இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

20.8K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-50

261 15 0
By Gayathrisivak

மேகநாதன்,"ஏன்பா... கிரண்!!,ஒரு மாசம் மேல ஆச்சு ... ,ராம் ஹாஸ்பிடல் பக்கம் வந்து !!,எப்படி இருக்கான் ,எங்க போறன்!?, எப்போ வரான்,!? ஒன்னுமே தெரியல!!! ஏதாவது விசாரிச்சுயா !!?"

கிரண்," எனக்கு ஒண்ணுமே புரியல அப்பா!! அன்னைக்கு கூடம் நல்லா இருந்தான்!! அதுக்கு அப்புறம் என்னாச்சு தெரியல!!! இப்படி தான் இருக்கான், பல்லவிக்காக....., இவ்வளவு வருத்தப்படுவானு நான் நினைக்கலை!!,தெரிஞ்சிருந்தா, நான் அப்பவே ஏதாவது பண்ணி இருப்பேன்!!!அவன்கிட்ட என்னால பேசவே முடியலை!!!".

மேகநாதன்,"அதுக்காக... அவனை இப்படியே விட்டுட முடியுமா!!என்னனு பேசு பா...!! நீதான் அவன்கிட்ட பேச முடியும்!! உன் தாத்தாவும் எதுவும் கேட்கமா அமைதியா ... இருக்காரு!!"

மோகன்,"ஆமாம் ணா...ஹாஸ்பிடல் பிரஷ்ர் தாங்க முடியலை !!!

மேகநாதன்,"வாப்பா.... மோகன் !!!,என்னாச்சு அந்த பிரச்சினை!!!"

மோகன்,"எங்க அண்ணன்!! என்னால சமாளிக்க முடியலை!!!,அவன் வராத நேரம் பார்த்துதான்...எல்லா பிரச்சினையும் ஒன்னா.... வருது!!,நம்ம லாயர் கிட்ட பேசிட்டு தான் வரேன்!!,கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேனு சொன்னாரு!!!புதுசா பல்லவி அப்பா வேற ஏதோ பிரச்சினை பண்ணுறாரு!!அதான் இங்க வந்து ராம் கிட்ட பேசலானு வந்தேன்!!".

மேகநாதன்,"இல்ல... மோகன் !!இதை பத்தி ராம் கிட்ட எதும் பேச வேண்டாம்!!!அவனே சரியாகி வரட்டும்... ,முடிச்சவரை நாமே சமாளிப்போம்....!! திரும்பியவர் கிரணிடம்,"நீ .. போயி அவனை கவனி.... ,இந்த பிரச்சினை பத்திலாம் ... அவனுக்கு தெரிய வேணாம்!!!",என்றார்.

அவனும் இணங்குவனாக ராமனை தேடி செல்ல ராமன் தோட்டத்தில் வழக்கமான அந்த கல்லின் மீது அமர்ந்திருந்தான்!!

கிரண்,"என்ன ராம்... உன்னைய உள்ளலாம் தேடிட்டு இருக்கேன்!! இங்க வந்து உட்கார்ந்து இருக்க"

ராமன் பதிலேதும் பேசாது அமைதியாக தலையசைத்தபடி நகர அருகில் அமர்ந்தான் கிரண்.

கிரண்,"என்ன தான் டா ஆச்சு ...,உனக்கு அன்னைக்கு ஒன்னுமில்லை ... நல்லாருக்கேனு சொன்னேன்.... அப்புறம் ஒரு மாசமா!!ஆளை பார்க்கவே முடியலை!!பார்த்தாலும் பேசவே மாட்டுற.. எப்பாரு எதையோ... பறி கொடுத்தவன் மாறி இருக்க... இன்னும் எத்தனை நாளைக்கு நின்னு போன கல்யாணத்தை நினைச்சு வருத்தபடுவ..."என்று பொறிந்து தள்ள அமைதியாக திரும்பிய ராமன் ,"அம்ரூ... !கிட்டேருந்து எதாவது போன் வந்துச்சா!! "

கிரண்,"பேச்சை மாத்தாத... நான் என்ன சொல்லுட்டு இருக்கேன்... நீ என்ன கேட்கற!!?"

