52

2K 95 22
                                    

"வந்துத் தொலைகிறேன்." என்று அர்ஜுனை நம்பி, அவனுடன் சென்றாள் தாரா.

"அர்ஜுன், எங்க டா ரூம் டெக்கரேட் பண்ணுறதுக்கு பூ எதுவும் எடுக்காம போயிட்டு இருக்கோம்?" என்று தாரா, கேள்வியாய் அர்ஜுனைப் பார்க்க...

"எல்லாம் ரெடியா இருக்குது டி. போனதும் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்." என்று அர்ஜுன் கண்ணடிக்க...

"உன் பேச்சே சரி இல்லையே அர்ஜுன்." என்று தாரா அவனை சந்தேகமாகப் பார்க்க...

"கட்டினப் புருஷனை நம்பாம கண்டவனையெல்லாம் மட்டும் நல்லா நம்பு டி நீ." என்று அவள் காதைப் பிடித்து தரதர'வென்று இழுத்துச் சென்றான் அர்ஜுன்.

"நான் எங்க டா கண்டவனை நம்பினேன்? வாய் இருந்தா என்ன வேணாலும் பேசுவையா?" என்று அர்ஜுனின் கையைத் தட்டிய தாரா... "நானே வரேன். காதைப் பிடித்து இழுக்காத எரும." என்று அவனுடன் நடந்தாள்.

தருண் அறையினுள் முதலில் தாரா நுழைய, அவள் பின்னே அந்த அறையினுள் நுழைந்த அர்ஜுன் கதவை நைசாகப் பூட்டினான்.

அதை கவனித்த தாரா... "இப்போ எதுக்காக கதவைப் பூட்டற? திறந்து விடு டா." என்று கதவைத் திறக்கப் போக...

"மச்! கம்முன்னு இரு டி. ரூம் ரெடி பண்ண வேண்டாமா?" என்றுக் கேட்டவாறு அவளை இறுக்கி அணைத்தான்.

அர்ஜுனின் செய்கையில் திடுக்கிட்ட தாரா... "டேய்! என்னை விடு டா. இது தான் நீ ரூம் ரெடிப் பண்ணற லட்சணமா?"

"ஆமா." என்று அர்ஜுன் இளிக்க...

"முதல்'ல என் கால்'ல விழு டா. நான் உன்மேல கோவமா இருக்கேன்." என்று அர்ஜுனின் கட்டுக்குள் இருந்து வெளி வரப் போராடிக் கொண்டிருந்தாள் தாரா.

"என்னடி ரொம்பத் துள்ளற? என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது டி." என்று தாராவின் இடையைப் பிடித்து இறுக்கினான் அர்ஜுன்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now