💜30💜

2.3K 113 54
                                    

"பாவிங்களா! இப்படி என்னையும், தாராவையும் பிரிச்சுட்டீங்களே..." என்று நிதீஷ் காதில் சோகமாகச் சொன்னான் அர்ஜுன்.

"மாமா, நீ பேசாம அந்த சைடு போய் அக்கா பக்கத்துல உட்காரு. உன்னை யாரும் இங்க பிடிச்சு வைக்கல. நானாச்சும் ஜன்னல் சீட்டு'ல உட்காருவேன்." என்று ஜன்னல் சீட்டை ஏக்கமாகப் பார்த்தான் நிதீஷ்.

"போடா, நான் தான் ஜன்னல் பக்கத்து'ல உட்காருவேன்." என்று ஜன்னல் கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான் அர்ஜுன்.

"இந்த அர்ஜுன் இந்த ஜென்மத்துல உருப்பட மாட்டான்." என்று எண்ணிய நிதீஷ்... "ஜன்னல் சீட் முக்கியமா தாரா முக்கியமா?" என்று கேட்க...

தீவிரமாக யோசித்த அர்ஜுன்... "தாரா தான். பட், எப்படிடா அவ பக்கத்து'ல போறது? இப்போ சீட்டை மாத்துனா, அவ என்னைப் பத்தி கேவலமா நினைக்க மாட்டாளா?"

"அதைப் பத்தி கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கறேன்." என்ற நிதீஷ்... தாராவிற்கு கேட்கும் விதத்தில் சத்தமாகப் பேசினான்.

"அஜ்ஜு மாமா, நீ இந்த சைடு வா. நீ சும்மா தான அங்க உட்கார்ந்து இருக்க. நானாச்சும் ஜன்னல் வழியா வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்." என்று இவன் கூற... இருவரும் இடத்தை மாற்றினார்கள்.

பிறகு ஐஸ்சிடம் திரும்பிய நிதீஷ்... "ஐஸ், இந்த சைடு வா. உன்கிட்ட நான் ஒரு ரகசியம் சொல்லணும்." என்று அவளைத் தூண்ட...

"ஐ! அப்படியா? உடனே வரேன்." என்று அவளும் எழுந்துச் செல்ல...

தாரா அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன்.

தாரா அவனைக் கண்டுகொள்ளாமல், ஃபோன்னை பார்த்துக் கொண்டிருந்தாள்.

'இவக்கிட்ட எப்படி பேச ஆரம்பிக்கலாம்?' என்று இவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே... இவனிடம் பேசினாள் தாரா.

"அர்ஜுன், இப்போ நாம எங்க டூர் போய்ட்டு இருக்கோம்?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

"அடிப்பாவி, இதுக்கூட தெரியாம தான் டூர் போகனும்'னு ஆசைப்பட்டையா டி?" என்று அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now