💜16💜

2.3K 115 10
                                    

ஒரு மாதம் ஓடியது...

"ஹேப்பி பர்த்டே பிரியா..." என்று தூங்கிக்கொண்டிருந்த பிரியாவை உற்சாகமாக எழுப்பினார்கள்... பிரியாவின் தாய் தனம், அவளின் மூத்த சகோதரி ஜனனி மற்றும் ஜனனியின் ஐந்து வயது மகள் ஷ்ரேயா.

"கண்களை விழித்த பிரியா... அட இன்னைக்கு என் பிறந்தநாள் என்பதையே மறந்துவிட்டேன்." என்று கண்களை கசக்கிக்கொண்டே எழுந்தாள்.

"பின்ன வேலை வேலை என்று வேலையவே கட்டிக்கொண்டு ஓடிகிறாய். உன்னைப்பத்தி நீ கொஞ்சமாவது கவலைப்பட்டா தான, உனக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கும்." என்று தன் மகளின் தலையை வருடினாள் தனம்.

"வேற என்ன அம்மா பண்ணறது. நான் ஒருத்திதான் இந்த வீட்டுல சம்பாதிக்கிறேன். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்'ல?" என்று மெல்லிய புன்னகை வீசினாள் பிரியா.

"பிரியா, பக்கத்து ஸ்கூல்'ல ஒன்னாம் வகுப்பு கணக்கு வாத்தியார் தேவை'னு போஸ்டர் பார்த்தேன். நாளைக்கு அங்கப்போயி வேலை கிடைக்குதான்னு முயற்ச்சி பண்ணிப்பார்க்கிறேன். நானும் வேலைக்கு போயிட்டா... அப்பறம் நம்ம கஷ்டம் பாதியாக குறைந்துவிடும்." என்று நம்பிக்கையாய் பேசனாள் அக்கா ஜனனி.

"அட, நான் தான் இப்போ பெரிய கம்பனில வேலைக்கு போறேன்'ல. நீ வீட்டுல இருந்து பாப்பாவ பார்த்துக்கோ க்கா. முதல் மாதம் சம்பளம் 50,000 ரூபாய் நாளைக்கு வந்திடும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நமக்கு இருக்கிற கடனையெல்லாம் அடைத்து விட்டு,  மகிழ்ச்சியாக வாழலாம்." என்றாள் பிரியா மகிழ்ச்சியாக.

"பராவல டி. எனக்கும் வீட்டுல போர் தான் அடிக்குது. பாப்பாவ பாதுக்க தான் அம்மா இருக்காங்களே. நான் வேலைக்கு முயற்சி பண்ணி பாக்கறேன்." - ஜனனி.

"சரி க்கா... உனக்கு எது விருப்பமோ அதையே பண்ணு." என்று தன் சகோதரியின் தோள்களை தட்டி உற்சாகப்படுத்தினாள் பிரியா.

"ம்ச்... இன்னைக்கு கூட வேலை, வீட்டுக்கடன் பத்தி தான் பேச்சா? போதும் பிரியா, இன்னைக்கு ஒரு நாளைக்கு ஆஃபீஸ் லீவ் எடு. பக்கத்து ஊரு கோவிலுக்கு போய்ட்டு வரலாம்." என்று பிரியாவின் பதிலை எதிர்பார்த்து நின்றாள் தனம்.

காதலும் கடந்து போகும்💘Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin