இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.2K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-49

274 15 1
By Gayathrisivak

அதிர்ச்சியுடன் கிரண்,"என்ன.. அமிர்தா!!! சொல்லுறீங்க!!? இப்போ ராம் எதாவது ..சொன்னான!!?"

அம்ரூ,"கிரண்... ,முன்னாடியே லேட் ஆகிடுச்சி... அதோட நான் நேத்து நைட்டே முடிவு பண்ணிட்டேன்... பேக் கிடைக்கவே இல்லனாலும்... கிளம்பி ஊருக்கே கூடம் போயிடலானு!! நல்ல வேளை என்னோட பேக் கிடைச்சிருச்சி!!! நான் இப்படியே கிளம்பறது தான் நல்லது !!! வீட்டில எல்லாருக்கிட்டையும் எனக்கு அவசரமா !!போகனும் அதனால கிளம்பிட்டேன்னு சொல்லுங்க!!!".

கிரண்,"என்ன ... அமிர்தா இப்படி சொல்லுறீங்க!! கல்யாணம் வரையும் இருப்பீங்கன்னு நினைச்சேன்.. கல்யாணம் முடிச்சிட்டு நானே கூட்டிட்டு போயி ஜாயின் பண்ணி விடுறேன் ...அமிர்தா!!எப்படி தனியா போவீங்க!!?"

அம்ரூ,"கிரண்... நான் இங்க தனியாதான வந்தேன்... நானே போயிக்குறேன்!,அதோட முதல்ல... னா எதுமே தெரியாது ... இப்போ தான் எல்லா அட்ரஸ்.. போன் நம்பரலாம் ..என் பையில இருக்கே ... நான் பாத்துக்குறேன்...!!! ரொம்ப ரொம்ப ... தேங்கஸ் கிரண்... இந்த உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!!"

கிரண்,"அமிர்தா... நீங்க நேத்து நடந்த விஷயத்துகாக ... இப்படி முடிவு பண்ணிருக்கீங்கனு தெரியுது...!! சரி ...வீட்டில கேட்டா!! நான் பேசிக்குறேன்!! இதெல்லாம் மனசுல வச்சிட்டு கல்யாணத்துக்கு வரமா போயிடாதீங்க.. !! என் நம்பர் தெரியும்ல மறக்கமாக கால் பண்ணுங்க!! என்ற நேரம் கிஷோர் வர கிரண்,"கிஷோர்... அமிர்தா... கிளம்புறாங்களாம்... இப்படியே நான் போய் விட்டுட்டு வரேன் .. நீ டாக்ஸி புடிச்சிட்டு கேஸ்ட் ஹவுஸ் போ!!! ராம் கிளம்பிட்டான்!!"என்றதும் அதிர்ந்த கிஷோர் ,"அமிர்தா... இது ராமுக்கு தெரியுமா!! அவன் ஏதோ உங்கிட்ட பேசனுன்னு சொன்னானே!!"

அம்ரூ,"கிஷோர்... நான் அவசரமா ...போகனும்... உங்கள மீட் பண்ணதுல ..ரொம்ப சந்தோஷம்... பார்ப்புபோம்.. அப்புறமா ..!!!. ,கிரண்.. நானே போயிக்குறேன் டாக்ஸி பிடிச்சி...,,!!,நீங்க கிஷோரை கூட்டிட்டு போங்க ..., எல்லாருக்கும் சொல்லிடுங்க..., நான் இன்னோரு நாள் கண்டிப்பா... வரேன்," எனவும்
கிஷோர்,"அமிர்தா... ஏன் இப்படியே கிளம்பிறீங்க... நீங்களே ... வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போகலாமே!!"

அம்ரூ,"இல்ல... கிஷோர்... நீங்களே விட மாட்டறீங்க... தாத்தா ... பாட்டிலாம் கண்டிப்பாக விடமாட்டாங்க... அதோட பேக் பத்திலாம் நாம சொல்லலை ல,, காலையிலே கிளம்பலானு இருந்தேன்... இப்பவே லேட்டு ... நல்லவேளை யா பேக் உம் கிடைச்சிருச்சி.... "என்பதற்குள் டாக்ஸி ஒன்று வர கையை நீட்டிய அமிர்தா!!,"கிரண் ... ரொம்ப தேங்கஸ்... நான் கிளம்பறேன்!!" என்ற அவசரபட்டவளிடம் புரியாமல் கிரண் கையிலிருந்த பணத்தை நீட்ட அமிர்தா மறுத்தபடி..,"இல்ல... கிரண்... நான் பாத்துக்குறேன்.. அதோட என்கிட்ட இருக்கே ... மறந்துடீங்களா!! என்று பையை காட்டி சிரித்தபடி ஏற டாக்ஸி நகர்ந்தது.

