💙15💙

2.4K 114 19
                                    

ஒரு நிமிடம் நாலாபக்கமும் அமைதி நிலவி இருந்தது... சரி நம்ம தாரா அப்படி பெருசா என்ன கேட்டுவிடப்போகிறாள் என்று நினைத்த மூவரும் தாராவின் தலையில் அடித்து சத்தியம் செய்துத்தந்தனர்.

"ஹே... நான் போயி இந்த சந்தோஷமான விஷயத்தை அர்ஜூன் அப்பாக்கிட்ட முதல்ல சொல்லறேன்." என்று ராஜ்குமாரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டார் ரகு.

"ராஜ், தாராவும் கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டா டா." என்றார் பெருமிதத்துடன்.

மறுமுனையில் ராஜ், மகிழ்ச்சி ததும்பும் குரலில்..."ரொம்ப சந்தோசம் டா. கடைசில நீயே எனக்கு சம்மந்தியா வருவ என்று நினைத்துக்கூட பார்க்கல."

"எல்லாம் ஆண்டவன் போட்ட முடிச்சு போல டா." என்று புன்னகைத்தார் ரகு.

"இருடா உன் தங்கச்சி உன்கிட்ட பேசனுமாம்." என்றவர் அர்ஜுனின் தாய் மைதிலியிடன் தொலைபேசியை கொடுத்தார்.

"ஹலோ அண்ணா, எப்படி இருக்கீங்க?" என்றாள் மைதிலி குதூகலமாக.

"நல்லார்கேன் மா. நீ எப்படி இருக்க?"

"நான் சூப்பரா இருக்கேன் அண்ணா. எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா? சொல்ல வார்த்தையே இல்ல. தாரா குட்டி இனிமே என்னோட மருமகள். இந்த திருமணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா." என்று கூறும்போதே மைதிலி கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

"அச்சோ, என்னமா இதுக்கெல்லம் நன்றி சொல்லற நீ? அர்ஜுன் எனக்கு மருமகனா வரதுக்கு நான் தான் குடுத்து வெச்சுருக்கணும் மா." என்றார் ரகு ஆனந்தம் பொங்கும் குரலில்.

"ரொம்ப மகிழ்ச்சி அண்ணா. என் மருமகள் தாராக்கிட்ட ஃபோன் குடுங்க... நான் பேசணும்."

"இதோ தருகிறேன்." என்று தாராவின் கைகளில் தொலைபேசியை தினித்தார் ரகு.

தொலைபேசியை காதில் வைத்த தாரா... "ஹலோ ஆன்டி..."

"தாரா குட்டி...இன்னும் என்ன ஆன்டி? அழகா அத்தை என்று உரிமையா கூப்பிடு டா..."

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now