பதிலேதும் சொல்லாமல் அவனையே உற்று நோக்கிய ராமனை கண்ட கிரண்,"ஒன்னும் வரலை...!!"

ராமன்,"எங்க.. போனா!! எங்க இருக்கானு தெரியுமா!!?"

சற்று சலித்தபடி கிரண்,"அன்னைக்கு பார்த்தோட சரி... அப்புறம் ஒரு தகவலும் இல்லை!!!"

ராமன் எழ முற்பட தடுத்த கிரண்,"இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு!!??... இன்னும் எத்தனை நாளைக்கு பல்லவிய நினைச்சு வருத்தபட போற!!"

கையை உதறியபடி ராமன்,"மடையா!! போயி...வேற வேலை இருந்தா... பாரு!!" ,என்றபடி விருட்டென நடையை கட்ட குழம்பியபடி அமர்ந்திருந்தான் கிரண்.

அந்தி சாயும் பொழுது கோபமாக வந்த மோகன் ,நடுவீட்டில் நின்று கோபமாக அனைவரையும் அழைத்தார்.ஒவ்வோருவராய் வெளியே வர..,

சீதா,"என்னாட.. இப்படி வீடு இடிச்சு விழத்துடற மாறி கத்துற..."

மோகன்,"ஏன் ... சொல்ல மாட்டீங்க!!!என் தலையில இடியில விழுந்துருக்கு!!!"

மது,"மோகன்... என்னாச்சு... புரியும்படியா சொல்லு .... ஏன் இப்போ ... எல்லாரையும் கூட்டி வச்சிருக்க!!"

மோகன்,"இந்த கல்யாணம் நின்னு போச்சி.. நமக்கு தெரியாம நடத்துடுச்சின்னு .. நாம நினைச்சிட்டு இருக்கோம்...!!ஆனா நடந்த விஷயமே வேற"

வேணு தாத்தா,"மோகன்... சுத்தி வளைக்காம ...விஷயத்தை சொல்லு..."

மோகன்,"நான்... என்ன சொல்ல??! எல்லாம் உங்க பேரனுக்கு தான் தெரியும்... எங்க ராம்!!?".

மேகநாதன்,"மோகன்.... என்ன தான் ப்பா.. ஆச்சு!!".

மோகன்,"அண்ணா... காலையில சொன்னேல... வக்கீல் ட பேசறேனு ...வக்கீல் பாக்க போன அங்க வந்துருக்காரு..., ராஜூ ரணாவத்.. அதான் பல்லவி அப்பா, பேசின... அப்போதான் தெரிஞ்சுது... அவங்க பொண்ணை கூட்டிட்டு வந்துட்டாங்களாம்..., பொண்ணை விசாரிச்சதுல தான் தெரியுது ,...... ராமுக்கு முன்னாடியே தெரியுமா...!! ,அந்த பொண்ணுக்கு, இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.... உடனே நிறுத்த சொல்லி சொன்னாலாம்... ராம் தான் வேணாம்... ஏற்பாடு நடக்கட்டும் ....உன் விருப்படி நீ யாரை விரும்புரியோ... அவனை கல்யாணம் பண்ணிக்கலாம்!!!.. அதுக்கு நீ... நான் சொல்லுறத... கேளுனு சொல்லிருக்கான்!!!!..."

கிரணுக்கு தலை சுற்ற,"என்ன சித்தப்பா...சொல்லுறீங்க... என்னால நம்ப முடியலை ... அவன் ஒருமாசமா!! , வருத்தப்பட்டுட்டு இருக்கான்!!"

மோகன் ,"அது என்னவோ... எனக்கு புரியலைப்பா... எல்லாத்தையும் பண்ணிட்டு ப்பீல் வேற பண்ணுவாணா!!?"

