💙09💙

2.4K 113 17
                                    

கீழே விழுந்துக்கிடந்த தருணை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர் அனைவரும்.

'எவனாவது ஒருத்தனாச்சு வந்து தூக்கி விடரானா பாரு... எவன் விழுந்தாலும், செத்தாலும் இவனுங்க இந்த வேடிக்கை பார்க்கிற பழக்கத்தை மட்டும் என்னைக்குமே விட மாட்டானுங்க போலிருக்கு... இப்ப மட்டும் என் நண்பன் அசோக் இங்க இருந்திருந்தா என்ன தூக்கி விட்டு இருப்பான்... டேய் அசோக் எங்கடா போய் தொலைஞ்ச...' என்று மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்த தருணை தூக்கி விட ஒரு கை வந்தது. அது அனேகமாக அசோக்கின் கையாக தான் இருக்கும் என்று நினைத்த தருணுக்கு ஏமாற்றமே... ஏனென்றால் அது ஒரு பெண்ணின் கை...

'எந்த பொண்ணு நமக்கெல்லாம் கை தருகிறாள்?' என்று நிமிர்ந்து பார்த்தான்...

அந்தப் பொண்ணு வேற யாரும் இல்ல. நம்ம ப்ரீயா தான். ஏனோ அவள் முகத்தில் ஒரு பதட்டம் நிலவி இருந்தது.

"ஐயோ சார்..., பார்த்து நடந்து வரலாம்'ல. இப்படி தடுக்கி விழுந்துட்டீங்க... கை குடுங்க சார் நான் தூக்கி விடுரேன்..." என்று தன் கரத்தை நீட்டிய பிரியாவின் கரத்தைப் பற்றி எழுந்தான் தருண்.

'நம்ம ஆபீஸ்ல இந்த ஒரு பொண்ணுக்காவது நல்ல மனசு இருக்கே...' என்று மனதில் பெருமிதம் கொண்டவன்... "எவன்டா அது நடக்கிற வழியில் லேப்டாப் ஒயரை(wire) போட்டு வச்சது?" என்று சுற்றி நின்றவர்களை பார்த்துக்கேட்டான்.

"சாரி சார்" என்று பாவமாக கூறினாள் பிரியா.

"நீ ஏன்மா சாரி சொல்ற? " என்று கேட்டான் ஒன்றும் புரியாதவனாய்.

"அந்த லேப்டாப்ப வச்சதே நான் தான் சார். அது என்னோட லேப்டாப் தான். சார்ஜ் இல்லைன்னு போட்டு வெச்சேன். சாரி சார்."
என்று அப்பாவியாக விழித்த பிரியாவை திட்டக்கூட தருணுக்கு மனம் வரவில்லை.

"இட்ஸ் ஓகே பிரியா. தப்பு என் மேலதான் நான்தான் கவனிக்காம வந்து லேப்டாப் ஒயர்ல கால விட்டுட்டேன்."

அப்பொழுதுதான் தருண் கவனித்தான். லேப்டாப் ஒயருடன் சேர்ந்து லேப்டாப்பும் தரையில் விழுந்துக்கிடந்தது.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now