கிரண்,"இதுக்குதான் ராம்... பணத்தை அவளோட பணமாறியே கொடுக்க சொன்னான் போல...!".

கிஷோர்,"என்னாட ... அனுப்பிவிட்டுட்ட!!!,ராம் வந்து கேட்டா!! என்ன சொல்லுவ...!?"

கிரண்,"நான்.. எங்கடா.?. அனுப்பி விட்டேன்..!?அவங்க வம்பா.. போறேனு அடம்பிடிக்குறாங்க.... என்னைய என்ன செய்ய சொல்லுர...!? அதோட கல்யாணம் வேலைல.., அவன் கண்டுக்க மாட்டான்.. விடு!!, நான் பார்த்துக்குறேன்... வா.. ,நாம கெஸ்ட் ஹவுஸ் போலாம்...!!" என்றபடி வண்டி எடுக்க கிஷோர்,"நீதான் .. நினைச்சு ட்டு இருக்க... என்ன நடக்க போதுதோ!! " என்றபடி ஏறியதும் வண்டி நேரே கெஸ்ட் ஹவுஸ் அடைந்தது.

ஆரவ்,"கிரண்... ராம் எங்க டா!! எதாவது சொன்னான!!.."

கிரண்,"அது தனிகதை... அப்புறம் பேசிக்கலாம்..?! ரியா..எங்க!!?"

பிரதீக்,"டேய்... அது இல்ல...,ஏன்டா??!போன் போட்டா...!! இரண்டு பேரும் எடுக்க மாட்டறீங்க!!..."

கிரணும் கிஷோரும் போனை எடுத்து பார்க்க..கிரண்," கவனிக்கலை ரா.. !!"
கிஷோர்,"என்னுது போன் சைலன்டுள இருக்குடா!!"

ஷானு,"டேய்... ஏதோ பிரச்சினை போல வீட்டில, குரு கால் பண்ணான்... நீங்க எடுக்கலனு!!"

கிரண் சட்டென குருவிற்கு டயல் செய்ய,"என்ன குரு... கால் பண்ணிருக்க!!?".

குரு,"என்ன டா... பண்ணிட்டு இருக்க உடனே கிளம்பி வா வீட்டுக்கு.."

கிரண்,"என்னாச்சு ...டா!! "

குரு,"உடனே கிளம்பி வா... ,வந்து பேசிக்கலாம்!!".

கிரண் போனை வைத்துவிட்டு ,"சரி ... என்னனு தெரியல ... வர சொல்லுறான்!! ,நான் போயி பார்த்துட்டு வரேன்.."

கிஷோர்,"சரி ... நீ முன்னாடி போ... நான் இவங்கள கூட்டிட்டு பின்னாடியே வரேன்".

கிரண் சென்று இறங்க, ஓடி வந்த சுப்பண்ணா,"தம்பி... எங்க போயிட்டீங்க!!! சின்னம்மா... மயங்கிட்டாங்க..!, மேகநாதன் ஐயா பார்த்துட்டு இருக்காங்க ..!!" என்று முடிப்பதற்குள் பதறிய கிரண் ,"என்ன சொல்லுறீங்க!! சுப்பண்ணா... ஏன்!?என்ன!!? ஆச்சு..."என்றபடி உள்ளே ஓட
அங்கே வேணு தாத்தா அறையின் முன் அனைவரும் மஞ்சு பாட்டியை சுற்றி நின்றபடி இருக்க பதறிய கிரண் ,"என்னாச்சு ...!!"

மது,"எங்கடா.. போனா!!?"

