💜46💜

2.3K 112 27
                                    

'என்ன இது அர்ஜுன் கால் பண்ணறான்' என்று மகிழ்ந்த தாரா, ஃபோனைக் காதில் எடுத்துவைத்துப் பேசினாள்.

"ஹலோ, அர்ஜுன்."

"தாரா, இன்னும் தூங்கலையா டி? மணி ரெண்டாச்சு."

"இதோ தூங்கப் போறேன் அர்ஜீன். நீ இன்னும் தூங்காம என்னப் பண்ணிட்டு இருக்க?"

"புது இடம்'ல. அதான் தூக்கம் வரல. சரி நீ முழிச்சிருக்கையா பார்க்கலாம்'னு தான் ஃபோன் பண்ணேன்."

"ஹ்ம்ம்!" என்று புன்னகைத்தாள் தாரா.

"சரி, என்னை மிஸ் பண்ணயா? நான் இல்லாம உனக்கு போர் அடிக்குமே." என்று நாசுக்காக அர்ஜுன் கேட்க...

"ச்ச! ச்ச! நான் எதுக்கு உன்னை மிஸ் பண்ணனும்? நீ இல்லாம நிம்மதியா இருக்கேன்." என்று மலுப்பினாள் தாரா.

"அதானப் பார்த்தேன். நல்லா ஜாலியா இரு டி. சரி நான் ஃபோன் வைக்கிறேன். போயி தூங்கு. நாளைக்கு வேலைக்குப் போகணும்ல?" என்று அர்ஜுன் அக்கறையாகக் கூற...

"அர்ஜுன் தூங்கப் போறையா?" சட்டென்றுக் கேட்ட தாராவிற்கு கண்கள் கலங்கியது.

"இல்ல! கபடி விளையாடப் போறேன். என்னக் கேள்வி டி இது? நைட் ரெண்டு மணிக்கு தூங்காம என்னப் பண்ணுவாங்க?" என்று கொட்டாவி விட்டான் அர்ஜுன்.

"ஓகே." என்று தளதளக்கும் குரலில் சொன்னாள் தாரா.

"ஒய், என்னடி உன் குரல் ஏதோ குதிரை கத்தற மாதிரி கேட்குது? சாதாரணமாப் பேசு." என்று சிரித்தாள் அர்ஜுன்.

"ச்ச! உங்கிட்டப் பேசறேன் பாரு. என்ன சொல்லணும் டா. நானே சோகமா அழுதுட்டு இருக்கேன்." என்று அழுதுக்கொண்டேப் பேசினாள் தாரா.

"ஏன்டா மா? என்னாச்சு. எதுக்கு அழுகற?" என்று பதட்டமாக அர்ஜுன் கேட்க...

"பிளீஸ்! அர்ஜுன், இங்கத் திரும்பி வா டா. நீ இல்லாம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியல. எனக்கு அழுகையா வருது டா. தனியாப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு."

"தனியா இருந்தா அப்படி தான் டி இருக்கும். அந்த வீட்டு'ல ஆளுங்களுக்காக் குறைச்சல்? எல்லார் கூடயும் ஜாலியாப் பேசிட்டு இருக்க வேண்டியது தான?" என்று ஐடியாக் கொடுத்தான் அர்ஜுன்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now