💜54💜

2.2K 106 48
                                    

அவளுக்கு காத்திராமல் அர்ஜுன், வேகமாக நடக்க, தாரா கண்களில் கண்ணீர் பொங்கியது. அவன் பின்னே... "அர்ஜுன் நில்லு... பிளீஸ் நில்லு." என்று கத்திக் கொண்டு
ஓடியதை மொத்த ஹாஸ்பிட்டலும் பார்த்தது.

அர்ஜுன் தன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தன் வீட்டிற்குக் கிளம்பிச் செல்ல...

தாராவும் அவசரமாக தன் காரை எடுத்துக்கொண்டு அர்ஜுனை பின்தொடர்ந்துச் சென்றாள்.

வீட்டில் காரை பார்க் செய்து அர்ஜுன் வேகமாக படி ஏறி தன் அறைக்கு ஓடினான்.

'இவன் எதுக்கு இப்படி ஓடுகிறான்?' என்று வீட்டிலிருந்த அனைவரும் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்... அவன் பின்னே வந்த தாராவும் அர்ஜுனை தொடர்ந்து அவனின் பின்னே ஓடினாள்.

"ஏங்க, ஏன் ரெண்டுப் பேரும் இப்படி ஓடுறாங்க'னு தெரியலையே. ஏதாவதுப் பிரச்சினையா இருக்குமோ? நான் வேணாப் போய் பார்த்திட்டு வரவா?" என்று மைதிலி பதட்டமாக ராஜிடம் கேட்க...

"அதெல்லாம் வேணாம் அமைதியா இரு மைதிலி. அவங்க ரெண்டுப் பேரும் சின்னப் பசங்க கிடையாது. எதுவா இருந்தாலும் அவங்களேப் பேசி தீர்த்துக்கட்டும். நடுவுல நீ போக வேண்டாம்." என்று ராஜ் கூற...

"சரி!" என்று தலையசைத்துவிட்டு அமர்ந்தாள் மைதிலி.

மாடி ஏறிச் சென்ற அர்ஜூன்... தன் அறையின் மெத்தையில் கோபமாக அமர்ந்திருந்தான்.

அவனின் பின்னே வந்து அறைக்குள் நுழைந்த தாரா, அறையின் கதவைப் பூட்டிவிட்டு அவனின் அருகேச் சென்று அமர்ந்தாள்.

தாராவைக் கண்டும் காணாததுப் போல், வேறுப் புறம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

தாராவின் கண்களிலோக் கண்ணீர் குளம் போல நிரம்பி இருந்தது.

அந்த சிறிது நேர மௌனத்தை உடைத்தத் தாரா...
"அர்ஜுன், என்னை சந்தேகப் படறையா? உன்னுடைய தாரா மேல சந்தேகப் பட எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு?" என்று மனம் நொந்துக் கேட்க...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now