💙41💙

2.2K 106 32
                                    

அதைக் கையில் எடுத்த அர்ஜுன்... "இதோ பாரு, உன் கம்மல் கிடைசிடுச்சு. ஆனா, இதை உனக்குக் குடுக்க மாட்டேன்." என்று கம்மலை தனக்கு பின்னால் மறைத்தான்.

"ஏன்டா, இப்படிப் பண்ணற? எனக்கு ஹாஸ்பிடல் போக நேரமாச்சு. இன்னைக்கு டீன்(Dean) வேற என்னை ஒன்பது மணிக்குப் பார்க்கணும்'னு சொல்லி இருக்காரு. குடு டா. பிளீஸ்" என்று தாரா அவனை அவசரப் படுத்த...

"முடியாது டி. நீ என்னை ரொம்ப தான் அதிகாரம் பண்ணற." என்று அர்ஜுன், அதட்ட...

அவனிடம் இருந்து அதைப் பிடுங்க கடும் முயற்சி செய்தாள் தாரா.

"உன்னால என்னப் பண்ணாலும் என்கிட்ட இருந்து இதை வாங்க முடியாது. பேசாம வந்து என் கால்'ல விழு. நானே கொடுக்கறேன்." என்றான் அர்ஜுன் திமிராக.

"வேற எதாவது சொல்லு டா. என்னால உன் கால்'ல எல்லாம் விழ முடியாது." என்று அவனை முறைத்தாள் தாரா.

"சரி, உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுக்கிறேன். ஒன்னா என் கால்ல விழு, இல்லேனா என் கன்னத்தில் ஒரு முத்தம் குடு." என்று வம்பிழுக்கும் படி சொன்னான் அர்ஜுன்.

"இதுக்கு நான் உன் கால்லயே விழுகிறேன்." என்று கூறி அவன் அருகில் சென்ற தாரா...
'பேசாம கன்னத்தில் ஒன்னு தந்துட்டுப் போயிடலாம். தப்பித்தவறிக் கூட இவன் கால்'ல நாம விழுகக் கூடாது.' என்று திடீரென்று எண்ணி, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதிக்க அர்ஜுன் அருகே வந்தாள்...

'எப்படியும் இவ நம்ம கால்'ல தான் விழுவா. இவளாவது முத்தம் தரதாவது.' என்ற நம்பிக்கையில் இருந்த அர்ஜுன், டக்கென்று தாராவை திரும்பிப் பார்க்க... எதிர் பாராத விதமாக முத்தம் அவன் உதட்டில் விழுந்தது.

ஒரு நிமிடம் நடந்தது புரியாமல் தடுமாறிப் போனான் அர்ஜுன்.

தாராவுக்கும் அதே நிலமை தான்.
"அய்யய்யோ!" என்று முகத்தை மூடிக் கொண்டு, ஓரக் கண்ணால் அர்ஜுனைப் பார்த்தாள்.

அவளைப் புரியாமல்  கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்தான் அர்ஜுன்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now