பக்கத்தில உட்கார சொல்லுறனு சொல்லு!!!!"

அம்ரூ,"!!!!!!!!!"























Continue lendo

Você também vai gostar

12K 471 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...
53.1K 3.7K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...
214K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
19.2K 1.7K 45
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...