💙01💙

4.1K 136 28
                                    

வானில் இளஞ்சூரியன் எட்டிப்பார்க்கும் அந்த காலையிலே... குளிர் காற்றுடன் குயிலின் ஓசை கானமாய் ஒலிக்கும் வேலையிலே... பூ போன்ற மெல்லிடையை தொட்டு ஆடியது அவளின் சிவப்பு வண்ண பட்டு சேலை.

"ஓய் பப்பு, உன்னை அப்பா கூப்பிடராறு. நேரம் ஆச்சு. சீக்கிரம் கிளம்பி கீழ வா..." வீட்டின் மாடி அறையிலே தயாராகிக் கொண்டிருந்த தாராவின் ரூம் கதவைத் தட்டினான் தருண்.

"இதோ கிளம்பிட்டேன்டா, 10 மினிட்ஸ்."

"அடியே... சீக்கிரம் வா. கல்யாணம் ரம்யாவிற்கு தான். உனக்கு இல்ல. So, மேக்கப் பண்ணதெல்லாம் போதும்." என்று தருண் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவை திறந்து வெளியே வந்தாள் தாரா.

"ஹலோ பிரதர், நான் மேக்கப் போடவே இல்லை. நாங்களாம் இயற்கையிலேயே அழகு." 

'நம்ம தங்கச்சியா இவ்வளவு அழகா மாறிட்டா' என்று மனதுக்குள் எண்ணிய தருண் ...அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்  "ஆமா ஆமா, அதான்  பாத்தாலே தெரியுதே. டைனோசர் முட்டை மாதிரி ஒரு மூஞ்சி. இதுக்கெல்லாம் மேக்கப் தேவையா? "

அவனை முறைத்த தாரா "என்னையே கலாய்ச்சுட்ட'ல... இருடா உன்னை அப்பா கிட்ட கம்ப்ளைன்ட் பண்றேன். அவர்கிட்ட திட்டு வாங்கினா தான் நீ அடங்குவ..."

இருவரும் வாய்ச் சண்டை போட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தனர். இவர்களுக்காக தந்தை ரகுராம் மற்றும் இவர்களின் வீட்டில் வேலை செய்யும் சரோஜா அம்மாவும் காத்துக்கொண்டிருந்தார்கள். 

தருணும் தாராவும் தாய் இல்லா பிள்ளைகள்...!

இவர்களை கடந்த 10 ஆண்டுகளாக தன் சொந்தப் பிள்ளைகளைப் போல் பாசமாக கவனித்து வருகிறார் சரோஜா. இவர்களும் அவளை ஒரு தாய் போலவே பாவித்து வருகின்றனர்.

தருணுக்கு தாரா மீது கொள்ளை பிரியம். தாராவுக்கும் அண்ணன் என்றால் உயிர். இருந்தும் இருவரும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். தாராவுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பவன் தருண் தான். இவர்கள் மார்டன் பாசமலர்கள்.

"அப்பா பாருங்க இந்த தடியின் என்னை கலாய்ச்சிக்கிட்டே இருக்கான். நான் பார்க்க கேவலமா இருக்கேன்னு சொல்றான்." என்று வாயை சோகமாக சுழித்தாள்.

"டேய் என் புள்ளைய ஏன்டா கலாய்க்கிற? என் பொண்ணு புடவைல பார்க்க அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கா."

"அப்பா இது உங்களுக்கே ஓவரா தெரியல. நீங்க இதுக்கு முன்னாடி மகாலக்ஷ்மியை பார்த்து இருக்கீங்களா?  இல்லையா? "

"நிறைய தடவை பார்த்திருக்கேன்."

எங்க? நம்ம வீட்டு காலண்டர்'லயா?

"இல்ல... என் பொண்ணோட ரூபத்துல..." என்று பெருமையாக தந்தை ரகு கூற...

"அய்யோ! முடியல ப்பா... சரோ மா நீங்களாவது உண்மைய சொல்லுங்க. "

"தாரா குட்டிக்கு என்ன குறைச்சல் தருண் தம்பி? தேவதை மாதிரி இருக்காங்க."

"அப்படி சொல்லுங்க சரோ மா" என்று சரோஜாவை கட்டி அனைத்தாள் தாரா .

"சரோ மா நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க என்று நினைச்சேன். நீங்களும் அவளுக்கு தான் சப்போர்ட்டா? " என்று உதட்டை பிதுக்கினான் தருண்.

"ஹய்ய... மூஞ்சிய இப்படி வெச்சா மட்டும் நீ அப்பாவி ஆகிடுவியா?" என்று நக்கலாக தாரா சிரிக்க...

"அதை நீ சொல்லாதடி ஃபிராடு" என்று தாரா தலையில் செல்லமாக தட்டினான்.

"ஏழு கழுதை வயசாச்சு. இன்னும் குழந்தைகள் மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க... இப்ப ரெண்டு பேரும் வரீங்களா இல்லையா? " என்று கூறிக்கொண்டு காரில் ஏறினார் தந்தை ரகுராம்.

"இவ்வளவு நேரம் இவரும் தான நம்மளோட நின்னு அரட்டை அடிச்சுட்டு இருந்தாரு... இப்போ பாரு... Strict officer மாதிரி பேசிட்டு போரரு..."

" டேய் தருண்... அப்பா டென்ஷன் ஆகரகுள்ள சீக்கிரம் வந்து கார்ல ஏறு. இல்லேனா அவர்கிட்ட நல்ல வாங்குவ நீ... " என்று நல்ல பிள்ளையாய் ஓடி சென்று காரில் ஏறினாள் தாரா.

அவள் பின்னாலேயே தருண் மற்றும் சரோஜா வீட்டை பூட்டிவிட்டு புறப்பட ஆயத்தமானார்கள்.

வாகனம் திருமண மண்டபம் நோக்கி புறப்பட்டது.

______________________

(தொடரும்...💜)

காதலும் கடந்து போகும்💘Où les histoires vivent. Découvrez maintenant