💙45💙

2.1K 107 30
                                    

"தாரா, உனக்கு முதல்'ல அறிவு இருக்கா? என்னன்னு என்கிட்ட சொன்னாதான டி எனக்குத் தெரியும். நீ வாட்டுக்கு ஃபோன்ல கத்திக்கிட்டு இருக்க." என்று அர்ஜுன் கத்த...

"அது வந்து, போன முறை உனக்கு நான் கால் பண்ணப்ப, ஃபோன் ஸ்பீக்கர்'ல இருந்துச்சு. அத்தை நாம பேசறதப் பக்கத்துல உட்கார்ந்து கேட்டுட்டு இருந்தாங்க." என்று நடந்ததைக் கூறினாள் தாரா.

"அப்படியா?" என்று அதிர்ச்சியாகக் கேட்ட அர்ஜுன்...
"ஏன் டி இந்த விஷப் பரிட்சை. நல்ல வேளை, நான் காலை'ல நடந்ததை உளறி இருப்பேன்."

"அதுனால தான் டா நீ பேசுறதுக்கு முன்னாடி, நான் ஃபோனை வெச்சுட்டேன்."

"சரி! எதுக்குடி அத்தையும், மருமகளும் சேர்ந்து எனக்கு ஃபோன் பண்ணீங்க?"

"நீயும், நானும் ஹேப்பியா இருக்கோமா'னு அவங்களுக்கு சந்தேகம் வந்துருச்சு அர்ஜுன். அதான் உனக்கு ஃபோன் பண்ணி, என்னை பேசச் சொன்னாங்க."

"ஹோ! எதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான டி. அம்மா என்ன சொன்னாங்க?"

"அதெல்லாம் நான் சமாளித்து விட்டேன். நீயும் இனிமே பார்த்துப் பேசு அர்ஜுன்."

"ஹான் சரி சரி, அம்மா வேற எதாவது சொன்னாங்களா?" என்று அர்ஜுன் கேட்க...

"உன்னை திருத்தச் சொன்னாங்க." என்று புன்னகைத்தாள் தாரா.

"என்னடி ரெண்டுப் பேரும் கூட்டு சேர்ந்து, என்னைப் பத்தி இப்படிலாம் பேசறீங்க. வேற என்னப் பேசுனீங்க?"

"Mr. அர்ஜுன், எனக்கும் என் அத்தைக்கும் நடுவு'ல ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உனக்கு சொல்ல முடியாது."

"எல்லாம் என் அம்மா உனக்குக் கொடுக்கற செல்லம் டி. உனக்கெல்லாம் கொடுமைப் படுத்தற மாமியார் கிடைச்சிருக்கனும். மைதிலி மாதிரி ஒரு அன்பான மாமியார் கிடைச்சனால நீயும் ஓவர் சேட்டைப் பண்ணற."

"ஆமா, உனக்கு என்ன வந்துச்சு? நீ பொறாமை'லப் பேசாத." -தாரா.

"ஹ்ம்ம்! சரி வேற எதாவது சொல்லனுமா, இல்ல ஃபோனை வைக்கவா?" என்று அர்ஜுன் பேசும் முன்பு, வேகமாகக் குறுக்கிட்ட தாரா...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now