💜42💜

2.2K 111 24
                                    

"உனக்கு நான் இருந்தாலும் இல்லேனாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்." என்று தாராவிடம் நேராகச் சொன்னான் அர்ஜுன்.

அதைக் கேட்ட தாராவிற்கு கோபம் தான் வந்தது.

அர்ஜுன் அதற்கு மேல் எதுவும் பேசாமல், தன் வேலையைத் தொடர்ந்தான்.

தாராவிற்கு ஏனோ மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனைத்
தடுக்கவும் முடியவில்லை. வெளியேச் சொல்லவும் முடியவில்லை.

"ஆமா அர்ஜுன், எனக்கு வேலையே சரியா இருக்கும்." என்று போலியாக புன்னகைத்தவள், சிறிது நேரம் யோசித்துவிட்டு...

"நான் வேணும்னா உன்கூட ரெண்டு மாசம் பெங்களூர் வரவா? நீ தனியா அங்க என்னப் பண்ணுவ? நான் என் வேலையை விட்டு விடுகிறேன். திரும்ப நாம சென்னை வந்ததுக்கு அப்பறம் நான் வேலைத் தேடிக்கறேன்." என்று அவசர அவசரமாகப் பேசினாள் தாரா.

"தாரா, ரிலாக்ஸ் டி. எதுக்கு நீ இதெல்லாம் பண்ணற?" என்று ஒரு நிமிடம் நின்றவன், தாராவின் கைகளைப் பிடித்து மேலும் தொடர்ந்தான்.... 
"ஐ ஆம் சாரி டி. நான் அவர் மேல இருந்த கோபத்தை உன்கிட்ட காமிச்சிட்டேன். நான் இப்படிலாம் பேசியிருக்கக் கூடாது. நான் பேசுனது எதையும் மனசுல வெச்சுக்காத. மனசுக்குப் பிடிச்சவங்கக் கிட்டதான கோபத்தைக் காமிக்க முடியும். நான் போயிட்டு ரெண்டு மாசத்து'ல வந்திடுவேன். எனக்காக ஒரு ரெண்டு மாசம் வெயிட் பண்ண மாட்டியா?"

"உங்களுக்காக நான் ஏன் வெயிட் பண்ணும்? முடியாது." என்றாள் தாரா கோபமாக.

"அதான, நான் எங்கப் போன உனக்கு என்ன? நான் உனக்கு ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட் மட்டும் தான? நான் தான் உன்மேல லவ்'ல இருக்கேன். நீ என்னை திரும்பிக் கூட பார்க்கிறது இல்லை." என்று அவளை மேலும் கீழும் பார்த்தான் அர்ஜுன்.

"ஆமா, நீ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும், எப்போவுமே பெஸ்ட் ப்ரெண்ட். அதுல உனக்கு என்ன சந்தேகம்?" என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள் தாரா.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now