💙27💙

2.3K 112 19
                                    

"அத்தை நாங்களும் வறோம். எனக்கு இன்னும் நாலு நாள் லீவ் தான்." என்று தோசயை பிய்த்து வாயில் வைத்துக்கொண்டே சொன்னாள் தாரா.

"அச்சோ புரியாம பேசாத மா. நீங்க தனியா இருக்கனும்'னு தான் நாங்களே போறோம்." என்று தாராவின் தலையை வருடினாள் மைதிலி.

"அட அம்மா, நாங்க இங்க தனியா உட்கார்ந்து என்ன பண்றது?" என்று ஏதும் புரியாத அப்பாவிப்போல கேட்டான் அர்ஜுன்.

"அடப்பாவி அர்ஜுன்! எப்படி அப்பாவி மாதிரி நடிக்கறான் பாருங்க. இவனுக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா... இந்நேரம் கையில ஒன்னு, தோள்ல ஒன்னு, மடியில ஒன்னு'னு வெச்சுருப்பான்." என்று இவனைப்பத்தி காதுக்குள்ளே பேசிக்கொண்டார்கள் ரம்யா, நிதீஷ், ஐஸ் மற்றும் ரஞ்சித்.

"அர்ஜுன் கண்ணா, நாங்க சொன்னா சொன்னது தான். நீயும், தாராவும் வீட்டுல இருங்க." என்று ராஜ்குமார் சொல்ல, அமைதியானான் அர்ஜுன்.

________________________

அன்றைய தினம் முழுவதும்... மிக சாதாரணமாகவே சென்றது. அர்ஜுன், தாரா இருவரும் நாள் முழுவதும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை.

இரவு பொழுதும் வந்தது...

மெல்லமாக பூனைப்போல் தன் அறையினுள் நுழைந்தாள் தாரா.

தன் அறையின் மெத்தையில் டிவி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு இருந்தவனின் அருகில் தயக்கமாக நின்ற தாரா... "ஹர்ம்! ஹர்ம்!" என்று செருமினாள்.

அவளை அன்னார்ந்து பார்த்தவன்... "என்ன?" என்று கண்களால் கேட்டான்.

"தூக்கம் வருது." பட்டென்று சொன்னாள் தாரா.

"வந்து தூங்கு. எதுக்கு என்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு இருக்க?" என்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே கூறினான்.

"அது... எப்படி ஒரே பெட்'ல தூங்கறது?" என்று தயக்கமாக கேட்டாள் தாரா.

"முடியாது'ன்னா தரையில படுத்துக்கோ." என்று திமிராக பதில் சொன்ன அர்ஜுனை முறைத்தவள்...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now