💙17💙

2.2K 117 13
                                    

"அம்மா, அம்மா... சீக்கிரம் வா. யாரு வந்துருக்கா'னு பாரு." என்று கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்தால் ப்ரியா.

சமையல் அறையில் வேலை செய்துக்கொண்டு இருந்த தனம்... "ஏன்டி இந்த கத்து கத்தற?... ஏதோ உன்ன கட்டிக்க போறவன் வந்த மாதிரி துள்ளற..." என்று கூறியவாறு வெளியே வந்தாள்.

'ஐயோ! இந்த அம்மா வேற தருண் சார் முன்னாடி நம்ம மானத்தை வாங்குதே.' என்று நினைத்தவள்... ஓடி சென்று தனத்தின் வாயை கைகளால் அடைத்தாள்.

தனத்தை பார்த்தா தருண்... "ஹலோ ஆண்ட்டி, எப்படி இருக்கீங்க? என்று புன்முறுவல் சிந்தினான்.

"நல்லா இருக்கேன் பா, நீ எப்படி இருக்க?" என்றாள் தனம் மலர்ந்த முகத்துடன்.

"நல்லா இருக்கேன் ஆண்ட்டி."

"யாரடி இந்த பையன்... பாக்க நல்லா லட்சணமா இருக்கான்." என்று மெதுவாக பிரியாவின் காதருகில் சென்று கேட்டார்.

"அம்மா, அது என் ஆபீஸ் ஹெட்... Mr. தருண் கிருஷ்ணா.
அப்பறம்...;
தருண் சார்..., இது அம்மா, இது என் அக்கா அப்பறம் இது எங்க வீட்டு செல்லம் ஷ்ரேயா குட்டி." என்று வீட்டில் உள்ளவர்களை தருணிற்கு அறிமுகம் செய்து வைத்தாள் பிரியா.

அனைவரையும் பார்த்து நட்போடு சிரித்த தருண்... "எல்லாரும் சீக்கிரமா தயார் ஆகுங்க... கோவிலுக்கு போகலாம்." என பட்டென்று சொன்னான்.

அவனை ஒருநிமிடம் புரியாமல் பார்த்தனர் அனைவரும்.

"என்ன இப்படி பாக்குறீங்க? ... பிரியா ஃபோன்'ல பேசுனதை நானும் கேட்டேன். அதான் உங்கள கூப்பிடுறேன்." என்றான் தோல்களை குலுக்கி.

"சார்." என்று பேசவந்த பிரியாவை தடுத்தவன்.

"அம்மா, நீங்க தான ஆசை பட்டீங்க. இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு...? எல்லாரும் ரெடி ஆகுங்க... நான் வீட்டுக்கு போய் கார் எடுத்துட்டு வறேன்." என்று அனைவரையும் பார்த்துச்சொன்னான்.

"உனக்கு எதுக்குப்பா சிரமம்." என்று தயங்கினாள் தனம்.

"அட இதுல என்ன இருக்கு மா... நம்ம பிரியா பர்த்டே இன்னைக்கு... இது கூட செய்யலேனா எப்படி?" என்று தருண் கூற...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now