பத்து,"ஏன்ப்பா...உங்களுக்கு இந்த விஷயமும் தெரியுமா!!! "

வேணுதாத்தா பதிலேதும் பேசமால் இருக்க உள்ளே நுழைந்த ராமன் அனைவரையும் புரியாமல் பார்க்க..
கிரண்,"ராம்... சித்தப்பா!! இப்போ தான் பல்லவியோட அப்பா கிட்ட பேசிட்டு வாராம்... பல்லவிக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.... எல்லாம் நீ சொல்லி தான் பண்ணேனு சொல்லி பிரச்சினை பண்ணுறாங்காளாம்.... உண்மையா.. என்ன நடந்துச்சு சொல்லு !!??"என்று பொங்கி எழுந்தான்.

ராம் பதிலேதும் பேசாமல் நிற்க
கோபமடைந்த பத்துமாமா வேகமாக ராமனின் அருகில் செல்ல...,"நில்லுடா... "என்றார் வேணுதாத்தா.

மது,"உங்களால தான், அவன் இப்படி இருக்கான்... சித்தப்பா!!.. நீங்க கொடுக்குற இடம் எல்லாம்...!!!, மானத்தை கப்பல் ஏத்துட்டு.. எப்படி நிற்குறான் பாருங்க.."

மேகா,"சும்மா... ஆள் ஆளுக்கு எதும் பேசாதீங்க...".

ராமனிடம் சென்றவர்,"எனக்கு தெரியும் ... நீ எது செஞ்சலும் காரணமா இருக்குனு... ஆனா.. இதுக்கு என்ன அர்த்தம் ப்பா... இது எனக்கு சரியா...படலியே..நீ இப்படி பண்ணமாட்டீயே.. உண்மையான காரணத்தை சொல்லுப்பா!!"

மோகன்,"வேற ... என்ன பெரிய காரணம்... முதல ஏற்பாடு பண்ண கல்யாணத்துகாக என்னை அசிங்க படுத்தனான்... இப்போ நீங்க ஏற்பாடு பண்ண கல்யாணத்துகாக உங்களை அசிங்க படுத்துறான்... எல்லாரையும் அசிங்கபடுத்தி .... அவன் இஷ்டம் போல செய்யனும்!! அதான்!!."

வேணு," மூடுறா.... வாயை... என்ன வேணாலும் பேசிடலானு நினைப்பா.., !! நீ செஞ்ச காரியத்துக்கு இந்நேரம் ஜெயில இருக்கனும் .... ராம் னால வெளியே கவுரமா!! சுத்திட்டு இருக்கனு மறந்துடாத!!" பளீறென்று உடைக்க அனைவரும் அதிர்ந்து போயினர்.

ராம்,"தாத்தா... வேணாம்... என் மேலதான் தப்பு ... விடுங்க!!"

வேணு,"நீயும்... சும்மா இருடா... எத்தனை நாளைக்கு மூடி வைப்ப... ,இந்த கல்யாணத்துக்கு நீ என்ன பண்ணணு தெரியாது... , ஆனா முதல ஏற்பாடு பண்ண கல்யாணத்துல என்ன நடந்துன்னு எனக்கு நல்லாவே... தெரியும்!!"

பத்து,"என்னப்பா... சொல்லுறீங்க!!அந்த பொண்ணு ... மோகனுக்கு தெரிஞ்சவனு , நம்ம வீட்ல தங்கி... கடைசில ஏமாத்திட்டு போயிட்டா தான!!"

வேணு,"அப்படி எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க... !! யாருனே தெரியாத பொண்ணை ... மோகன் எப்படி கூட்டிட்டு வந்தான்... ,
ராமுக்கு நிச்சயம் பண்ணலானு ஏன் பேசனா.... அதுக்காக ஏன் வீட்டை விட்டு வெளிய.. போனானு... யாராது கேட்டீங்களா!!"

அனைவரும் திகைத்து போக ... அவர்களின் பார்வை மோகனின் மீது சென்றது...மெல்ல முன்னே வந்த கீதா,"ஏங்க... மாமா என்ன சொல்லுறாரு!!?யாருங்க அந்த பொண்ணு!?".தலையை குனிந்த மோகன் வாடி நிற்க மேலும் தொடர்ந்தார் தாத்தா,"நானே ... சொல்லுறேன்...!! சேராத கூடவங்க சேர்ந்து கிளப்புக்கு போயி பெட்ங் பண்ணி தோத்து... ,அவங்க மிரட்டி
ஹாஸ்பிடல கேட்டு... எல்லாமும் ராமு தானு தெரிஞ்சதும்... ,அவங்க பொண்ணை அனுப்பி ஏமாத்த பார்த்துருக்காங்க!!!,அதுக்கு ஐயாவும் உடைந்த... ,ராமுக்கு ஏதோ சந்தேகம் வந்து ... விசாரிச்சா கதை ... தெரியுது!!,ராம் என்ன பண்ணானோ... ஏதோ...!! நிச்சயம் பண்றதுக்கு முன்னாடியே மிரட்டி துரத்தி விட்டான்.யாருக்கும் தெரியாமா,எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து..., என்ன சித்தப்பா .. அந்த பொண்ணு .., சரியில்லைனு சொன்னதுக்கு...., எங்க எல்லாருக்கும்
தெரிஞ்சுடுமோனு..., ஐயா ... கோச்சிகிட்டு வெளிய போயீட்டீங்க....!!,நீயெல்லாம் அவனை பேசுற பாரு அதான் ..., என்னால தாங்க முடியலை!!"என்று முடிக்க அனைவரும் அதிர்ந்து போயினர்.

ராமனிடம் சென்ற கீதா,"எங்களை மன்னிசிடுப்பா...!!உன் அருமை தெரியாம ... நானும் பேசிருக்கேன்" என்று கை கூப்ப ,"அய்யோ... சித்தி நீங்க வேற!!!அப்படிலாம் எதும் இல்லை ... நான் அப்பவே அதெல்லாம் மறந்துட்டேன்",என்று கூப்பியை கையை பிடித்து கொண்டான்.மோகனும் தலையை குனிந்தபடி மன்னிப்பு கோர அவரையும் சமாதனம் செய்தவனிடம் மது,"எல்லாத்துக்கும் காரணமா பண்ணிருக்கான்ன... இப்போவும் காரணம் இருக்குமே... இந்த கல்யாணத்துல ... என்ன நடந்துச்சு!!?"என்று ஏத்தி விட அனைவரின் கவனமும் ராமனின் மீது சென்றது.

நாற்காலியை உறுட்டியபடி அருகே வந்தவர்,"ராமு... என்னு சொல்லு நான் தெரிச்சுக்குறேன்...!!?".

சற்று யோசித்த ராமன்," அந்த ரணாவத் தோட கிளோஸ் பாட்னர் தான் அக்ஷ்ரா குரூப்ஸ் மகேந்திரன்... தாத்தா!!"

மேகா,"என்னப்பா ... சொல்லுர!! எனக்கு தெரியாதே!!"

பானு,"ஏங்க.... இவ்வளவு அதிர்ச்சி ஆகுறீங்க!!யாரு அது!!"

வேணு தாத்தா,"அன்னிக்கு கேட்டீங்களே... என்ன நடத்துச்சுன்னு இன்னிக்கு சொல்லுறேன் ... கிரணுக்கு என்ன ஆச்சுனு!!!"

சீதா,"அதுக்கும் இதுக்கும் ... என்ன சமந்தம் இருக்கு அண்ணா!!".

வேணு தாத்தா,"இருக்கே...!!மாதவியோட சித்தப்பா தான் மகேந்திரன்!!"

நடுங்கி போயினர் மேகநாதனும் கிரணும்,"என்ன தாத்தா சொல்லுறீங்க!!"

வேணு தாத்தா,"உங்க அப்பாவையே கேளு!!"

