💜24💜

2.2K 117 16
                                    

மேடையில் 'உம்' என்று அமர்ந்திருந்த தாராவின் தோள்களை இடித்த அர்ஜுன்... "கொஞ்சமாகச்சும் சிரி டி. எங்க அம்மா, உங்க அப்பா எல்லாரும் நம்மலயே தான் பார்க்கறாங்க." என்று கூற...

அவளும் வேறு வழி இல்லாமல் சிரித்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தாள்.

தேங்காய் மீது வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தாலி அனைவரின் ஆசீர்வாதமும் பெற்று, மீண்டும் மேடைக்கு வந்தது. மேடையில் உறவினர்கள் சூழ்ந்து நிற்க, 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என்று இசை வாத்தியங்கள் முழங்க... அக்னியின் சாட்சியாக, தாராவின் கழுத்தில் அர்ஜுன் தாலி கட்டினான்.

அந்த சமயத்தில், அர்ஜுனின் கண்களை உற்று நோக்கினாள் தாரா. அவளின் முகம் சிரித்த மாதிரி இருந்தாலும் அவளின் கண்களில் பயம், அழுகை, விரக்தி எல்லாம் கலந்து இருந்தது.

அவளின் மனக்குமுறலை அர்ஜுன் கவனிக்காமல் இல்லை.

'தாரா, எனக்கு புரியுது டி. நான் உன்ன ரொம்பவே கஷ்டப்படுத்தி இருக்கேன். எனக்கு அப்போ புரியல. எனக்கு, அன்னைக்கு அந்த அனன்யா தான் பெருசா தெரிஞ்சா. அதான் உன்ன நான் மதிக்கல. தேவை இல்லாம கண்டவன் பேச்சை நம்பி உன்ன பத்தி ரொம்ப தப்பாப்பேசிட்டேன். நீ என்ன மன்னிக்கணும் என்று நான் எதிர் பார்க்கல. ஆனா, ஒரு நாள் நீ எல்லாத்தையும் மறந்து என்ன ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.' என்று மனதில் நினைத்தவாறே அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான்.

பிறகு அக்னியை சுற்றி வந்த மணமக்கள் இருவரும்... அர்ஜுனின் பெற்றோர் ராஜ்குமார் மற்றும் மைதிலியிடன் ஆசிர்வாதம் வாங்கினார்கள். மைதிலியின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கி இருந்தது. அர்ஜுன், தாரா இருவரையும் அணைத்துக்கொண்டு உட்சிமுகர்ந்தாள்.

அடுத்து அர்ஜுன் குடும்பத்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள், கடைசியாக ரகுவின் ஆசிப்பெற்றனர். ரகு ஆனந்தக்கண்ணீரோடு அர்ஜுனையும், தாராவையும் கட்டித்தழுவினார்.

காதலும் கடந்து போகும்💘Tempat cerita menjadi hidup. Temukan sekarang