💜10💜

2.4K 111 11
                                    

ஒரு வாரம் ஓடியது...

அன்று வெள்ளிக்கிழமை இரவு...

தருணும், தாராவும் அவர்கள் வீட்டின் பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

"ஒய், பப்பு..."

"ம்ம்ம்... சொல்லுடா."

"நாளைக்கு அப்பாககிட்ட கல்யாணத்த பத்தி என்ன சொல்லணும்ன்னு யோசிச்சு வெச்சுட்டாயா...? அவர் உனக்கு தந்த டைம் நாளையோட முடியுது... ஞாபகம் இருக்குல்ல?"

"ஹான், இருக்கு... இருக்கு..."

"சோ... என்ன டிசைட் பண்ணி இருக்க?"

"என்னைக் கேட்டால், எனக்கு இதெல்லாம் சுத்தமா விருப்பம் இல்லைதான். யோசிச்சிட்டு இருக்கேன்."

"அது சரி...இருக்கட்டும்... நீ எப்ப அர்ஜுன லவ் பண்ண ஆரம்பிச்ச? அந்த விஷயத்தை முதல்ல என்கிட்ட சொல்லு... "

"போடா..."

"ப்ளீஸ் டீ... அன்னைக்கே சொல்றேன்னு சொல்லி ஏமாத்திட்ட...  இன்னைக்காவது சொல்லு... அப்பத்தான் கல்யாணத்த நிறுத்த ஹெல்ப் பண்ணுவேன்... "

"உண்மையாவே ஹெல்ப் பண்ணுவியா?" என்றாள் உற்சாகமாக.

"நீ மொதல்ல சொல்லி முடி...  பண்ணறேன்..."

"ஓகே சொல்றேன் கேளு..." என்று தொடர்ந்தாள்.....

"அது எப்பன்னு எனக்கு சரியா சொல்ல தெரியல...

பத்து வருஷத்துக்கு முன்னாடி நம்ம அம்மா இறந்துட்டாங்க'ல. அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்... நீ கல்லூரி முதலாம் ஆண்டு, அப்பறம் அர்ஜுன் பனிரெண்டாம் வகுப்புல இருந்தான்.

அந்த சமயத்துல நீயும், நானும் வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தோம். தினமும் அழுதுகிட்டே இருப்போம். ஞாபகம் இருக்கா?

அப்பாவும் ரொம்ப மனசு உடைந்து போய் இருந்தாரு. நம்மகூட அவரு சரியா பேசல, நேரம் செலவழிக்கவே இல்ல. அந்த நேரத்துல சரோஜாமாவும், அர்ஜுனோட அம்மா மைதிலி ஆன்டியும் தான் நம்மள கவனிசிக்கிட்டாங்க...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now