53

2K 91 24
                                    

அடுத்த நாள் காலை...

வேகமாக எழுந்து ஹாஸ்பிடல் செல்வதற்காக...
குளித்து முடித்து வந்த தாரா... ஒரு சுடிதாரை மாட்டி, 'தடால்!' 'தடால்!' என்று கிளம்பிக் கொண்டிருந்தாள்.

தாரா போடும் சத்தத்தில் கண்விழித்த அர்ஜுன்... "என்னடி இப்படி சத்தம் பண்ணிட்டு இருக்க? மனுஷனைத் தூங்க விடு டி." என்று எழுந்து அமர....

"அய்யோ! எனக்கு ஹாஸ்பிட்டல் போக நேரம் ஆச்சு. இன்னைக்கு செம்ம லேட் ஆகிருச்சு." என்று புலம்பிள், அர்ஜுனிடம் திரும்பி...
"அஜ்ஜு, என் கோட்டைப் பார்த்தயா?" என்று கேட்க...

"எந்த கோட் டி. டாக்டர் கோட்'ஆ?" என்று கண்களை கசக்கிக் கொண்டே எழுந்து நின்றான்.

"ஆமா. எங்க வெச்சேன்'னத் தெரியல." என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டு இருந்தாள் தாரா.

"இன்னொரு எக்ஸ்ட்ரா கோட் வெச்சிருந்தையே அதை எடுத்துப் போட்டுட்டுப் போக வேண்டியது தானே?"

"அதையும் காணோம். கொஞ்சம் தேடிக் குடு டா." என்று அவள் பதட்டமாகத் தேட...

அர்ஜுனும் அவளுடன் சேர்ந்துத் தேடினான்.

கோட் ஒரு தலையணையின் அடியில் இருக்க, அதைக் கையில் எடுத்த அர்ஜுன்... "இந்தா டி." என்று அவளிடம் நீட்டினான்.

"தாங்யூ டா." என்று அர்ஜுன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவள், வேகமாக வெளியே தன் கோட் மற்றும் பேக்குடம் ஓடினாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த அர்ஜுன், மீண்டும் மெத்தையில் படுத்து கண்களை மூடினான்.

அதற்கடுத்த நொடியே அறைக்குள் ஒடி வந்தான் தாரா.

அவள் வந்த சத்தத்தில் மீண்டும் கண் விழித்த அர்ஜுன், எழுந்து அமர...

"அர்ஜுன். நான் ஒன்னு சொல்லமறந்துட்டேன்." என்று அவசரமாகப் பேசினாள் தாரா.

"என்ன டி?" என்று கொட்டாவி விட்டுக் கொண்டேக் கேட்டான் அர்ஜுன்.

"நேத்து நைட் சொன்னது ஞாபகம் இருக்கு'ல? இன்னைக்கு அதுக்கான பதில் சொல்லறேன்'னு சொல்லி இருக்க டா. நல்லா யோசிச்சு நைட் உன் முடிவைச் சொல்லு." என்று ஒரே மூச்சில் தாரா பேச...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now