💜26💜

2.3K 115 36
                                    

பிறகு, தாராவின் கையில் பால் சொம்பை கொடுத்து, அவள் அறை வரைச்சென்று வழி அனுப்பினார்கள் தோழிகள்.

'என்ன கன்றாவிடா இதெல்லாம்? இருக்கிற கடுப்புல இவங்க வேற பாடாய்படுத்தறாங்க.' என்று விறப்பாக அறையின் உள்ளே நுழைந்த தாராவை, அழுங்காமல் பின்னிருந்து கட்டியணைத்தான் அர்ஜுன்.

அந்த அதிர்ச்சியில் "ஆஆ" என்று சத்தமாக கத்தியவாரு, பால் செம்பை கையிலிருந்து கீழே நழுவவிட்டாள் தாரா.

அதை கீழே விழாமல் பிடித்து மேஜையின் மீது வைத்த அர்ஜுன், தாராவின் வாயை தன் கைகளால் அடைத்தான். "ஷூ! எதுக்குடி கத்தி கூப்பாடு போடற?"

"நீ எதுக்கு என்ன கட்டிப்பிடிச்ச? உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு என்ன டச் பண்ணறதுக்கு?" என்று அவள் புருவத்தை நெறித்து கேட்க...

அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை கையில் எடுத்துக்காட்டிய அர்ஜுன்...
"இதோ இந்த தாலி இருக்கே. இதை உன் கழுத்துல கட்டினது நான்தான். ஞாபகம் இருக்கு'ல? சோ, எனக்கு உன்மேல எல்லா உரிமையும் இருக்கு டி. நான் உன் ஹஸ்பெண்ட்." என்றான்.

"இதோ பாரு, நீ யாரா வேணா இருந்துட்டு போ. ஒரு கயி்ற என் கழுத்துல கட்டினா நீ சொல்லறதுக்கு எல்லாம் தலையாட்டுவேன்'னு நினைக்காத. நான் ஒன்னும் உன் அடிமை இல்ல." என்று வேகமாக நடந்தவளின் கைகளைப்பற்றி நிருத்தியவன்...

"நான் அப்படி சொல்லவே இல்லையே. நீ என்னோட முதலாளி அம்மா. நான் தான் இனிமேல் உனக்கு அடிமை." என்று புன்னகைத்த அர்ஜுன், அவளை நெருங்கி வந்தான்.

"நோ மீன்ஸ் நோ!!! அர்ஜுன்." என்று கண்கள் விரிய சத்தமாக சொன்னாள் தாரா.

"ஷப்பா!!! தல சொன்ன டயலாக்கை உன்ன மாதிரி ஒரு தருதல பேசுது. எல்லாம் விதி." என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒலித்தது அவன் தொலைப்பேசி.

'ச்ச! இந்த நேரத்துல இவன் எதுக்கு கால் பண்ணாறான்?' என்று மனதில் கடிந்தவன்...

"என் ஃபிரென்ட் கால் பண்ணிருக்கான். இரு ஃபோன் பேசிட்டு வறேன்"... என்று அந்த அறையை விட்டு, பால்கனி சென்றான் அர்ஜுன்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now