கிரண்,"பாட்டிக்கு என்னாச்சு!!?" என்று பதறியபடி அருகில் அமர

பத்து,"எல்லாம்... தலையெழுத்து.., நான் என்ன.. பாவம் செஞ்சேனோ... தெரியல.. ? என் பையனை போட்டு படுத்துறது!!"என்று புலம்பியவரிடம்

மேகா,"பத்து ... இங்க வேண்டாம்... வெளியே போலாம் வாங்க!!! அவங்கள அமைதியா விடுங்க !!" எனவும் ஒவ்வொருவராய் வெளியேற, கிரண் பாட்டி கையை பிடித்தப்படி இருந்தான்.

சற்று நேரம் பின் வேணு தாத்தா மட்டும் இருக்க வெளியே வந்த கிரணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கிரண்,"என்ன தான்... நடந்ததுச்சி யாராது ... சொல்லுங்களேன்!!?"

மோகன்,"பொண்ணு வீட்டில கால் பண்ணி ... ,இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டாங்க!!, இதை கேட்டதும் அம்மா மயங்கி விழுந்துட்டாங்க!!"

கிரண்,"என்ன சித்தப்பா.. சொல்லுறீங்க!!எனக்கு புரியலை!!"

மது,"என்னடா... புரியலை !!அவங்க பொண்ணு யாரோடவோ கிளம்பி போயிட்டாளாம்..நேத்தியே!!! இப்ப கால் பண்ணி ... கல்யாண வேலையெல்லாம் நிறுத்துகன்னு அவங்க சித்தப்பா சொல்லுறாரு...!!"

இப்போது கிரணுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.நினைவு வந்தவனாய் இது ராமுக்கு தெரியுமா!! என்றான்.

பானு,"எங்களுக்கு முன்னாடியே அவனுக்கு நியூஸ் போயிடுச்சி!!ஆனா அவன் எங்க போன்லாம் எடுக்க மாட்டுறான்!!.., நீங்களும் எடுக்கல... அதுக்குள்ள அத்தை மயங்கிட்டாங்க?.... எங்களுக்கு என்ன பண்ணுறதுனே ..புரியலை!!!"

நொடிந்து போனான் கிரண்,"அப்பா!!, பாட்டிக்கு எப்படி இருக்கு இப்போ!!?"

மேகநாதன்,"அதிர்ச்சி தான் பா...,மாத்திரை குடுத்துருக்கேன்!!எழுச்சிரிக்கட்டும்!! பார்ப்போம்!!".

கிரண்,"குரு...,ராமுக்கு ட்ரை பண்ணியா!!"

குரு," அப்போலேருந்து உங்க எல்லாருக்கும்.. ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்... யாரும் எடுக்கமாட்டறீங்க!!"

கிரண்,"சரி!!வா... போலாம்"

குரு,"எங்க கிரண்!! ராமை தேடியா!!?"

பதில் பேசாது சென்ற கிரணின் வண்டி நேரே ஒரு அமைதியான தெரு மரத்தடியை அடைந்தது.

குரு,"இங்க ஏன்டா!!நிறுத்துற!!? நீ ஹாஸ்பிடல் போறேனு !நினைச்சேன்"

இறங்கிய கிரண்,"இல்லடா...!!என்னால முடியலை...,ஏன்டா?? ராமுக்கு மட்டும் இப்படி நடக்குது!!! அவன் ரொம்ப நல்லவன் டா!!,ஏன் அவனுக்கே இவ்வளவு சோதனையோ... !!ஏற்கனவே இருக்க பிரச்சினை யெல்லாம், அவன் கல்யாணத்தோட சரியாகிடுமுன்னு நினைச்சேன்!!ஒன்னு மேல ஒன்னு வந்துட்டே இருக்கு!!! இப்போ தான் ராம் கொஞ்சம் நல்லாருக்கான்... சிரிக்கிறானு நினைச்சேன்... அதுக்குள்ள அடுத்த பிரச்சனை!!"
என்று மனம் வருந்தி புலம்பியவனிடம் என்ன சொல்லுவதென்றே தெரியாமல் அமைதியாக நின்றிருந்தான் குரு.

கதிரவன் தானும் செல்வதாய் விடைபெற, சிறிது நேரம் அமைதியாக மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களுக்கு மறுபடி அழைப்பு வர,"சொல்லு மா!!?"

பானு,"ராம் ... வந்துட்டான் டா!! பாட்டி கூட பேசிட்டு இருக்கான்..!!நீங்க எங்க இருக்கீங்க!?"

