💜14💜

2.3K 117 16
                                    

"அவ பேச மாட்டா சரோஜா... அவளுக்கு மத்தவங்க யாரும் முக்கியம் இல்ல. இதோ இந்த பையன் தருண் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடிக்கிறான். இவன் வாழ்க்கையும் சேர்த்துக்கெடுத்துட்டு இருக்கா இவ."

"ரகு சார்... பாப்பா பாவம். இப்படிலாம் பேசாதீங்க... தாரா முகமே அழுது அழுது சிவந்திடுச்சு..."

"அவர தடுக்காதீங்க சரோஜா மா... அவரு பேசட்டும்...
அப்பா, நான் யாரு வாழ்க்கையும் கெடுக்கல. இப்போ என்ன? அந்த அர்ஜுன கல்யாணம் பண்ணிக்கனும்... அதுதானே வேணும் உங்களுக்கு? சரி கல்யாணம் பண்ணிக்கறேன். " என்று கோபமாக கத்தினாள்.

"தாரா... மெதுவா பேசு. கோவப்படாத..." என்று தாராவின் கைகளைப்பிடித்து அமைதி படுத்தினான் தருண்.

கைய விடு தருண் என்று அவன் கைகளை உதறி விட்டவள், மேலும் ரகுவிடம்...  "ஒன்னே ஒன்னு மட்டும் உங்ககிட்ட சொல்லிக்கிறேன் ப்பா. உங்களுக்காக வேண்டும் என்றால் அந்த அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா, அவன்கூட நான் சந்தோஷமா வாழ்வேன் என்று கனவுல கூட நினைச்சு பார்க்காதீங்க. அது நடக்காது. எனக்கு ஒரு சதவீதம் கூட இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை." என்று பேசிவிட்டு தடால் என்று தன் அறைக்குள் நுழைந்தாள் தாரா.

அவள் சீறி ஓடிய வேகத்தில் நாலாபக்கமும் தெறித்தது அவள் கண்ணீர் துளி.

சில மணி நேரத்திற்கு பிறகு தாராவின்  அறைக்கதவை தட்டினார் ரகு... " தாரா மா, சாரி டா. நான் உன்கிட்ட ரொம்ப கோவமா நடந்துக்கிட்டேன். ஊர்ல உள்ளவங்க எல்லாம் நீ தாய் இல்லாத பொண்ணு. அதான் நீ கல்யாணம் ஆகாம இருக்க... இதுவே ஒரு அம்மா இருந்தா இந்தப்பொண்ண இப்படி விட்டிருப்பார்களா'ன்னு என் காதுப்படவே பேசுறாங்க. அதெல்லாம் கேட்கிறப்ப ரொம்ப மனசு வலிக்குது டா. இதுவரைக்கும் எல்லாமே உன் விருப்பப்படிதான் பண்ணிருக்கேன். உனக்கு எது பெஸ்ட்டோ அதைதான் தந்திருக்கேன். நான் உன்னை இனி எதற்கும் வற்புறுத்த மாட்டேன். உன் வாழ்க்கை நீயே முடிவு பண்ணிக்கோ டா... " என்று பேசிவிட்டு சென்றார். இதைக்கேட்ட தாராவிற்கு இதயம் பாரமாக இருந்தது. தன் தந்தையிடம் இவ்வாறு நடந்துக்கொண்டதை நினைத்து அவள் மனம் வலித்தது...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now