💜06💜

2.4K 119 6
                                    

"உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் ஏற்கனவே தெரியுமா ? " என்ற அசோக்கின் கேள்விக்கு 'இல்லை' என்று தலையாட்டினாள் அவள்... 'ஆமாம்' என்று தலையாட்டினான் தருண்....

"இன்னிக்கு காலைல தான் முதல் முறையா மீட் பண்ணோம்...
பை தி வே... ஐயம் தருண் கிருஷ்ணா. இந்த கம்பெனியோட ப்ராஜெக்ட் டைரக்டர். நைஸ் டு மீட் யு." என்று மெல்லிய புன்னகையுடன் அந்தப்பெண்ணை நோக்கினான்.

"ஹலோ சார், ஐ அம் ப்ரியா தர்ஷினி... என்னை மன்னிச்சிடுங்க... காலை'ல உங்கள நான் கொஞ்சம் ரூடா பேசிட்டேன். I'm sorry sir. " என்று நடுங்கிய குரலில் கூறினாள்.

"அப்படி என்ன தான் டா ஆச்சு காலை'ல? எனக்கு ஒண்ணுமே புரியல... " என்று குழப்பமாக கேட்டான் அசோக்.

"சொல்றேன் கேளு...

நாலு ரோடு ஒண்ணா சேரும் சிக்னல்ல  பைக்'ல போய்ட்டு இருந்தேன். இன்னிக்கு செம ட்ராபிக் ஜாம். சைக்கிள் போகவே சரியா வழி இல்ல. அப்பதான் இந்த பொண்ணு எனக்கு இடது பக்கம்  ஸ்கூட்டியில் போயிட்டு இருந்தாங்க. இவங்க ஸ்கூட்டில இடதுபக்க இண்டிகேட்டர் ஆன்ல இருந்தது. So, லெஃப்ட்  சைட்  திரும்பிடுவாங்கன்னு பார்த்தா... இவங்க வலது பக்கம் திரும்பிட்டாங்க. என்னுடைய வலதுபக்கம் வேர கார் காரன் வந்துட்டான். நான் பேலன்ஸ் இல்லாமல் வண்டிய ஆஃப் பண்ணிட்டேன். But, லைட்டா அந்த ஸ்கூட்டில இடிச்சுட்டேன்.

"யோ, வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடு நினைச்சியா? என் ஸ்கூட்டில பாரு கோடு விழுந்திருச்சு. பைக் விட்டு இறங்கி வந்து ஒழுங்கா மன்னிப்பு கேளு." என்று கோபமாக கத்தினாள் ப்ரியா.

"ஹலோ மேடம், கொஞ்சம் பார்த்து பேசுங்க. லெப்ட் சைட் இன்டிகேட்டர் போட்டுட்டு ரைட் சைடு வண்டிய திருப்பினது நீங்க." என்று இவன் பதிலுக்கு கத்த...

"உன்கிட்ட பேச எல்லாம் எனக்கு டைம் இல்ல. உன் பைக் நம்பர் நோட் பண்ணிட்டேன். உன்ன எங்க பார்த்துக்கணுமோ, நான் அங்க பார்த்துக்கிறேன்." 

"நானும் பார்த்துக்கிறேன். போடி போடி..." என்று இவன் பேசிக்கொண்டிருக்கும்போதே  சிட்டாகப் பறந்தாள் ப்ரியா...

இதுதான் நடந்துச்சு....! " என்று கூறி முடித்தான் தருண்.

பிரியாவிற்கு வேற பயத்தில் கைகள் நடுங்கியது... 'ஐயோ... இது என்ன எனக்கு வந்த சோதனை. இவன் வேற இனி நம்மள என்ன செய்யப் போகிறானோ தெரியலையே... இவன் ப்ராஜெக்ட் டைரக்டர் வேற... எல்லாம் என் நேரம். கடவுளே! நீ தான் காப்பாத்தனும். '

"என்ன ப்ரியா... எதையோ தீவிரமாக யோசித்துக் இருக்கீங்க? "  தருண் நக்கலாக கேட்க...

"உன் பைக் நம்பரெல்லாம் நோட் பண்ணி இருக்காங்க. அதான் உன்ன எங்க கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு யோசிச்சு இருக்காங்க போல" அசோக்கும் அவனுடன் சேர்ந்து நக்கலடிக்க...

"யாரு மேல யாரு கம்ப்ளைன்ட் பண்றாங்கன்னு பொறுத்திருந்து பாரு." என்று மிரட்டுவது போல தருண் பேசினான்.

இதை கேட்ட ப்ரியாவின் கண்களில் தாரை தாரையாகக் கொட்டியது கண்ணீர். அதைப் பார்த்து பதறிய அசோக் "ஐயோ ப்ரியா... ஏன் அழுகறீங்க? நாங்க சும்மாதான் விளையாடினோம்."

"மேடம் கண்ணுல ஒரு லிட்டர் தண்ணி வரும் போல இருக்கே. டேய் அசோக் அந்த பாட்டில் எடு. கொஞ்சம் பிடிச்சு வச்சுக்கலாம். நாட்டுல வேற தண்ணி பிரச்சினையா இருக்கு..." தருண் கூறுவதைக் கேட்ட 'களுக்' என்று சிரித்தாள் ப்ரியா.

"நீங்க இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுவீங்க  என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை." - அசோக்.

"எங்கள பார்த்ததெல்லாம் பயப்படாதீங்க... நாங்க ரொம்ப ஜாலி டைப். நீங்க உங்க வேலைய சரியா செய்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் உங்களை ஒன்றுமே சொல்ல மாட்டோம். எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க." என்று புன்னகைத்தான் தருண்.

"தேங்க்ஸ் சார்" பதிலுக்கு புன்னகைத்தாள் ப்ரியா.

"டேய் ரொம்ப நேரமா இங்கு ஒரு பையன் நின்னுட்டு இருக்கான். அவனும் கஷ்டப்பட்டு இண்டர்வியூ போய் வந்தவன் தான். பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பேசுவியா. கொஞ்சம் அவன் கிட்டேயும் பேசு." அசோக் கலாய்க்க ப்ரியாவும் சிரித்துவிட்டாள்.

தருண் இருவரிடமும் கம்பெனி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன், அந்த வாரம் முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி கூறிவிட்டு... அவர்களை அனுப்பினான். 



_

_______________________________

(தொடரும்...💜)

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now