💙39💙

2.2K 112 29
                                    

"சரி, சரி! அழாத. அதான் அவனை அடிச்சு ஓட விட்டாச்சுல?" என்று தாராவை தன் மார்போடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

கண்ணைத் துடைத்த தாரா... "அர்ஜுன், கால் வலிக்குது டா. நாம போகலாமா?" என்று கண்கள் விரிய கேட்டாள்.

"சரி, என் தோள் மேல கை போட்டுக்கோ." என்று அர்ஜுன் கூற... அவன் கழுத்தை சுற்றி தன் கையைப் போட்டாள் தாரா.

அவளின் இடையை நன்றாகப் பிடித்தவன்... "மெதுவா அப்படியே நடந்து வா டி." என்று அவளை தாங்கிப் பிடித்தான்.

மெல்லமாக அடியெடுத்து வைத்து நடந்தாள் தாரா.

"அர்ஜுன், எனக்கு ஒரு சந்தேகம்." என்று மெதுவாக நடந்துக் கொண்டே தாரா கேட்க...

"என்ன டி?" என்று அவளைப் பார்த்தான் அர்ஜுன்.

"இதான் சாக்குண்ணு என் இடுப்பை நீ பிடிக்களையே?" என்று தாரா அவனை சந்தேகமாகப் பார்க...

தாரா தலையில் தட்டிய அர்ஜுன்... "தூ, சைத்தானே... எனக்கு இது தேவைதான் டி. பாவம்'னு உன்னைத் தாங்கிப் பிடிச்சு கூப்பட்டுப் போறேன் பாரு, என்னைச் சொல்லணும். இதுக்கு மேல பேசின'னு வை. அப்படியே குளத்துகுள்ள தள்ளி விட்டுருவேன்." என்று மிரட்ட...

"அப்படிலாம் பண்ணிடாத. நான் அமைதியா வரேன்." என்று ஒற்றை விரலை வாய்மீதி வைத்தாள் தாரா.

நான்கு அடிகள் எடுத்து வைப்பதற்குள்... "ஆ! அய்யோ?" என்று தாரா கத்த...

"இப்போ என்னாச்சு?" என்று தாராவை  கேட்டான் அர்ஜுன்.

"என்னால முடியல. கால் நல்லா ஸ்பிரைன் ஆகிட்டு." என்று புருவத்தை சுருக்கினாள்.

"தூக்கிக்கவா?" என்று பாவமாக விழித்தவளைப் பார்த்து அர்ஜுன் கேட்க...

"ஓகே." என்று தலையசைத்தாள்.

"இதுக்கு மட்டும் உடனே சரி'னு தலையாட்டுவையே. ஆனா, லேசா மேல கைப் பட்டாப் போதும் 'ஆச்சா போச்சா'னு கத்துவ." என்று சொல்லிக்கொண்டே அவளை அலுங்காமல், பத்திரமாக தூக்கிக் கொண்டான்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now