💙11💙

2.4K 121 20
                                    

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தாராவின் முகத்தில் தண்ணீரைத்தெளித்தான் அர்ஜுன்.

பதறி அடித்துக்கொண்டு எழுந்த தாரா... "ஹே... அர்ஜுன்" என்றாள் உற்சாகமாக.

"எப்படி இருக்க? தூங்கு மூஞ்சி..."

"நல்லார்க்கேன்... எப்படா ஊர்ல இருந்து வந்த?..."

"நேத்து நைட்டு வந்தேன் டி..."

"அது சரி, எதுக்குடா என் மூஞ்சில தண்ணி தெளிச்ச? " என்று பேசிக்கொண்டே, அருகே இருந்த கைக்குட்டையில் முகத்தைத்துடைத்தாள்.

"உன்ன எழுப்ப தான். வேற எதுக்கு? ..." என்றான் நக்கலாக. 

"அடீங்க..." என்று அர்ஜுனின் தலையில் கொட்டிய தாரா... "ஒரு வழியா MBA பாஸ் பண்ணிட்ட போல."

"ஆஆ..." என்று தலையை தடவியவன்.. "அதெல்லாம் பண்ணிட்டேன்... பின்ன உன்ன மாதிரி அரியர் வெச்சுட்டு திரியுவேன்னு நினைச்சயா?" என்று பல்லைக்காட்டினான்.

"பல்லைக்காட்டாத... MBBS எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நான் ஒரே ஒரு அரியர் தான் வைத்தேன். அதையும் எப்பவோ கிளியர் (clear) பண்ணிட்டேன். அரியர் வைக்காதவன் அரை மனுஷன்."

"அரியர் வெச்சிட்டு எப்படி எல்லாம் சமாளிக்குது பாரு..." என்று கூறிக்கொண்டே தாராவின் அறையினுள் நுழைந்தான் தருண்.

"அதைப்பற்றி... நீ சொல்லாத தருண்... காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் ஆகுது... இன்னும் நீ நாலு அரியர் கிளியர் பண்ணாம இருக்க. நீ மொதல்ல பாஸ் பண்ணி... வேலைக்கு போய்ட்டு... அப்பறம் வந்து பேசு." - தாரா.

"எல்லாம் எங்களுக்கு தெரியும். நீ அடங்கு..." - தருண்.

"வாடா தருண்... உன் அழகு தங்கச்சிய பாரு... இன்னும் தூங்கிட்டு இருக்கா... மணி 11.30 ஆச்சு." என்றான் அர்ஜுன்.

"இன்னைக்கு சன்டே'ல... காலேஜ் லீவ்... அதான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்." என்று சோம்பல் நெட்டி முறித்தாள்.

"இல்லேனா மட்டும் அப்டியே சுறுசுறுப்பா ஓடியாடி பல வேளை செஞ்சர போரயா? சோம்பேறி. மொதல்ல பல்லு விலக்கிவிட்டு பேசு. முடியல." என்றான் தருண்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now