💙49💙

2.2K 97 37
                                    

அடுத்த நாள் காலை...

மண்டபத்தில்... பரபரப்பாக திருமண வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது.
தருண் மற்றும் ப்ரியாவின் ரிசப்ஷன் உடைக்கு ஏற்றவாறு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள் வேலையாட்கள்.

அதை வேடிக்கைப் பார்த்து நின்றுக் கொண்டிருந்த அர்ஜுனை அழைத்த தாரா... "அஜ்ஜு, இன்னைக்கு சாயங்காலம் தருண் ரிசப்ஷன்'கு நான் சொன்ன ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டியா?" என்று ரகசியமாக அவன் காதில் கேட்க...

"இதை எதுக்குடி ரகசியமா என் காதுக்குள்ள வந்துக் கேட்டுக்கிட்டு இருக்க? எல்லாமே பக்காவா ரெடி. நீ சொன்ன வெட்டிங் கேக் வாங்கியாச்சு. அப்புறம், தருண், பிரியாவுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக டான்ஸும் ரெடிப் பண்ணிட்டேன்." என்று அர்ஜுன் கெத்தாகச் சொல்ல...

"அச்சோ! சோ ஸ்வீட் என் செல்லக்குட்டி. நான் சொன்னதை எல்லாம் சரியாப் பண்ணிட்ட." என்று அர்ஜூனின் கன்னத்தைப் பிய்த்து, தாரா முத்தம் வைக்க...

"என்ன அர்ஜுன், தாராவைக் கரெக்ட் பண்ணிட்டப் போல?" என்று கூறிக்கொண்டே அங்கு வந்தான் நிதீஷ்.

"என்னது 'கரெக்ட்'ஆ?" என்றுக் கேட்டவாறு தாரா அர்ஜுனைத் திரும்பி முறைக்க...

'ஐயோ! இந்த நிதீஷ் சைத்தான் வேற நம்மள தாராக்கிட்ட கோர்த்து விடுதே!' என்று பயந்த அர்ஜுன், நல்லவன் போலப் பேசினான்...
"அடீங்க! என்னடாப் பேச்சுப் பேசுற?  என்னை மாதிரி டீசண்டாப் பேசிப் பழகு. இந்த மாதிரி பேசுறதெல்லாம் தப்புன்னு உனக்குத் தெரியாதா?" என்று அர்ஜுன் துப்ப...

"யாரு? நீ டீசண்ட்?" என்று அர்ஜுனை மேலிருந்து கீழாகப் பார்த்த நிதீஷ், தாராவிடம்...
"தாரா அக்கா, போயும் போயும் இந்த அர்ஜுன் வலையில இப்படி அநியாயமா விழுந்துட்டீங்களே? எப்படியாவது தப்பித்துப் போயிடுங்க." என்று அவன் பேசப் பேச...

நிதீஷ் தலைமுடியைப் பிடித்து ஆட்டிய அர்ஜுன்... "நான் கமிட் ஆகிட்டேன்னு ரொம்ப வயிறு எரியாத. உன்னை மாதிரி சிங்கிள் பையனுக்கு எல்லாம் என்னைப் பத்தி பேச எந்த உரிமையும் இல்ல. ஒழுங்கா ஓடிப் போயிடு."

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now