💜50💜

2.1K 97 25
                                    

பிரியா மற்றும் தருண் மண்டபத்திலிருந்த மேடையின் மீது ஏறி, ஜோடியாக நிற்க... அங்கிருந்த நடனக்குழுவிற்கு அர்ஜுன் சிக்னல் கொடுத்தான்.

அடுத்த நொடியே... அந்த மண்டபம் அதிரும் அளவிற்கு சத்தமாகப் பாடல் ஒலித்தது.

'மல்லிகையில் ஒரு மாலை, தங்கச்சரிகையில் ஒரு சேலை
            ஆ….. மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை              
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்……… ஓ……
கல்யாணம் கண்டுபிடித்தான்....
             தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா
பின்பு ஜீவிதம் துந்தனானேனா
           அடடா நீ அழகி என்று ஆர்ப்பரிப்பான் உன் கணவன்...
வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று
            ஓ……… கதை கொஞ்சம் மாறும்போது
வார்த்தைகளெல்லாம் பாழாகும்
வாழ்வே ஓர் போர்க்களமாகும்
            ஹே… ஹே… நீ மோதிட வேண்டும்
தாலி உன் தாலி அது உன்னைக் கட்டும் வேலி
             கூடைக்குள்ளே மூச்சுமுட்டும் கல்யாணக் கோழி
தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே
               பறந்துகொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே
அ…….
              அம்மி மிதிக்கிற வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல் இருப்பதில்லை
சிறகினை அடகுவைத்தால்
               பறவையின் வாழ்வில் சுகம் இல்லை
அ… அணைப்பதும் அடங்கி நின்று
தவிப்பதும் ஓர் மயக்கம்தானே
               நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொர்க்கம்.'

அந்தப் பாடலுக்கு ஏற்ப நடனக் கலைஞர்கள் ஆட...

தாரா அருகில் வந்த அர்ஜுன், அவளை இழுத்துக் கொண்டு ஆடுபவர்கள் நடுவில் சென்று தானும் அவர்களுடன் சேர்ந்து ஆடினான்.

தாரா அசையாமல் வெட்கப் பட்டு நின்றாள்.

"ம்ம்! என் கூட டான்ஸ் பண்ணு." என்று தாராவின் கைகளைப் பிடித்து அர்ஜுன் அசைக்க... அவளும் அவனுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்தாள்.

இருவரும் ஜோடியாக சேர்ந்து அழகாக ஆட, இவர்களுக்கு ஏற்ற மாதிரி, இவர்களின் பின்னே நின்றுக் கொண்டு ஆடினார்கள், நடனம் ஆடுபவர்கள்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now