💜40💜

2.4K 107 29
                                    

"அய்யோ தாயே தெரியாம பண்ணிட்டேன். மன்னிச்சிடு மா." என்று ஒரு கும்பிடு வைத்தான் அர்ஜுன்.

அதைப் பார்த்து சத்தமாக சிரித்தாள் தாரா.

"என்ன இளிப்பு? பல்லு வெளியக் கொட்டிடப் போகுது." என்று பளிப்புக் காட்டினான் அர்ஜுன்.

"எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ ஷட் பண்ணு." என்று தாரா திமிரான சிரிப்புடன் சொல்ல.

"முடியாது போ டி." என்று ஃபோனை கையில் வைத்துக் கொண்டே சொன்னான்.

"உன்னை எப்படி வாயை மூடவைக்கணும்'னு எனக்குத் தெரியும். என் கால் சரியாகட்டும். அப்புறம், உன்னை நான்  கவனிச்சுக்கிறேன்." என்று இதழின் ஓரமாக சிரித்தாள் தாரா.

"என்கிட்டயே சவாலா. ம்ம்! பார்த்துக்கலாம். இப்போ என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நான் கேம் விளையாடனும்." என்று தன் தொலைப்பேசியில் பப்ஜி கேம்'ஐ ஓபன் செய்தான்.

"இவன்லாம் இந்த ஜென்மத்தில் உருப்பட மாட்டான்." என்று வாயில் புலம்பியத் தாரா, கண்கள் மூடி உறங்கினாள்.

அதே சமயம்...

தருண் மற்றும் பிரியா... தங்கள் இருவருக்கும் இடையில் சிறிது இடைவெளி விட்டு, மௌனமாக நடந்துக் கொண்டிருந்தனர்.

நிசப்தத்தை உடைத்த பிரியா.. "சொல்லுங்க தருண். ஏதோ பேசணும்னு சொன்னீங்க?" என்று கேள்வியை கேட்க...

"நான் உங்கக் கிட்ட சொன்னதுக்கு நீங்க பதில் எதுவும் சொல்லலையே. நான் உங்களைக் கட்டாயம் பண்ணல. உங்க மனசுல தோன்றாதை சொல்லுங்க." என்று ப்ரியாவின் பதிலை எதிர்நோக்கி, அவள் முகத்தைப் பார்த்தான் தருண்.

"தாராவும் என்கிட்ட இதையே தான் சொன்னா தருண் சார். நீங்க என் பதிலை எதிர் பார்க்கறதுக்கு முன்னாடி ... நான் உங்கக் கிட்ட ஒன்னு சொல்லணும்." என்று பெரு மூச்சு விட்டவள்... "எனக்கு கடந்த காலத்தில் ஒரு காதல் இருந்துச்சு." என்றாள் தளர்ந்த குரலில்.

"எனக்கும் இருந்துச்சு." என்றான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now