மேகநாதன்,"ஆமாம் ப்பா... நீங்க படிச்சிட்டு இருக்கும் போது, எனக்கும் மகேந்திரனுக்கும் பயங்கிர சண்டை!!போலீஸ் கேஸூனு பெரிய பிரச்சினை... ,அவன் பண்ண தப்புக்கு என்னைய மாட்டி விட பார்த்தான்.., மெடிக்கல் எக்கியூப்மெண்ட் பிராடு கேஸு...!! அப்போ ராம் சொன்ன யோசனையை வச்சிதான் தப்பி வந்தேன்... அவன் மட்டும் மாட்டிக்கிட்டான்!!! பவரை வச்சி வெளிய வந்துட்டான்... இருந்தாலும் எனக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்துட்டே இருந்தான்!!ஆனா மாதவிக்கும் அவனுக்கும் சம்மதம் இருக்குனுனோ... ரணாவத்க்கும் அவனுக்கும் சம்மதம் இருக்குனோ.. எனக்கு தெரியாது ப்பா!!!!", திரும்பிய கிரண் ராமனிடம் இப்போவாது நடந்தை சொல்லு ரா!!"

ராம்,"பெரிப்பாக்கு எதுவுமே தெரியாது தான்,நானும் பெட் கட்டி தான் மாதவி அப்படி பண்ணனு நினைச்சேன்....உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனா.. அப்புறமா.. தெரிஞ்சுது ... மகேந்திரன் சொல்லி தா அந்த மாதவி நம்மகிட்ட பழகிருக்கா....,அவ பண்ண தப்பே உன்கிட்ட பேசிட்டு.. என் கிட்ட வந்தது..., நாம வெறுக்குறோனு தெரிஞ்சி..., இனிமே அவளை நம்ப கூடாதுன்னு... ,மகேந்திரன் உன்னைய வச்சி பெரியப்பாவ மிரட்டலானு.., கார் வச்சி இடிச்சிருக்கான்....,!!எனக்கு இது தெரிஞ்சதும் பயங்கர கோபம்..,ஆனா.. அந்த சமயம் என்னால உன்னைய அப்படி பாக்க முடியலை !!!,என்றபடி தொடை கரைத்தவன் மேலும் தொடர்ந்தான்,"இதுக்கு மேல யாருக்கும் எதும் ஆக கூடாதுன்னு... தான் அந்த கேஸை மூட சொன்னேன்...,சின்ன சின்னதா... ,பிரச்சனை பண்ணவன் ரணாவத் வச்சி பேசி நம்மல கல்யாணமுன்னு கவுக்க பார்த்தான்...!!"

மேகநாதன்,"எப்படி ராம்... அவங்க பாட்னர் ..னா....எப்படியாது தெரிஞ்சுருக்குமே!!! "

ராம்,"விசாரிச்சிட்டேன்...வெளிய யாருக்குமே ... தெரியாது பெரிப்பா...புதுசா ஒரு மருந்து மார்கெட் க்கு வருதுல்ல... அது நமக்கு முதல்ல அப்ரூவல் ஆகிருக்கு!!!..அதை நிறுத்த இப்படி பிளான்..!! நம்ம அப்ரூவல் விஷயத்த பல்லவி அப்பா...விசாரிக்கும் போது எனக்கு சந்தேகம் வந்துச்சி... ,என்ன பண்ணலானு யோசிக்கும் போது தான் பல்லவி பேசினா...,எனக்கும் விஷயம் அப்போ முழுசா தெரியாது!!விஷயத்தை கண்டுபிடிக்க தான் ... பல்லவி கிட்ட அப்படி சொன்னே!!!நம்மல திசை திருப்பி... கோடி கணக்கில விற்க போற ,அந்த மருந்தை அவன் எடுத்துகாலானு பார்த்தான்!!!அதான் ...,!! எல்லாம் அவன் நினைச்ச மாறியே நடக்குற மாறி காட்டினேன்!!.அந்த பொண்ணு அவசர பட்டுச்சி....!!அப்போ தான் நம்ம ரித்திக் விஷயத்தை சொல்ல அவசரமா போயிட்டேன்!!" என்று முடிக்க கிரண் வந்து தழுவி கொண்டான்!!!.










Continue Reading

You'll Also Like

110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
19.2K 1.7K 45
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
53.1K 3.7K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...
42.5K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r