கிரண்,"வரேன்!!மா "

அதற்குள் குருவிற்கு அழைப்பு வர பேசியவன்,"கிரண்... வருத்தபடாத அடுத்து என்ன பண்ணலானு ..யோசி!! நம்ம பசங்கலாமும் வந்துட்டாங்களாம்.. வா போவோம்!!"

கிரண்,"என்ன டா.. பண்ண சொல்லுர!!, நான் அவன் முகத்தை எப்படி பார்ப்பேன்!!??என்ன சொல்லுறது!!?"

அவன் பதில் சொல்ல வேண்டிய விஷயமே வேறு என்பதை உணராமல் வருந்தி கொண்டிருந்தவனை குரு தேற்ற இருவரும் வீட்டை அடைந்தனர்.

குரு,"நீ..போய் பாரு!!, நான் பசங்கள பார்க்கறேன்!!"

ராம் பாட்டியின் அருகில் அமர்ந்தபடி இருக்க உள்ளே நுழைந்தான் கிரண்.

ராம்,"நான்தான்... சொல்லுறேன்ல... எனக்கு கொஞ்சம் கூடம் வருத்தமில்லை... நீங்க வீணா.. எதையாவது நினைச்சு உங்க உடம்பு க்கு எதாவதுனா தான் எனக்கு வருத்தமாகும்... நல்ல பாட்டிய சீக்கிரம் சரியாகி வாங்க!!?"என்றவன் கிரணை பார்த்து தலையசைக்க இருவரும் இணைந்து வெளியேறினர்.

மோகன்,"பேசமா நானும் அண்ணனும் போயி ... என்னனு விசாரிச்சிட்டு... வரோம்!!"

சீதாபாட்டி,"இதுக்கு மேல போயி விசாரிச்சி சண்டை போட்டு என்ன ஆக போகுது...!! நமக்கு குடுத்து வச்சது அதான்!!!, மேகநாதா... கெஸ்ட் ஹவுஸ்ல.. இருக்கிறவங்களுக்கும் மத்தவங்களுக்கும் தகவல் சொல்லிடுங்க!!"

மேகநாதன்,"அம்மா!!,விஷயம் தெரிஞ்சு ...எனக்கு இப்போவே போன் வருதுமா... மீடியால வேற டார்ச்சர் பண்றாங்க!!!"

ராம்,"பெரிப்பா... பாட்டி சொன்ன மாறி விஷயம் சொல்லிடுங்க...!! மீடியவ நான் பார்த்துக்குறேன்!!!" என்றவன் சாதரணமாக நகர பின்னே தொடர்ந்து சென்றான் கிரண்.

கிரண்,"ராம்... நில்லுடா!! நீ நல்லாயிருக்கியா!?நிஜமாவே... உனக்கு வருத்தமில்லையா!!?"

ராம்,"இல்லை டா!!கிரண்... அதோட இது நான் எதிர்பார்த்தது தான் ... அதனால எனக்கு ஒன்னும் தெரியலை!!"

கிரண்," இரண்டாவது தடவ இப்படி ஆகுறதுனால ... நீ இப்படி சொல்லுற ... போல!! நான் தான் மடையன்..!!யாரு!! என்னனு?? விசாரிக்காம விட்டேன்!!, என்னைய மன்னிச்சுடுடா... !!"

ராம்,"நீ என்ன பண்ண முடியும் அதுக்கு !!,....தேவையில்லாம! மனச போட்டு குழப்பிக்காம!! போயி நடக்கற வேலைய பாரு!!பிரண்ட்ஸ் எல்லாம் எங்க... விஷயம் தெரியும் தான!! குருக்கு லீவு இல்லனு சொன்னான்... முதல்ல அவனை கிளம்ப சொல்லு ,மத்தவங்கெல்லாம் அப்புறமா... நான் வந்து பேசறேன் .. என்று வேகமாக மேலே ஏறியவனின் கால்கள் அம்ரூவின் அறையை அடைய மனம் படபடக்க கதவை தட்டவும், கதவு திறந்து கொள்ள உள்ளே அவளை காணாது நேரே தோட்டத்தில் சென்று தேடியவன் ,அங்கேயும் காணாமல் சுப்பண்ணாவிடம் சென்றான்.

வருத்ததிலிருந்த சுப்பண்ணா அவனை கண்டதும் அலறியத்தபடி அருகே வந்தவர் ,"என்ன வேணும் தம்பி... குடிக்க எதாவது வேணுமா!!?"

