💙51💙

2.1K 107 10
                                    

மதுவிடம் பேசிவிட்டு, மீண்டும் அர்ஜுன் மற்றும் நிதிஷ் இருக்கும் இடத்திற்கு வந்தாள் தாரா.

"என்னடி ரொம்ப நேரமாப் பேசிட்டு இருந்த?" என்று அர்ஜுன் தாராவைப் புன்முறுவலுடன் பார்க்க...

"போன வேலை சக்ஸஸ்." என்று தன் கட்டை விரலைத் தூக்கிக் காட்டினாள் தாரா.

"ஐ! தாரா அக்கா நீங்க செம்ம கிரேட்." என்று நிதீஷ் புகழ.

"தெரியும்! தெரியும்!" என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டாள் தாரா.

"அக்கா, முதல்'ல அவளைப் பத்தி சொல்லுங்க. அப்பறமா பந்தாப் பண்ணலாம்." என்று நிதீஷ் அவளுக்கு பல்பு குடுக்க...

'நித்தி, எனக்கே பல்புத் தரயா? இரு உன்னை கவனிச்சுக்கிறேன்.' என்று எண்ணிய தாரா... 
"அவப் பேரு மது."

"மதுவா? கேட்கறப்ப அப்படியே போதை ஏறுது." என்று உருகிய நிதீஷ்... "மேல சொல்லுங்க." என்று கேட்க...

பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான் அர்ஜுன்.

"வேலூர்'ல காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறா. அவ பிரியாவோட ரிலேட்டிவ்." என்று சொல்லி, புன்முறுவல் சிந்திய தாரா... "முக்கியமான விஷயம் என்னன்னா,  உனக்கு அவத் தங்கச்சி முறை வேணும்." என்று சத்தமாக சிரித்தாள் தாரா.

"என்னது தங்கச்சி முறையா?" என்று நிதீஷ் தன் நெஞ்சைப் பிடித்து விழப்போக...

"சும்மா சொன்னேன். ஹார்ட் அட்டாக்ல போயிடாத. அவ பிரியா ஓட சித்திப் பொண்ணு. அப்போ அவ உனக்கு என்ன முறை ஆகுது? நீயே கண்டுப்பிடி டா."  -தாரா.

"ஈ!" என்று பல்லைக் காட்டிய நிதீஷ்... "அப்போ அது எனக்கு கட்டிக்கிற முறை தான் ஆகுது."

"அய்ய! ரொம்ப வழியாத தொடச்சுக்கோ." என்று தலையில் கை வைத்த அர்ஜுன், தாராவிடம் திரும்பி... "இப்போ நீ என்ன வேலைப் பார்த்துட்டு இருக்க'னு உனக்குத் தெரியுதா டி?" என்று கேட்க...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now