ராம்,"சுப்பண்ணா!! நீங்க எதை நினைச்சும் வருத்தபடாதீங்க!! இது ஒன்னுமில்லை... எனக்கு கொஞ்சம் சூடா காபி.. கொடுக்கறீங்களா!!?" என்று இதமாக பேச ,"இதோ இரண்டு நிமிஷம் தம்பி.!! "என்றபடி திரும்பியவரிடம்,"சுப்பண்ணா ... அம்ரூவ எங்கையாது ... பார்த்தீங்களா!! வீட்டில காணோமே!!"

சுப்பண்ணா,"இல்ல தம்பி..காலைல பார்த்ததோட சரி... !! நினைவு வந்தவராய்.. மதியம் கிரண் தம்பியோட போனவங்க தான் தம்பி...!! அப்புறம் நான் பார்க்கலை!!என்ன விஷயம்!... எதாவது வேணுமா!!"

ராம்,"இல்ல... ணா!! சும்மா தான், நான் பார்த்துக்குறேன்!! என்றவன் சுப்பண்ணா ... காபி வேணாம்!!, நான் கிளம்பிறேன் என்றவன் வெளியே தேட கிஷோரும் கிரணும் எதிரே வந்தனர்.

கிரண்,"யாரை தேடுற ராம்!?".

ராம்,"குரு.. கிளம்பிட்டானா!!?"

கிரண்,"ம்ம்.. போகலைனு தான் .. சொன்னான்!! நான் அனுப்பி விட்டேன்!!சொந்த காரங்களும் கிளம்பிட்டு இருக்காங்க!! பிரண்ட்ஸ் லாமும் கெஸ்ட் ஹவுஸ் அனுப்பிட்டேன்... அவங்க மட்டும் இருக்கேனு சொல்லுறாங்க !!" என்று வரிசைபடுத்தயவனிடம் ," மத்த செட்டுல் மெண்டுமும் பண்ணிடு கிரண்!!" என்றவனுக்கு வருத்தமாக தலையாட்டியவனிடம் மெல்ல ராமன்,"எங்க ... ??! அம்ரூவ காணோம்!! அவளுக்கு தெரியுமா!!" என்றான்.

அதிர்ந்த கிஷோர்,"உனக்கு இன்னும் விஷயமே தெரியாதா!! கிரண் இன்னும் .. நீ ராம் கிட்ட சொல்லியா!!?"

கிரண்,"ஆமா.. டா !! நடந்த டென்ஷன் ல சொல்லவே மறந்துட்டேன்!!அமிர்தா அப்போவே கிளம்பிட்டாங்க..!!"

அதிர்ந்து போனான் ராமன்,"கிளம்பிட்டாளா!!? எப்போ ?!! ஏன்!! எங்க போனா!?" என்று படபடக்க

கல்யாண நின்ற விஷயத்தை கூட பொறுமையாக பேசிய ராமன் இப்போழுது துடிதுடிப்பதை பார்த்த கிரண் மிரண்டு போக," ராம்... அவங்க ஸ்டேஷன் லேருந்து நீ கிளம்பனல அப்படியே போயிட்டாங்க!! நாளைக்கு ஜாயின் பண்ணணுன்னு சொன்னாங்க!! நீ நேத்து பேசனது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி போல ..என்ன சொல்லியும் கேட்கல... கிளம்பிட்டாங்க!!"

ராம் நிலைகுலைந்து போனான்,"ஏன் டா கிரண்... போக விட்ட!! நான் வந்து பேசறேன்னு தான சொன்னேன்!?.. கல்யாண விஷயமாது தெரியுமா!!!?" என்றவனின் குரல் மெலிந்து போக.

கிரண்,"இல்ல... ராம்!! எனக்கு அவங்கள அனுப்பன, அப்புறம் தான் விஷயமே தெரியும்!! அதோட நீ பேசறனு சொன்னதும்,எனக்கு தெரியாதே!!"என்றான் பாவமாக

ராம்,"தப்பு பண்ணிட்டேன் டா!! கிரண்"
என்று உடைந்து போயி அமர்ந்தவனை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தனர்.



Continue Reading

You'll Also Like

180K 14.9K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
317K 12.3K 55
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
37.3K 2.5K 52
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
241K 6.2K 150
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...